நிலவில் அணு உலையை நிறுவ திட்டமிடும் ரஷ்யா சீனா..!!
மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நிலவில் அணு உலையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை ரஷ்யாவும் சீனாவும் ஆலோசித்து வருவதாக ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நிலவில் அணு உலையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை ரஷ்யாவும் சீனாவும் ஆலோசித்து வருவதாக ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது.
புதுடெல்லி: ரஷ்யாவுக்கு சுற்றுலா சென்ற தாங்கள் ஏமாற்றப்பட்டு ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, உக்ரைனுக்கு எதிராக போரிட நிர்ப்பந்திக்கப்படுவதாக தெரிவித்துள்ள பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த 7 இளைஞர்கள், தங்களுக்கு உதவுமாறு அதிகாரிகளுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ககன்தீப் சிங் (24), லவ்பரீத் சிங் (24), நரேன் சிங் (22), குர்பிரீத் சிங் (21), குர்பிரீத் சிங் (23), ஹர்ஷ் குமார் (20), மற்றும் அபிஷேக் குமார் (21) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்து பேர் … Read more
புதுடெல்லி: பாகிஸ்தானின் 24-வது பிரதமராக பொறுப்பேற்றள்ள ஷெபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார். பாகிஸ்தான் முஸ்லிம் – நவாஸ் கட்சித் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை அவர் பதவி ஏற்றார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் ‘‘பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீபுக்கு வாழ்த்துகள்’’ என கூறப்பட்டுள்ளது. முன்னதாக தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக … Read more
நியூயார்க்: உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தார். இந்நிலையில், நேற்று எலான் மஸ்கைப் பின்னுக்குத் தள்ளி அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் முதல் இடம் பிடித்தார். ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் நேற்றைய மதிப்பீட்டின்படி, எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு 198 பில்லியன் டாலராக (ரூ.16.43 லட்சம் கோடி) குறைந்துள்ள நிலையில் ஜெஃப் பிசோஸின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலராக (ரூ.16.60 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. முன்பு, எலான் … Read more
புதுடெல்லி: இஸ்ரேலுக்கும் காசாவின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த அக்டோர் 7-ம் தேதி தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் லெபனானில் இருந்து நேற்று முன்தினம் காலையில் ஏவப்பட்ட ஓர் ஏவுகணை, இஸ்ரேலின் வடக்கு எல்லையான மார்கலியோட் அருகில் உள்ள பழத்தோட்டத்தை தாக்கியது. இதில் அங்கு வேலை பார்த்து வந்த கேரளாவின் கொல்லம் … Read more
லாஸ் ஏஞ்சல்ஸ், உலகம் முழுவதும் திரை துறையை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய மற்றும் கவுரவம் அளிக்கும் விருதுகளாக ஆஸ்கார் விருதுகள் அறியப்படுகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் 96-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வருகிற 10-ந்தேதி நடைபெற திட்டமிடப்பட்டு உள்ள இந்த நிகழ்ச்சியை 4-வது முறையாக காமெடி நடிகரான ஜிம்மி கிம்மெல் வழங்க இருக்கிறார். அமெரிக்காவில் ஞாயிற்று கிழமை இரவில் சிவப்பு கம்பள … Read more
ஜெருசலேம், இஸ்ரேலில் பயங்கரவாதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில், தோட்டத் தொழிலில் ஈடுபட்டிருந்த இந்திய தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்; இருவர் காயமடைந்தனர். பயங்கரவாத அமைப்பு மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, கடந்தாண்டு அக்டோபரில் இருந்து போர் நடந்து வருகிறது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து, அண்டை நாடான லெபனானில் இருந்து இயங்கி வரும் ஹெஸ்பொலா பயங்கரவாத அமைப்பு, அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை நடந்துள்ள … Read more
தெற்கு இஸ்ரேலில் லெபனான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் தெற்கு பகுதியைச் சேர்ந்த கலிலீ மாகாணத்தில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. அப்பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த பலர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஏவுகணைத் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த பாட்னிபின் மேக்ஸ்வெல் என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வடக்கு இஸ்ரேல் மற்றும் தெற்கு இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. … Read more
கீவ், ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு ரஷியா போர் தொடுத்து வருகிறது. கருங்கடல் பகுதியில் ரஷியாவின் ரோந்து கப்பல் நிறுத்தப்பட்டு உக்ரைனுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தது. இந்நிலையில், அதிபர் புதினின் புதிய ரோந்து கப்பலை உக்ரைன் தாக்கி அழித்து உள்ளது. இதுபற்றி உக்ரைன் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தியில், ரஷியாவின் மற்றொரு கப்பல், நீர்மூழ்கி … Read more