நிலவுக்கு அருகில் சறுக்கிய ரஷ்யா… லூனா 25 நாளை தரையிறங்குவதில் சிக்கல்!

ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யா திடீரென லூனா 25 விண்கலத்தை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பியது. இந்தியா சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பியதும் அதனுடன் போட்டி போட்டுக் கொண்ட ரஷ்யாவும் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் விஞ்ஞானிகள் இதில் போட்டி என்று எதுவும் இல்லை குறிப்பிட்ட காலத்தில்தான் நிலவின் தென் துருவத்திற்கு விண்கலத்தை அனுப்ப முடியும் என்பதால் ரஷ்யா கடந்த 11 ஆம் … Read more

இம்ரானை கொல்ல சதி: மனைவி புஷ்ரா கதறல்| Conspiracy to kill Imran: Wife Bushra screams

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விஷம் கொடுத்து கொல்ல சதி நடப்பதாக அவரது மனைவி புஷ்ரா பீபி கூறியுள்ளார். அரசு கருவூல பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்த வழக்கில் இஸ்லாமாபாத் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து இம்ரான் கானை கைது செய்த போலீசார் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைத்து உள்ளனர். இந்நிலையில் பஞ்சாப் மாகாண உள்துறை … Read more

உக்ரைனில் ரஷிய வான்தாக்குதலில் 7 பேர் பலி – 100 பேர் படுகாயம்

கீவ், உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் போர் 1½ ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷிய படைகள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் உக்ரைனின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள செர்னிஹிவ் நகரில் ரஷிய படைகள் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தின. அந்த நகரில் உள்ள ஒரு தியேட்டர், பல்கலைக்கழகம் உள்ளிட்ட பொது உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 6 வயது சிறுமி உள்பட … Read more

சீனாவில் அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி! கடனை திருப்பிச் செலுத்த முடியாதது ஏன்?

China Economy: சீனா உடனடி நிதி நெருக்கடியை நோக்கி செல்கிறதா? மற்றொரு பெரிய நிறுவனம் கடன் திருப்பிச் செலுத்துவதில் தவறிவிட்டது

பரவுது புது கொரோனா: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை| New Corona is spreading: World Health Organization warning

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சீனாவில் 2019 இறுதியில் துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஸ்தம்பிக்க வைத்தது. இதன் காரணமாக உலகளவில் 69 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். 69 லட்சம் பேர் உயிரிழந்தனர். பின் துவக்கத்தில் ஏற்பட்ட கொரோனாவில் இருந்து பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான் உள்ளிட்ட பல்வேறு வகை உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகி உலகளவில் … Read more

அமெரிக்காவில் ரூ.174 கோடி மோசடி செய்த இந்தியருக்கு 27 ஆண்டுகள் சிறை

இந்திய வம்சாவளியான மினாள் படேல் (வயது 44) அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் லேப் சொல்யூசன்ஸ் என்ற மருத்துவ பரிசோதனை ஆய்வகத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனமானது இடைத்தரகர்கள், கால்சென்டர் மற்றும் டெலிமெடிசின் நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவ காப்பீட்டு பயனாளிகளை குறிவைத்து தொடர்பு கொண்டனர். அவர்கள் கேன்சர், மரபணு போன்ற பரிசோதனைக்கு ஒப்புக்கொண்ட பிறகு டெலிமெடிசின் நிறுவனங்களிடம் இருந்து பெறும் மருத்துவ பரிசோதனை முடிவுகளில் டாக்டர்களின் கையெழுத்தை பெற அவர்களுக்கு லஞ்சம் கொடுத்துள்ளனர். அந்தவகையில் கடந்த 2016-2019 காலகட்டத்தில் … Read more

இங்கிலாந்தில் 7 குழந்தைகளை கொன்ற செவிலியர் – இந்திய வம்சாவளி மருத்துவர் அளித்த தகவலால் சிக்கினார்

லண்டன்: வடக்கு இங்கிலாந்து மருத்துவமனையில் 7 பச்சிளம் குழந்தைகளை கொன்ற செவிலியரை போலீஸில் சிக்க வைக்க, இந்திய வம்சாவளி மருத்துவர் உதவியுள்ளார். வடக்கு இங்கிலாந்தின் செஸ்டர் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 2015-ம்ஆண்டு ஜூன் மாதத்தில் 3 பச்சிளம் குழந்தைகள் மர்மமான முறையில் அடுத்தடுத்து இறந்தன. இது அங்கு பணியாற்றிய இந்திய வம்சாவளி மருத்துவர் டாக்டர் ரவி ஜெயராமுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. குழந்தைகள் வார்டில் பணியாற்றும் லூசி லெட்பி என்ற செவிலியர் மீது அவருக்கு சந்தேகம் … Read more

உக்ரைனுக்கு எப்-16 விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல்

உக்ரைன்-ரஷியா போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷிய தயாரிப்பான மிக்-29, சுகோய் ஜெட் போன்ற பழைய விமானங்களையே உக்ரைன் நம்பி உள்ளது. எனவே தனது போர்த்திறனை அதிகரிப்பதற்காக எப்-16 என்ற அதிநவீன போர் விமானங்களை வாங்க உக்ரைன் முடிவு செய்தது. இதனால் நெதர்லாந்து மற்றும் டென்மார்க் நாடுகளிடம் உக்ரைன் அதிகாரிகள் நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் அதற்கு அமெரிக்காவின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்த எப்-16 போர் விமானங்கள் … Read more

சுற்றுப்பாதையை குறைப்பதில் திடீர் சிக்கல்: திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்குமா ரஷியாவின் லூனா-25 விண்கலம்.?

மாஸ்கோ, நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. வரும் 23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் மென்மையான முறையில் சந்திரயான்-3 தரையிறங்க உள்ளது. இந்தியாவுக்கு போட்டியாக ரஷியாவும் நிலவை ஆய்வு செய்ய விண்கலத்தை செலுத்தி உள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு, லூனா-24 என்ற விண்கலத்தை ரஷியா செலுத்தியது. அதன்பிறகு, 47 ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஆய்வு செய்ய முனைந்துள்ளது. கடந்த … Read more

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் – 5 பேர் பலி

கீவ், உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 542வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, ரஷிய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் நேற்று அதிகாலை டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோனை மாஸ்கோவில் நிறுவப்பட்டுள்ள வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது. ஆனாலும், டிரோன் மாஸ்கோவில் உள்ள வர்த்தக மையம் மீது மோதியது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என ரஷியா தெரிவித்தது. இந்நிலையில், டிரோன் தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைன் மீது … Read more