பூமியை விட இரண்டு மடங்கு பெரியது..நீர் இருக்கும் கிரகத்தை கண்டுபிடித்தது நாசா

வாஷிங்டன், பூமியில் இருந்து 97 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. இதனை நாசாவின் ஹப்பிள் ஸ்பேஸ் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. பூமியை விட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் ஜிஜே9827டி என்ற இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறுகள் அதிகமாக இருப்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் நீர் மூலக்கூறுகளோடு நீராவியும் கலந்து இருப்பதால் உறைந்த பனிக்கட்டிகள் அதிகமாக இருக்க … Read more

விமானத்தின் அவசரகால கதவை திறந்து இறக்கை மீது நடந்த பயணி.. சக பயணிகள் ஆதரவு: காரணம் இதுதான்..!

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ சிட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் கவுதமாலா நாட்டிற்கு ஏரோமெக்சிகோ பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. ஆனால் பயணிகள் ஏறி அமர்ந்து நீண்ட நேரம் ஆகியும் புறப்படவில்லை. பராமரிப்பு பணி தொடர்பான எச்சரிக்கை காரணமாக புறப்படுவதில் தாமதம் ஆனது. இந்நிலையில், விமானத்தில் இருந்த பயணிகளில் ஒருவர், அவசரகால கதவை திறந்துகொண்டு வெளியேறி, விமானத்தின் இறக்கையில் நடந்து சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை விமான நிலைய … Read more

துருக்கியில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5 ஆக பதிவு

அங்காரா, துருக்கியில் இன்று காலை 5.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து 10 கிமீ ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களின் விவரங்கள் வெளியாகாத நிலையில், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக துருக்கியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் சுமார் 50 … Read more

உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல் – மியாமி துறைமுகத்தில் இருந்து முதல் பயணத்தை தொடங்கியது

வாஷிங்டன், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பிரபல ‘ராயல் கரீபியன்’ கப்பல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட பயணக் கப்பல் இன்று மியாமி துறைமுகத்தில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி மற்றும் இண்டர் மியாமி அணியினர் மூலம் இந்த கப்பலுக்கு ‘ஐகான் ஆப் தி சீஸ்’ (Icon of the Seas) என்று அதிகாரபூர்வமாக பெயர் சூட்டப்பட்டது. உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல் என்று கூறப்படும் இந்த ‘ஐகான் ஆப் தி சீஸ்’ … Read more

அடேங்கப்பா… உலகின் பணக்கார குடும்பம்… ரூ.4000 கோடி மதிப்பிலான வீடு… 700 சொகுசு கார்கள்…!!

World Richest Family: 700 சொகுசு கார்கள் மற்றும் 8 தனியார் ஜெட் விமானங்களுடன் ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் மதிப்புள்ள வீடு என உலக பணக்கார குடும்பத்தை பற்றி இன்று அறிந்து கொள்ளலாம். 

கவுதமாலா நாட்டில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

புதுடெல்லி: மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் வெள்ளிக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது. மத்திய அமெரிக்காவில் உள்ள நாடான கவுதமாலாவில் வெள்ளிக்கிழமை இரவு 11:52 மணிக்கு, டாக்சிஸ்கோ நகரத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் (நான்கு மைல்) தொலைவில் 108 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய நகரமான ஆன்டிகுவா கவுதமாலாவிலும் இந்த நிலநடுக்கம் … Read more

Buy a house; take your wife home: Controversial ad in China | “வீட்டு மனை வாங்குங்க; மனைவியை தூக்கிட்டு போங்க”: சீனாவில் சர்ச்சை விளம்பரம்

பீஜிங்: வீடு வாங்கினால் மனைவி இலவசம் என விளம்பரம் வெளியிட்ட சீனாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சீன அரசு ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது. சீனாவின் தியான்ஜினில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் ” வீடு வாங்குங்கள், மனைவியை இலவசமாக பெறுங்கள்” என்ற விளம்பரத்தை ஒளிபரப்பியது. இந்த விளம்பரத்தை பார்க்கும் மக்கள், வீடுகளை வாங்கி தரும்படி தங்களை தேடி வருவார்கள் என அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் நினைத்து காத்திருந்தது. விளம்பரத்தை கண்ட பெண்கள் … Read more

உணவுப் பொருட்களுக்காக ஏங்கும் மக்கள்! நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு!

Inflation In Pakistan: தேர்தலுக்கு முன்பாக பணவீக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது! பாகிஸ்தானில் மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளுக்கு சம்பாதிப்பதும் கடினமாகி வருகிறது…

First execution by nitrogen gas in the United States | நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை: அமெரிக்காவில் முதல்முறையாக நிறைவேற்றம்

அட்மோர்: அமெரிக்காவில் முதன்முறையாக கொலை குற்றவாளி ஒருவருக்கு நைட்ரஜன் வாயுவை செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் சென்னட் என்பவர், தன் மனைவி எலிசபெத் பெயரில் உள்ள காப்பீட்டு தொகையை பெற அவரை கொல்ல திட்டமிட்டார். மூச்சுத்திணறல் இதற்காக கென்னத் யூஜின் ஸ்மித் மற்றும் ஜான் பார்க்கர் என்ற இருவரை ஏற்பாடு செய்தார். திட்டமிட்டபடி, இவர்கள் இருவரும் எலிசபெத்தை அடித்துக் கொன்றனர். இந்த சம்பவம் கடந்த 1988ல் நடந்தது. அடுத்த சில மாதங்களிலேயே சார்லஸ் … Read more