Airstrike kills 22 in Sudan | வான்வழி தாக்குதல் சூடானில் 22 பேர் பலி

கார்துாம்-சூடானில் குடியிருப்பு பகுதியில் அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், 22 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரலில், அந்நாட்டு ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, கார்துாம் உட்பட பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவீச்சு சம்பவங்கள் நடந்தன. பல்வேறு இடங்களில் நடந்த வன்முறை வெறியாட்டங்களுக்கு, இந்தியர் ஒருவர் … Read more

500-வது நாளை எட்டிய உக்ரைன் – ரஷியா போர்: உக்ரைன் வீரர்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி பாராட்டு

போரை தொடங்கிய ரஷியா அண்டை நாடான ரஷியாவிடம் இருந்து அச்சுறுத்தலை எதிர்கொண்டு வந்த உக்ரைன், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைந்து பாதுகாப்பு தேட முயன்றது. அப்படி நடந்தால் தங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதிய ரஷியா உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் உக்ரைன் அதை பொருட்படுத்தாமல் நேட்டோவில் இணைவதற்கு தீவிரம் காட்டியதால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி உக்ரைன் மீது ரஷியா போரை … Read more

A fine of Rs 6,000 awaits those who do not link their PAN number | பான் எண் இணைக்காதவர்களுக்கு காத்திருக்கும் 6,000 ரூபாய் அபராதம்

புதுடில்லி :பான் எண்ணை ஆதாருடன் இணைக்காமல் விட்டு விட்டவர்கள், வருமான வரியை தாக்கல் செய்வதற்கு, 6,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க கடைசி தேதி கடந்த ஜூன் 30ம் தேதி என்றும்; தவறும் பட்சத்தில், ஜூலை 1ம் தேதி முதல், பான் எண் செயலிழந்ததாககருதப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பான் கார்டை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு அபராதத் தொகையாக 1,000 ரூபாய் கட்டணம் … Read more

நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய துருக்கி அரசு சம்மதம்

அங்காரா, உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை நீடித்து வரும் இந்த தாக்குதல்களுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் செய்து வருகின்றன. இதனிடையே உக்ரைன் ராணுவத்திற்கு மேலும் ராணுவ உதவிகளை கேட்பதற்காக அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு … Read more

US Treasury Secretary visits Chinese forces encircle Taiwan | அமெரிக்க நிதியமைச்சர் வருகை தைவானை சூழ்ந்த சீன படைகள்

பீஜிங்-அமெரிக்க நிதியமைச்சர் ஜானெட் யெல்லன் சீனா சென்ற நிலையில், தைவான் கடல் மற்றும் வான் பகுதியில் போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை சீனா நிறுத்தியுள்ளது. சொந்தம் நம் அண்டை நாடான சீனாவில், 1949ல் நடந்த உள்நாட்டு போருக்குப் பின், தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும், தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஷீ ஜின்பிங் தலைமையிலான சீன அரசு சொந்தம் கொண்டாடி வருகிறது. ‘அவசியம் ஏற்பட்டால், தைவானைக் கைப்பற்ற படை பலத்தை … Read more

ரஷியா ஆயுத கிடங்கை குண்டுவீசி தகர்த்தது உக்ரைன் ராணுவம்..!

கீவ், உக்ரைன் நாட்டில், ரஷியா கட்டுப்பாட்டில் இருந்த மகிவ்கா நகரில் இருந்த ரஷிய ராணுவ கிடங்கை, தகர்த்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து உக்ரைன் ராணுவ தரப்பு கூறுகையில், பாதுகாப்பு படையினரின் துல்லியமான தாக்குதலால் மகிவ்கா பகுதியில், ரஷிய பயங்கரவாதிகளால் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர். இதனிடையே, உக்ரைன் தலைநகரான கிவ் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் பொதுமக்கள் 36 பேர் காயமடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தினத்தந்தி Related Tags : உக்ரைன் … Read more

A statue of Vivekananda in Tanzania | தான்சானியா நாட்டில் விவேகானந்தருக்கு சிலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டார் எஸ் சலாம்,-தான்சானியாவில் உள்ள இந்திய கலாசார மையத்தில், சுவாமி விவேகானந்தரின் மார்பளவு சிலையை, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திறந்து வைத்தார். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவுக்கு, அரசு முறை பயணமாக வந்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், டார் எஸ் சலாம் நகரில் உள்ள இந்திய கலாசார மையத்தில், விவேகானந்தரின் மார்பளவு சிலையை, நேற்று திறந்து வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: எக்காலத்திற்கும் பொருந்தும், விவேகானந்தரின் … Read more

ஜூன் 2023 தான் வரலாற்றிலேயே வெப்பமான மாதம்… அதிர்ச்சி ரிபோர்ட்!

World Temperature: கடந்த ஜூன் மாதம் தான் இதுவரை வரலாற்றில் இல்லாத வெப்பமான மாதமாக அமைந்ததாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு நிறுவனம் தனது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது.

Khalistan supporters gathered at the Indian embassy | இந்திய தூதரகத்தில் திரண்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள்

லண்டன்: பிரிட்டனில் இந்திய தூதரகம் முன் காலிஸ்தான் ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் பிரிட்டன் தலைவர் லண்டனில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்தனர். இந்நிலையில் இன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் திடீரென காலிஸ்தான் ஆதரவாளர்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தவலறிந்த போலீசார் விரைந்து வந்தனர். லண்டன்: பிரிட்டனில் இந்திய தூதரகம் … Read more