Pakistan has become a flooded forest: 50 people have died in the rain so far | வெள்ளக்காடாக மாறிய பாகிஸ்தான்: மழைக்கு இதுவரையிலும் 50 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரு வாரத்துக்கு மேலாக பெய்து வரும் கனமழைக்கு, இதுவரையிலும் 50 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த மாத இறுதியில் பெய்யத் துவங்கிய கனமழை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பெய்து வருகிறது. பலத்த சேதம் இதனால், பலுசிஸ்தான், பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கனமழையால், பஞ்சாப், சிந்து மாகாணங்களை இணைக்கும் நெடுஞ்சாலை வெள்ளக்காடாக … Read more

வெள்ளை மாளிகை போதை பொருள் விவகாரம்; முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

வாஷிங்டன், அமெரிக்காவின் ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகை, உச்சகட்ட பாதுகாப்பைக் கொண்டுள்ள கட்டிடமாகும். அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் சில தினங்களுக்கு முன் வெள்ளை மாளிகை வளாகத்தின் மேற்கு பகுதியில் பவுடர் போன்ற பொருளை கண்டுபிடித்தனர். மர்ம பொருள், பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதில் அது கோகெய்ன் போதை பொருள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பலத்த பாதுகாப்பு உள்ள வெள்ளை மாளிகைக்குள் போதை பொருள் எப்படி நுழைந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் வெள்ளை … Read more

Sri Lankan Presidents recommendation for borderless tourism region | எல்லையற்ற சுற்றுலா பிராந்தியம் இலங்கை அதிபர் பரிந்துரை

கொழும்பு,-”சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், ‘பிம்ஸ்டெக்’ பகுதியை எல்லையற்ற பிராந்தியமாக மாற்ற வேண்டும்,” என, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பரிந்துரைத்து உள்ளார். வங்கக் கடல் பகுதியில் உள்ள இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், பூடான், தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகள் இணைந்து, ‘பிம்ஸ்டெக்’ என்ற பெயரில், 1997-ல் கூட்டமைப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், நம் அண்டை நாடான இலங்கையின் தலைநகர் கொழும்புவில், நேற்று, டி.ஏ.ஏ.ஐ., எனப்படும் டிராவல் ஏஜன்ட்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியாவின், 67வது ஆண்டு மாநாடு … Read more

"12 அடி உயரம் – 5 டன் எடை" உலகின் மிகப் பெரிய நாணயம்…!

பசிபிக் பெருங்கடலில் உள்ளது யாப் தீவு. தீவு நாடான மைக்ரோனேசியாவின் நான்கு மாநிலங்களில் இது ஒன்றாகும். சுமார் 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த தீவுகளில் சுமார் 12,000 மக்கள் வாழ்கின்றனர். இங்கு முக்கியமாக நான்கு மொழிகள் பேசப்படுகின்றன. இந்த தீவுகளில் வாழும் மக்கள் ஏழு வெவ்வேறு பழங்குடியினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் அணியும் மேலங்கியின் நிறம் பொதுவாக அவர்கள் எந்த பழங்குடியினர் என்பதை குறிக்கும். யாப் தீவில் தங்கம் அல்லது வெள்ளி போன்ற மதிப்புமிக்க … Read more

புதினை சந்தித்த 8 வயது சிறுமி – ரஷ்யாவில் ஒரு சுவாரஸ்யம்

மாஸ்கோ: வெளி உலகில் தன்னைக் கடுமையானவராக காட்டிக் கொள்ளும் ரஷ்ய அதிபர் புதின், சமீபத்தில் ரஷ்யாவில் சிறுமி ஒருவரை அழைத்து விருந்தளித்த நிகழ்வு பேசுபொருளாகி இருக்கிறது. ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தில் தாகெஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டார். அப்பயணத்தின்போது புதின் பங்கேற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அவரை பார்க்க 8 வயது சிறுமியும் அங்கு வந்திருந்தார். ஆனால், புதினை அவரால் சந்திக்க முடியவில்லை. இதனை தாங்கிக்கொள்ள முடியாத அந்தச் சிறுமி கண்ணீர் விட்டு அழுகிறார். இதனைத் … Read more

India is not an economic country that exploits other countries: Jaishankar | இந்தியா மற்ற நாடுகளை சுரண்டும் பொருளாதார நாடு அல்ல: ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டொடோமா: இந்தியா மற்ற நாடுகளின் இயற்கை வளங்களை சுரண்டும் பொருளாதார நாடு அல்ல என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.தான்சானியாவின் தார் இ சலாம் நகரில் இந்திய வம்சாவளியினருடன் ஜெய்சங்கர் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், ஆப்ரிக்கா வளர வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். ஆப்ரிக்க பொருளாதாரம் வளர வேண்டும் என நினைக்கிறோம். ஆப்ரிக்காவுடன் வர்த்தகம் அதிகரித்துள்ளது. முதலீடும் உயர்ந்துள்ளது. ஆசியாவில் இந்தியா எழுச்சி பெறும் நேரத்தில் ஆப்ரிக்காவும் … Read more

ராட்சத ராட்டினத்தில் பல மணிநேரம் தலைகீழாக தொங்கிய 8 பேர்..! வைரல் வீடியோ..!

Roller Coaster Ride: அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் உள்ள ராட்சத ராட்டினம் ஒன்று நடுவழியில் நின்று அனைவருக்கும் அடிவயிற்றை கலக்க வைத்துள்ளது. 

சீனாவில் கோவிட் தொற்றால் கடந்த மாதம் 239 பேர் பலி: தேசிய நோய் தடுப்பு மையம் தகவல்

பீஜிங்: கோவிட் தொற்றுக்கு கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சீனாவில் 239 பேர் பலியானதாக அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோவிட் உயிரிழப்பு ஏதும் பதிவாகாத நிலையில் மே மாதத்தில் 164 பேரும், ஜூன் மாதத்தில் 239 பேரும் பலியானதாக அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன்முதலில் கோவிட் தொற்று பாதித்த நபர் கண்டறியப்பட்டார். … Read more

பூமியை தாக்க வரும் டபுள் சூரிய புயல்… காத்திருக்கும் ஆபத்து… நாசா விடுத்துள்ள எச்சரிக்கை!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் SOHO எனப்படும் சோலார் மற்றும் ஹீலியோஸ்பியரிக் அப்சர்வேட்டரி கடந்த 1995ஆம் ஆண்டு முதல் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. சூரியனை சுற்றி கொண்டு அதன் இயக்கங்கள், வெளிப்படும் ஆற்றல், உருவாகும் புயல்கள், விளைவுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து பூமிக்கு அவ்வப்போது தகவல்களை அனுப்பி வருகிறது. ஒரே நாளில் 2 வயது குறைப்பு ..தென் கொரியா அரசு அறிவிப்பு … Read more