சர்வதேச அளவில் உயர் பதவிகளில் தமிழர்கள்! சிங்கப்பூரின் புதிய அதிபராகிறார் தர்மன் சண்முகரத்தினம்

Tharman Shanmugaratnam: பிரிட்டனுக்குப் பிறகு, அரசின் உயர் பதவிகளில் ஒன்றை புலம்பெயர்ந்த இந்தியர்கள் அலங்கரிக்கின்றனர் என்பதும், அவர்கள் இருவருமே தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பதும் சிறப்பு

தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் அதிபராகிறார் – முழு விவரம்

சிங்கப்பூர்: தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் அதிபராக பதவியேற்க உள்ளார். சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் வரும் 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22-ம்தேதி நடைபெற்றது. தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் (66), இங் கொக் சொங் (76), டான் கின் லியான் (75) ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மூன்று வேட்பாளர்களும் மக்களிடையே தீவிர … Read more

சிங்கப்பூரின் 9வது அதிபரானார் தமிழரான தர்மன் சண்முகரத்னம் – மும்முனை போட்டியில் வெற்றி

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூர் அரசின் முன்னாள் துணைப் பிரதமராக இருந்த தர்மன் சண்முகரத்தினம் அதிபர் தேர்தலில் வென்றதன் மூலம் அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார். அதிபர் தேர்தலில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று சிங்கப்பூரின் 9வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தன்னுடன் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களையும் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார். சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் இந்த மாதம் 13-ம் … Read more

சிங்கப்பூர் சிம்மாசனத்தில் ஏறிய தமிழர்.. அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்னம் மாபெரும் வெற்றி!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் மாபெரும் வெற்றி பெற்று புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூர் அதிபராக தமிழர் ஒருவர் வெற்றி பெற்றதை அந்நாட்டில் வசிக்கும் தமிழர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்து வந்த ஹலிமா யாகூப்பின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு, சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1-ம் தேதி (இன்று) நடைபெறும் என சில மாதங்களுக்கு முன்பே … Read more

சிங்கப்பூரில் இன்று அதிபர் தேர்தல்: இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மனுக்கு வெற்றி வாய்ப்பு..!

சிங்கப்பூர், சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் 13-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் மீண்டும் போட்டியிட போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அறிவித்துவிட்டார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கேபினட் மந்திரி பதவியில் இருந்த தர்மன் சண்முக ரத்னம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த … Read more

'நான் உயிரோடு இருக்கிறேனா? இறந்துவிட்டேனா? என ஆலோசனை நடத்துபவர்களுக்கு…' – 'வாக்னர்' தலைவர் பிரிகோஜின் வீடியோவால் பரபரப்பு

மாஸ்கோ, ரஷியாவில் வாக்னர் குழு என்ற தனியார் ராணுவ அமைப்பு செயல்பட்டு வருகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய ராணுவத்துடன் இணைந்து இவர்கள் முக்கிய பங்காற்றினர். இந்த வாக்னர் குழுவின் தலைவராக யெவ்ஜெனி பிரிகோஜின் இருந்தார். இவர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். ஆனால் இவர் திடீரென அதிபர் புதினுக்கு எதிராக புரட்சியில் இறங்கினார். அப்போது ரஷியாவின் தெற்கு பகுதியில் உள்ள ரோஸ்டோவ்-ஆன்-டான் அருகே உள்ள ராணுவ தலைமையகத்தை வாக்னர் குழு கைப்பற்றியது. … Read more

சிங்கப்பூர் அதிபராகும் தமிழர்? அதிக வாக்குகளுடன் முந்தும் தர்மன் சண்முகரத்தினம்!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில் இன்று இரவு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சிங்கப்பூர்சிங்கப்பூர் அதிபராக உள்ள ஹலிமா யாகூப்பின் பதவி காலம் வரும் 13 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அதிபர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 1ஆம் தேதியான இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மலாய் சமூக மக்கள் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட்டனர்.​ ஆகஸ்ட்டில் விழுந்த சரியான அடி… … Read more

ஜெட் ஸ்கீயிங் செய்தபோது எல்லை தாண்டிய 2 பேர் சுட்டுக் கொலை: அல்ஜீரிய கடலோர காவல் படை நடவடிக்கை

மத்திய தரைக்கடல் நாடான மொராக்கோவின் சைடியாவில் உள்ள கடற்பகுதியில், ஜெட் ஸ்கீயிங் எனப்படும் நீர் சாகச விளையாட்டில் ஈடுபட்ட 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதியில் உள்ள கடற்கரை ரிசாட்டில் இருந்து புறப்பட்டு ஜெட் ஸ்கீயிங் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் வழிதவறி அண்டைநாடான அல்ஜீரிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளனர். அப்போது அவர்களை நோக்கி அல்ஜீரிய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில் பிலால் கிஸ்ஸி மற்றும் அப்தெலாலி மெர்சவுர் ஆகியோர் உயிரிழந்தனர். ஸ்மெயில் … Read more

குடிக்காதீங்க… இளம்பெண் பலாத்கார விவகாரத்தில் இத்தாலி பிரதமரின் கணவர் சர்ச்சை பேச்சு

ரோம், இத்தாலியின் பிரதமராக இருப்பவர் ஜார்ஜியா மெலோனி. கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது கணவர் ஆண்டிரியா கியாம்புருனோ. இவர் தொலைக்காட்சியில், டெய்லி டைரி என்ற பெயரிலான நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதில், அவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிசிலி நகரில் பாலர்மோ பகுதியில் இளம்பெண் ஒருவர் கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டது அந்நாட்டினர் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், கியாம்புருனோ அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, நீங்கள் நடனம் … Read more