ஒடிசா ரெயில் விபத்து – ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் இரங்கல்

நியூயார்க், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந்தேதி இரவு சுமார் 7 மணியளவில் விபத்தில் சிக்கின. இந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் … Read more

ஆணாதிக்க தாலிபன்களின் விஷ முகம்! 1-6 வகுப்பு மாணவிகளுக்கு நஞ்சு கொடுத்த பள்ளிகள்

Afghan Girl Students Poisoned: படிப்பதற்கு தண்டனை! ஆப்கானிஸ்தானில் ஒன்று  முதல் ஆறாம் வகுப்பு படிக்கும் 80 பள்ளிச் சிறுமிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

ஜப்பானில் 3 நாட்களாக பெய்துவரும் கனமழை.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலைகள்

ஜப்பானில் 3 நாட்களாக பெய்துவரும் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெப்பமண்டல புயலான மார்வார், நாட்டின் முக்கிய தீவான ஹொன்ஷூவில் கரையை கடந்த நிலையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக கிழக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் சுமார் 7 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மத்திய ஜப்பானில் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், வாகனங்களும் வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டன. இதனிடையே, நாட்டின் மேற்கு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஜப்பான் வானிலை … Read more

ஒடிசா ரயில் விபத்து : போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக போப் பிரான்சிஸ் பிரார்த்தனை மேற்கொண்டார். கடந்த 2ம் தேதி ஒடிசாவில் 2 பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 275 பேர் பலியாகினர். இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மிக மோசமான விபத்தாக இது பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரயில் விபத்தில் இறந்தவர்களுக்காகவும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் வாடிகனில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். Source link

ஷெர்வானி அணிந்து இந்திய மாப்பிள்ளை போல தோற்றமளிக்கும் எலான் மஸ்க்

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட எலான் மஸ்கின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்திய மாப்பிள்ளை போல எலான் மஸ்க் ஷெர்வானி அணிந்துகொண்டு குதிரை மீது அமர்ந்துள்ளது போலவும், நடனமாடுவது போலவும் உள்ள புகைப்படங்களைப் பார்த்த பலர், இது எப்போது என இணையத்தில் விவாதம் நடத்திய நிலையில், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது தெரியவந்தது. மும்பையை சேர்ந்த ரோலிங் கேன்வாஸ் என்ற திருமணப் புகைப்பட கலைஞர், செயற்கை நுண்ணறிவில் மிட்ஜர்னி என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மஸ்கின் புகைப்படங்களை … Read more

உக்ரைன் போரில் 500 குழந்தைகளை ரஷ்யா கொன்றது: ஜெலன்ஸ்கி

கீவ்: உக்ரைன் மீதான போரில் ரஷ்யா குறைந்தது 500 குழந்தைகளைக் கொன்றுள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை பேசுகையில், “உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 16 மாதங்கள் ஆகின்றன. குறைந்தது 500 உக்ரேனிய குழந்தைகளை ரஷ்யா கொன்றது. ரஷ்ய ஆயுதங்கள் மற்றும் வெறுப்பு, ஒவ்வொரு நாளும் உக்ரேனிய குழந்தைகளின் உயிரைப் பறித்து அழித்துக் கொண்டே இருக்கிறது. பிப்ரவரி 24, 2022 அன்று ரஷ்யா உக்ரைனின் மீது … Read more

சோமாலியாவில் தீவிரவாத தாக்குதல்: உகாண்டா பாதுகாப்புப் படையினர் 54 பேர் பலி

மொகதிசு: சோமாலியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உகாண்டாவைச் சேர்ந்த 54 பாதுகாப்புப் படையினர் பலியாகினர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில்,” சோமாலியாவில் பாதுகாப்புப் படையினருக்கும் – தீவிரவாதிகளுக்கும் மோதல் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் சோமாலியா தலைநகர் மொகதிசுவிலிருந்து 130 கிமீ தொலைவில் உள்ள புலமாரரில் பாதுகாப்புப் படை தளத்தை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் உகாண்டாவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் 54 பேர் பலியாகினர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன. அல் ஷாபாப் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் … Read more

Army conspiracy to jail me: Imran Khan | என்னை சிறையில் அடைக்க ராணுவம் சதி: இம்ரான்கான் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் தன்னை சிறை அடைக்கும் நோக்கத்துடன் தனது கட்சியை அழிக்கும் வகையில் செயல்படுகிறது என பாகிஸ்தான் மாஜி பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் விலகிய பின், அவர் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், அல்காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அல்காதிர் அறக்கட்டளை வழக்கில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இம்ரான் கானுக்கு … Read more

Gold for an Indian player | வட்டு எறிதலில் இந்திய வீரருக்கு தங்கம்

சியோல்: தென் கொரியாவில் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் வட்டு எறிதலில் இந்தியாவின் பரத்ப்ரீத் சிங் என்பவர் தங்கம் வென்றார். அதேபோல், 400 மீ.,ஓட்டப் போட்டியில் இந்தியாவின் ரசோனா மாலிக் தங்கம் வென்றார். சியோல்: தென் கொரியாவில் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் வட்டு எறிதலில் இந்தியாவின் பரத்ப்ரீத் சிங் என்பவர் தங்கம் வென்றார். அதேபோல், 400 புதிய செய்திகளுக்கு தினமலர் … Read more