ரஷ்யா வசமிருந்த 7 கிராமங்களை கைப்பற்றியதாக உக்ரைன் அறிவிப்பு..!

உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பல கிராமங்களை கைப்பற்றிவிட்டதாக உக்ரைனும் ரஷ்யாவும் மாறி மாறி அறிவித்துக் கொண்டிருக்கின்றன. சபோரிஜியா, டொனெட்ஸ்க் பகுதிகளில் ரஷ்யப் படைகள் வசம் இருந்த 7 கிராமங்களை கைப்பற்றிவிட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்களைக் கொண்டு எதிர்தாக்குதல் நடத்தி 90 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்தை கைப்பற்றி, ரஷ்ய படைகளை விரட்டி அடித்ததாகவும் உக்ரைன் கூறியுள்ளது. ஆனால் உக்ரைன் கைப்பற்றியதாக கூறும் பகுதிகளில், உக்ரைனின் தாக்குதலை முறியடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது … Read more

ரஷ்யாவிடம் இருந்து 'மலிவான எண்ணெய்' வாங்கிய பாகிஸ்தான்… ஆனாலும் சோகத்தில் அரசு!

பாகிஸ்தான் முதல் முறையாக ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா இடையேயான இந்த ஒப்பந்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் பேரல்கள் ஆகும். இந்த எண்ணெய் ஒப்பந்தத்தில் சர்ச்சை எழுந்துள்ளது

சுத்தம் செய்து கொண்டிருந்த போது கிணற்றுக்குள் புதைந்த 63 வயது நபர்.. பத்திரமாக மீட்ட மீட்பு படையினர்..!

கியூபாவின் ஹோல்கைன் நகரில், எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் புதைந்த 63 வயது நபரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். பண்ணை தொழிலாளியான ஃபெர்னாண்டோ ஹெரெரா என்ற நபர், கிணற்றை சுத்தம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பெய்த கனமழையில் நிலம் உறுதி தன்மையை இழந்து மண் உள்வாங்கியது. இதில் ஹெரெரா மீது கல்லும் மண்ணும் விழுந்து மூடியது. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 24 மணி நேரத்திற்கும் … Read more

10 killed in bus overturn accident | பஸ் கவிழ்ந்து விபத்து 10 பேர் உயிரிழப்பு

கான்பெரா-ஆஸ்திரேலியாவில், திருமணத்தில் பங்கேற்று வீடு திரும்பிய நபர்களை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், 10 பேர் பலியாகினர். ஆஸ்திரேலியாவின், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நடந்த திருமணம் ஒன்றில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்டவர்கள், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணி அளவில், சிங்கிள்டன் என்ற நகருக்கு பஸ்சில் புறப்பட்டனர். ஹன்டர் பள்ளத்தாக்கு பகுதியில், கிரேட்டா நகருக்கு பஸ் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது. இதில், பஸ்சில் இருந்த 10 பேர் … Read more

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பெய்த ஆலங்கட்டி மழை.. வெண்போர்வை போர்த்தியது போல காட்சியளித்த சாலைகள்!

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் டென்வர் மற்றும் போல்டர் நகரங்களை புயல் தாக்கியது. அப்போது காற்று மற்றும் மின்னலுடன் கடுமையான ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சாலைகள் முழுவதும் பனிக்கட்டிகளாக காட்சியளித்தன. ஆலங்கட்டி மழையால் சாலைகளில் சிலவற்றில் சிறிது நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. போல்டர் நகரில் தொடர்ந்து மோசமான வானிலை நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. Source link

Singer arrested for smuggling drugs | போதை பொருள் கடத்திய பாடகி கைது

ஹூஸ்டன்,-அமெரிக்காவில், காரில் ரகசிய இடம் அமைத்து 24 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்திய பிரபல ‘பாப்’ பாடகியை போலீசார் நேற்று கைது செய்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் இசை பாடகி ரக்குவெல் டொலொ ரஸ் அன்டியோலா, 34. சமூக வலைதளங்களில் பாப் பாடல்களை பாடி பிரபலமான இவர், அவ்வப்போது ‘வீடியோ’க்களை பதிவிட்டு வருகிறார். சமூக வலைதளத்தில் இவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இதேபோல், மாடல் அழகியாக உள்ள மெலிசா டுபோர், 30, … Read more

America rejoins UNESCO | யுனெஸ்கோவில் மீண்டும் இணைகிறது அமெரிக்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாரிஸ்-ஐ.நா.,வின் கலாசார மற்றும் அறிவியல் அமைப்பான, ‘யுனெஸ்கோ’வில், 12 ஆண்டுக்குப் பின் மீண்டும் இணைய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. பாலஸ்தீனத்தை ஒரு உறுப்பினராக சேர்க்க, யுனெஸ்கோ அமைப்பு, 2011ல் முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைப்பில் இருந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வெளியேறின. தற்போது, 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள இந்த அமைப்பின் முக்கிய நன்கொடையாளராக அமெரிக்கா இருந்து வந்தது. இந்த அமைப்புக்கான நிதியில், 22 சதவீதத்தை அமெரிக்கா … Read more

எவரெஸ்ட் சிகரத்தை விட 3 முதல் 4 மடங்கு உயரமான மலைகள் கண்டுபிடிப்பு

எவரெஸ்ட் சிகரத்தை விட 3 முதல் 4 மடங்கு உயரமான சிகரங்களைக் கொண்ட மலைகள் பூமியின் உள்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்டார்க்டிகாவில் உள்ள நில அதிர்வு மையங்களைப் பயன்படுத்தி, வல்லுநர்கள் இந்த வியக்கத்தக்க பெரிய மலைகளை, சுமார் 1,800 மைல் ஆழத்தில் கண்டுபிடித்து உள்ளனர். அதி மற்றும் குறைந்த வேக மண்டலங்கள் எனப் பெயரிடப்பட்ட இந்த பிரம்மாண்டமான நிலத்தடி மலைத் தொடர்கள், நில நடுக்கங்கள் மற்றும் அணு வெடிப்புகள் மூலம் போதுமான நில அதிர்வுத் … Read more

Help track down criminals: NIA, appeal | வன்முறையாளர்களை கண்டுபிடிக்க உதவுங்கள்: என்.ஐ.ஏ., வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டனின் லண்டனில் உள்ள இந்திய துாதரகத்தில், வன்முறையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணுவதற்கு உதவும்படி, பொது மக்களை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு கேட்டுள்ளது. காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கிற்கு ஆதரவாக, கடந்த மார்ச் 19ல், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்தியத் துாதரகத்திற்குள் புகுந்து, அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், அங்கு கம்பீரமாக பறந்து கொண்டிருந்த நம் நாட்டின் தேசியக் கொடியை … Read more

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகையே மாற்றவல்லது – பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்!

artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகையே மாற்றவல்லது என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார். லண்டனில் தொழில்நுட்ப வாரம் கருத்தரங்கில் உரை நிகழ்த்திய ரிஷி சுனக், சுகாதாரம் உணவு போன்ற பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு உலகை மாற்றும் என்று தெரிவித்துள்ளார். எந்த ஒரு நாட்டையும் உலகிற்கு தலைமை தாங்கச் செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி குறித்து வியப்பு அதிகரிப்பதாக கூறிய இங்கிலாந்து பிரதமர், அமெரிக்கா சீனாவை அடுத்து இங்கிலாந்து … Read more