உலக செய்திகள்
Israel accidentally shoots 3 hostages in Gaza | காசாவில் 3 பிணை கைதிகளை தவறுதலாக சுட்டுக்கொன்றது இஸ்ரேல்
ஜெருசலேம்: காசாவில் அச்சுறுத்தல்காரர்கள் என நினைத்து 3 பிணை கைதிகளை இஸ்ரேல் ராணுவம் கொன்று விட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவம் விசாரணை நடப்பதாகவும் கூறியுள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸின் முக்கிய இடமாக கருதப்படும் ஷெஜையா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது. இந்த இடத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினற்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. … Read more
515 injured in train collision in China due to snowfall | சீனாவில் பனிப்பொழிவால் ரயில்கள் மோதி 515 பேர் காயம்
பீஜிங்: சீனாவில், கடும் பனிப்பொழிவு காரணமாக இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில், 515 பேர் படுகாயம் அடைந்தனர். 102 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நம் அண்டை நாடான சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கடும் பனி நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்கு இரவு நேரங்களில், மைனஸ் 11 டிகிரி செல்ஷியசுக்கும் குறைவாக பதிவாகிறது. இதனால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் சீனாவின் சங்பிங் … Read more
ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட பணய கைதிகளில் 3 பேர் பிணமாக மீட்பு – இஸ்ரேல் ராணுவம்
ஜெருசலேம், இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி காசா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் … Read more
Attack on police station leaves 11 dead in Iran | போலீஸ் ஸ்டேஷனில் தாக்குதல் ஈரானில் 11 பேர் பரிதாப பலி
துபாய்: ஈரானில் போலீஸ் ஸ்டேஷன் மீது, பிரிவினைவாதிகள் நடத்திய தாக்குதலில், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்காசிய நாடான ஈரானின் சிஸ்டன் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தின் ராஷ்க் நகரில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் மீது பிரிவினைவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள், நேற்று திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் என, 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். பதிலுக்கு போலீசார் நடத்திய தாக்குதலில், … Read more
காவல்துறை தலைமையகத்தை குறிவைத்த பயங்கரவாதிகள்.. பாகிஸ்தானில் 3 போலீஸ்காரர்கள் பலி
பெஷாவர்: பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினரையும் ராணுவ கட்டமைப்புகளையும் குறிவைத்து பயங்கரவாதிகள் மற்றும் கிளர்ச்சி குழுவினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். இதில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தின் டேங்க் மாவட்டத்தில் உள்ள காவல்துறை தலைமையகத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து போலீசாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 போலீஸ்காரர்கள் பலியாகினர். பயங்கரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை … Read more
சீனா: 2 ரெயில்கள் மோதி விபத்து – 500 பேர் படுகாயம்
பீஜிங், சீனாவின் பீஜிங் மாகாணம் ஷங்பிங் நகரில் இருந்து பயணிகள் ரெயில் இன்று புறப்பட்டது. தண்டவாளத்தில் பனி படர்ந்திருந்ததால் தானியங்கி பிரேக்கிங் அமைப்பால் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. அப்போது, அதே தண்டவாளத்தில் மற்றொரு பயணிகள் ரெயில் வந்துள்ளது. அந்த ரெயில் நின்றுகொண்டிருந்த ரெயில் மீது வேகமாக மோதியது. தண்டவாளத்தில் பனி படந்திருந்ததால் பின்னால் வந்த ரெயிலில் பிரேக் பிடித்தும் ரெயில் சறுக்கிக்கொண்டு நின்றுகொண்டிருந்த ரெயில் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 2 ரெயிலிலும் பயணித்த 500க்கும் … Read more
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு
இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9.13 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குவெட்டாவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ஆனாலும் இந்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு … Read more