பிலிப்பைன்சில் மேயோன் எரிமலை வெடிக்கும் அபாயம்..!! விமானங்கள் பறக்க தடை

மணிலா, பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏராளமான எரிமலைகள் உள்ளன. இங்கு அடிக்கடி எரிமலை சீற்றம் காரணமாக கடும் சுகாதார பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் பிலிப்பைன்சின் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனம் லூசன் தீவில் பல ஆய்வுகளை மேற்கொண்டது. இதில் பிரபல சுற்றுலா தலமான மேயோன் நகரில் உள்ள எரிமலைக்கான எச்சரிக்கையை இரண்டாவது நிலைக்கு உயர்த்தியது. இது கடந்த 400 ஆண்டுகளில் 50 முறைக்கும் மேல் வெடித்துள்ள ஒரு எரிமலை ஆகும். இதனால் … Read more

இந்தியாவில் ஜனநாயகம் துடிப்புடன் உள்ளது: அமெரிக்கா

வாஷிங்டன்: இந்தியாவில் ஜனநாயகம் துடிப்புடன் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பே, நேற்று(ஜூன்5) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம். புதுடில்லிக்குச் செல்லும் எவரும் அதைத் தாங்களாகவே பார்க்க முடியும். பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் அமெரிக்காவுக்கு மேற்கொள்ள இருக்கும் அரசுமுறைப் பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான நட்பை முன்னோக்கி கொண்டு செல்லும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியா … Read more

நைஜீரியாவில் கிராமங்களுக்குள் புகுந்து கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு; 30 பேர் பலி

அபுஜா, நைஜீரியாவின் பல பகுதிகளில் ஆயுதம் ஏந்திய குழுவினர் அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். அதன்படி வடமேற்கு மாகாணமான சொகோடாவில் உள்ள ராக்கா, டபாகி உள்ளிட்ட கிராமங்களில் மர்ம நபர்கள் சிலர் புகுந்து தாக்குதல் தொடுத்தனர். அப்போது துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு அவர்கள் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கொள்ளையடிக்கும் … Read more

அமெரிக்காவில் திசை மாறி வாஷிங்டன் நோக்கி பறந்த விமானத்தால் பரபரப்பு

வாஷிங்டன்: சிக்னல் குளறுபடி காரணமாக திசை மாறி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நோக்கி பறந்த விமானம், மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஊடகங்கள், “செஸ்னோ சிட்டேசன் என்ற விமானம் அமெரிக்காவின் டென்னசி மாகாணத்திலிருந்து லாங் தீவில் உள்ள மாக் ஆர்தர் என்ற தீவை நோக்கிச் சென்றது. ஆனால் விமானத்தின் ரேடார் சிக்னல் குளறுபடியால் விமானம் இலக்கை நோக்கி செல்லாமல் வாஷிங்டன்னை நோக்கி பறந்தது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. … Read more

அமெரிக்காவில் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட இந்திய சிறுவன் மீட்பு..!

வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருபவர் சீனிவாச மூர்த்தி ஜொன்னலகடா. இந்திய வம்சாவளியான இவர் விடுமுறையை கொண்டாடுவதற்காக சாண்டா குரூஸ் பகுதியில் உள்ள பாந்தர் ஸ்டேட் கடற்கரைக்கு தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அப்போது அவரது 12 வயது மகன் கடலில் குளித்துக்கொண்டிருந்தான். திடீரென எழும்பிய ராட்சத அலையில் அவன் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டான். இதனையடுத்து சீனிவாச மூர்த்தி வேகமாக கடலுக்குள் இறங்கி தனது மகனை காப்பாற்றினார். ஆனால் அவருக்கு நீச்சல் தெரியாததால் துரதிர்ஷ்டவசமாக கடலுக்குள் இழுத்து … Read more

ஹைதி நாட்டில் வெள்ள பாதிப்புகளில் சிக்கி 42 பேர் உயிரிழப்பு

ஹைதி நாட்டில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் சிக்கி 42 பேர் உயிரிழந்தனர். 12 பேர் மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை முதல் பெய்த தொடர் கனமழையால் லியோகன் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகள் நிரம்பி வீடுகளிலும் விளைநிலங்களிலும் தண்ணீர் புகுந்ததோடு, நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மழையால் சில பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. மழை பெய்த பகுதிகளில் சுமார் 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 13 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு … Read more

7 ஆண்டுகளுக்கு பின் சவுதியுடன் தூதரக உறவை தொடங்கும் ஈரான்

தெஹ்ரான், வளைகுடா நாடுகளாக சவுதி அரேபியா – ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வந்தது. ஏமன் உள்நாட்டு போரில் சவுதி – ஈரான் இடையேயான மோதல் அதிகரித்தது. அதேவேளை, இரு நாடுகளுக்கு இடையேயான மோதல்போக்கு காரணமாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் சவுதி அரேபியாவில் செயல்பட்டு வந்த தங்கள் நாட்டு தூதரகத்தை ஈரான் மூடியது. இதனிடையே, சவுதி அரேபியா – ஈரான் இடையேயான உறவை மேம்படுத்த சீனா முயற்சிகள் மேற்கொண்டது. அந்த முயற்சியின் பயனாக … Read more

சர்ச்சில், மண்டேலாவுக்கு பிறகு பிரதமர் மோடிக்கு கிடைத்த கௌரவம்… அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைப்பு!

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஆழமான, நெருக்கமான நட்புறவை மேலும் உறுதிப்படுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  

சர்ச்சில், மண்டேலாவுக்கு கிடைத்த கவுரவம் போல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக வரும் 22-ம் தேதி செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவது இது இரண்டாவது முறை. இத்தகைய கவுரவம், இதற்கு முன்பு பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா உள்ளிட்ட வெகு சில உலகத் தலைவர்களுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற … Read more

19 people lost their lives in the landslide | நிலச்சரிவில் சிக்கி 19 பேர் பரிதாப பலி

பீஜிங் : சீனாவில் சுரங்கத் தொழிலாளர்கள் தங்குமிடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் பலியாகினர். நம் அண்டை நாடான சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் உள்ள மலையடிவாரத்தில் தனியார் சுரங்க நிறுவனத்தின் தொழிலாளர் தங்கும் விடுதி உள்ளது. இங்கு தொடர் மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுரங்கத் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதி உட்பட பல்வேறு கட்டடங்கள் குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. இங்கு வசித்த மக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கித் … Read more