என் பலத்தை பாத்துக்கோங்க… உலகை மிரள வைத்த ரஷ்ய அதிபர் புடின்… கடலில் பெரிய சம்பவம்!

சர்வதேச அளவில் தலைப்பு செய்திகளில் ஒன்றாக இருப்பது ரஷ்யா – உக்ரைன் போர். சில வாரங்கள், சில மாதங்கள் நீடித்தால் புரிந்து கொள்ள முடிகிறது. ஓராண்டிற்கும் மேலாக போர் தொடர்வது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. பலம் வாய்ந்த ரஷ்யாவா இப்படி? எனக் கேட்க வைக்கிறது. இருதரப்பிலும் இழப்புகளுக்கு பஞ்சமில்லை. உக்ரைனுக்கு ஆதரவாக சில நாடுகளும், ரஷ்யாவிற்கு ஆதரவாக சில நாடுகளும் நிற்கின்றன. ஐரோப்பாவில் இருந்து உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் தொடர்வது கவனிக்கத்தக்கது. அணு ஆயுதங்களை பெலாரஸுக்கு அனுப்பி … Read more

விந்தை மனிதர்… ₹12 செலவழித்து நாய் வாழ்க்கை வாழும் நபர்… வைரலாகும் வீடியோ!

ஜப்பானியர் ‘டோகோ’ நாயாகவே வாழ்ந்து வருகிறார். தனது வித்தியாசமான ஆசையை நிறைவேற்ற கடந்த ஆண்டு ரூ.12 லட்சம் செலவு செய்து நாய் உடை தயாரித்து அணிந்துள்ளார்.

செர்பியாவில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த பத்மா ராஜன் மறைவு

செர்பியாவில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக பாடுபட்டு வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்மா ராஜனின் (61) திடீர் மறைவால் பலர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் மனைவி உட்பட பலர், பத்மா ராஜனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த 25-ம் தேதி திடீரென அவர் காலமானது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. செர்பியா நாட்டில் ஆதரவற்ற குழந்தைகளின் மேம்பாட்டிலும், வளர்ச்சிக்காகவும் பல்வேறு சேவைகளைச் செய்து வந்த பத்மா ராஜன் சென்னையில் பிறந்து பின்னர் … Read more

உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பான உச்சிமாநாடு – சவுதி அரேபியா ஏற்பாடு

துபாய், உக்ரைன்-ரஷியா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த இரு நாடுகளும் கோதுமை, பார்லி போன்ற உணவு தானியங்களின் ஏற்றுமதி மையமாக உள்ளன. ஆனால் இந்த போர் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டதால் இவற்றின் விலை தாறுமாறாக உயர்ந்தது. இது உலக பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே போரை நிறுத்த இரு நாடு களும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். உச்சிமாநாடு … Read more

பாகிஸ்தானில் மனித குண்டுவெடிப்பு தாக்குதல்… 42 பேர் பலி – பின்னணி என்ன?

பாகிஸ்தானில் நேற்று மாலை தொழிலாளர்கள் மாநாட்டை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் மனித குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.

துபாய் ஷேக்கின் ராட்சத ஹம்மர் கார்

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யான் வைத்திருக்கும் ஹம்மர் கார் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது ராட்சத ஹம்மர். இந்த ஹம்மர் காரின் உயரம் 22 அடி, நீளம் 46 அடி, அகலம் 20 அடி. இந்தக் கார் ஹம்மர் ஹெச் 1 எக்ஸ் 3 என்று அழைக்கப்படுகிறது. வழக்கமான ஹெச் 1 மாடல் ஹம்மர் காரின் அளவைவிட மூன்று மடங்கு அதிகம் என்பதால் ‘எக்ஸ் 3’ … Read more

அமெரிக்காவின் வெடிமருந்து கிடங்காக மாறிய தைவான்: சீனா குற்றச்சாட்டு

பீஜிங், சீனாவில் நடந்த உள்நாட்டு போரால் கடந்த 1949-ம் ஆண்டு தைவான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் தைவானை தங்களது நாட்டுடன் இணைக்க சீனா தீவிர முனைப்பு காட்டுகிறது. அதன்ஒருபகுதியாக தைவான் எல்லையில் அடிக்கடி போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தைவானுடன் வேறு எந்த நாடுகளும் அதிகாரப்பூர்வ உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என சீனா எச்சரித்துள்ளது. ஆனால் அமெரிக்கா மட்டும் துவக்கம் முதலே தைவானுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் … Read more

39 killed in suicide attack in Pakistan | தற்கொலை படை தாக்குதல் பாக்.,கில் 39 பேர் உயிரிழப்பு

பெஷாவர்,-பாகிஸ்தானில் அரசியல் கட்சி கூட்டத் தில் தற்கொலை படையினர் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், 39 பேர் கொல்லப்பட்டனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் நான்காவது பெரிய மாகாணமான கைபர் பக்துன்குவாவில் பஜவுர் மாவட்டம் உள்ளது. இங்குள்ள கார் டெசில் பகுதியில், ஜே.யு.ஐ.எப்., எனப்படும் ஜாமியத் உலமா – இ – இஸ்லாம் பசல் கட்சி சார்பில் நேற்று பொதுக் கூட்டம் நடந்தது. அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள், ஆதரவாளர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் … Read more

சீனாவில் புயலால் ரூ.493 கோடி சேதம்

பீஜிங், சீனாவின் பல மாகாணங்களில் டோக்சுரி புயல் தாக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்குள்ள புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல் கரையை கடந்தது. அப்போது பெய்த கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த புயல் காரணமாக அங்கு 178 வீடுகள் பலத்த சேதமடைந்தன. சுமார் 6 ஆயிரம் எக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தது. இதன்மூலம் அங்கு ரூ.493 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டு … Read more