உக்ரைனுக்கு எப்-16 விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல்

உக்ரைன்-ரஷியா போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷிய தயாரிப்பான மிக்-29, சுகோய் ஜெட் போன்ற பழைய விமானங்களையே உக்ரைன் நம்பி உள்ளது. எனவே தனது போர்த்திறனை அதிகரிப்பதற்காக எப்-16 என்ற அதிநவீன போர் விமானங்களை வாங்க உக்ரைன் முடிவு செய்தது. இதனால் நெதர்லாந்து மற்றும் டென்மார்க் நாடுகளிடம் உக்ரைன் அதிகாரிகள் நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் அதற்கு அமெரிக்காவின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்த எப்-16 போர் விமானங்கள் … Read more

சுற்றுப்பாதையை குறைப்பதில் திடீர் சிக்கல்: திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்குமா ரஷியாவின் லூனா-25 விண்கலம்.?

மாஸ்கோ, நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. வரும் 23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் மென்மையான முறையில் சந்திரயான்-3 தரையிறங்க உள்ளது. இந்தியாவுக்கு போட்டியாக ரஷியாவும் நிலவை ஆய்வு செய்ய விண்கலத்தை செலுத்தி உள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு, லூனா-24 என்ற விண்கலத்தை ரஷியா செலுத்தியது. அதன்பிறகு, 47 ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஆய்வு செய்ய முனைந்துள்ளது. கடந்த … Read more

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் – 5 பேர் பலி

கீவ், உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 542வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, ரஷிய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் நேற்று அதிகாலை டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோனை மாஸ்கோவில் நிறுவப்பட்டுள்ள வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது. ஆனாலும், டிரோன் மாஸ்கோவில் உள்ள வர்த்தக மையம் மீது மோதியது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என ரஷியா தெரிவித்தது. இந்நிலையில், டிரோன் தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைன் மீது … Read more

கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு – சிக்கலில் ரஷ்யாவின் லூனா-25 விண்கலம்?

மாஸ்கோ: இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலத்துக்கு முன்னதாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என்று சொல்லப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. நாளை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க இருந்த நிலையில் கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் இதுதொடர்பாக, “லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப்பாதையில் செலுத்தும் வேலையில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. இந்த செயல்பாட்டின்போது தானியங்கு நிலையத்தில் அசாதாரண சூழல் எழுந்ததால், … Read more

தைவானை மிரட்ட சீனா போர் பயிற்சி| China exercises war to intimidate Taiwan

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்-அமெரிக்காவுக்கு, தைவான் துணை அதிபர் பயணம் மேற்கொண்டதையடுத்து, அந்த நாட்டை எச்சரிக்கும் வகையில், சீனப் படைகள் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. நம் அண்டை நாடான சீனாவில், 1949ல் நடந்த உள்நாட்டு கலவரத்தைத் தொடர்ந்து, தைவான் தனி நாடாகப் பிரிந்தது. ஆனால், தைவானை தன் ஆட்சிக்குட்பட்ட ஒரு பகுதி என்றே சீனா தொடர்ந்து கூறி வருகிறது. மற்ற நாடுகளுடன் தைவான் துாதரக உறவுகள் வைப்பதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், … Read more

கொசு ஒழிப்பு தினம்| Mosquito Eradication Day

உருவத்தில் சிறியதாக இருக்கும் கொசு மனிதர்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மலேரியா, டெங்கு உள்பட பல நோய்களுக்கு கொசுக்களே காரணம். ‘பிளாஸ்மோடியம்’ ஒட்டுண்ணி ‘அனாபெலஸ்’ பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக் கொள்கிறது. இது ஒருவரை கடிப்பதன் மூலம் தான் மலேரியா பரவுகிறது என்ற அறிவியல் உண்மையை பிரிட்டன் டாக்டர் ரொனால்டு ரோஸ் 1897 ஆக., 20ல் கண்டுபிடித்தார். இந்நாள் ‘உலக கொசு ஒழிப்பு தினமாக’ கடைபிடிக்கப்படுகிறது. இவரது இந்த … Read more

"குட்பை சீம்ஸ்".. உலகையே மகிழ்வித்த சீம்ஸ் நாய் விடைபெற்றது.. சோகத்தில் மூழ்கிய சோஷியல் மீடியா!

ஹாங்காங்: கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக சமூக வலைதளங்கள் மூலமாக அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்து வந்த சீம்ஸ் நாய், உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருப்பவர்கள் அனைவருக்குமே சீம்ஸ் நாயை தெரிந்திருக்கும். சீம்ஸின் புகைப்படத்தை வைத்து வலம் வந்த மீம்ஸ்கள் அனைவரின் வயிறையும் புண்ணாக்கி இருக்கும். அந்த அளவுக்கு சமூக வலைதளங்களில் அனைவருக்கும் செல்லப் பிராணியாக வலம் வந்தது. மற்ற நாய்களை போல அல்லாமல் சீம்ஸின் முகம் சற்று உருண்டையாகவும், வாய் … Read more

புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு| Discovery of a new type of coronavirus

பெய்ஜிங்: புதிய வகை வீரியம் மிக்க கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தற்போது தடுப்பூசியால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் புதிய வகை கொரோனா ஒன்று தற்போது கண்டறியப்பட்டு இருக்கிறது.அமெரிக்கா, டென்மார்க், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ள இந்த வைரசுக்கு பிஏ.2.86 என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த வைரசின் வீரியம் மற்றும் பரவலை கண்காணித்து வருவதாக … Read more

விடைபெற்றார் சீம்ஸ்… மீம்ஸ் மூலம் மக்களை கவர்ந்த நாய்!

Cheems Dog Died: சமூக வலைதளங்களில் சீம்ஸ் என்ற பெயரில் உலகம் முழுவதும் புகழ்பெற்ற நாய் நேற்று உயிரிழந்ததாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்ரான் கான் உயிருக்கு ஆபத்து – உணவுல விஷம் வச்சிருவாங்க.. பகீர் கிளப்பிய மனைவி!

சிறையில் இம்ரான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவருக்கு வீட்டு உணவு வழங்க வேண்டுமெனவும் அவரது மனைவி பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் தெஹ்ரிக் இ சாஹிப் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். 2018ஆம் ஆண்டு மிகப்பெரிய எழுச்சியுடன் ஆட்சியைப் பிடித்த இம்ரான் கான், 2022ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் ஆட்சியை இழந்தார். அதன்பிறக இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் … Read more