நடுக்கடலில் பற்றி எரிந்த 3,000 கார்கள்… களேபரமான சரக்கு கப்பல்… அதிர்ந்த வட கடல்!

நெதர்லாந்து நாட்டின் வடக்கே வட கடல் காணப்படுகிறது. இதில் ஃபிரிமேண்டில் ஹைவே (Fremantle Highway) என்ற சரக்கு கப்பல் பயணம் மேற்கொண்டது. அதாவது ஜெர்மனி நாட்டின் பிரேமெர்ஹாவென் துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆண்டிப்பட்டியில் பழைய இரும்பு கடையில் பயங்கர தீவிபத்து! அமிலாந்து அருகே தீவிபத்து இந்நிலையில் நெதர்லாந்து தீவுகளில் ஒன்றான அமிலாந்தில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் சரக்கு கப்பல் சென்ற போது திடீரென தீப்பற்றிக் கொண்டது. அதில் 3,000க்கும் மேற்பட்ட கார்கள் … Read more

நைஜர் நாட்டில் பதற்றம்: அதிபரிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

நியாமே: ஆப்பிரிக்க நாடான நைஜரில் அதிபர் முகமது பாசும்மை அதிகாரத்திலிருந்து அகற்றி, ஆட்சியை ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதால் பதற்றம் நீடிக்கிறது. ஆப்பிரிக்காவின் நைஜர் நாட்டில் அதிபர் முகமது பாசும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்கப்படுவதாக ராணுவத்தினர் புதன்கிழமை இரவு அறிவித்தனர். ஆனால், தற்போது அதிபர் முகமது பாசும் எங்குகிறார் என்ற தகவலை ராணுவம் வெளியிடவில்லை. எனினும், அதிபர் பாசும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக ராணுவத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய நைஜர் ராணுவ தளபதி அமடோ அப்த்ரமேனே … Read more

Apples exclusive shoe auctioned for Rs.41 lakh | ஆப்பிளின் பிரத்யேக ஷூ ரூ.41 லட்சத்துக்கு ஏலம்

வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனம் முன்னர் தனது பணியாளர்களுக்காக தயாரித்த ஒரு ஜோடி ஷூ தற்போது ஏலத்தில் ரூ.41 லட்சத்திற்கு விற்பனைக்கு வந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், ஐபேட், ஐபோன், ஐமேக் என பல பொருட்களை விற்பனை செய்கிறது. ஆப்பிள் நிறுவன தயாரிப்புக்கென உலகம் முழுவதும் ரசிகர்கள்உள்ளனர். ஆப்பிள் நிறுவனம் தனது ஊழியர்களுக்காக பிரத்யேகமாக ஷூக்களை தயாரித்தது. 1990ம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு ஜோடி ஷூ தற்போது பிரபல சோத்பைஸ் … Read more

உக்ரைனில் வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள் மீது தாக்குதல்

கீவ்: ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் உள்ள வணிக மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை குறிவைத்து ரஷ்யா தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில், ஒடேசா நகரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பழமையான தேவாலயம் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலில் நேற்றுமுன்தினம் பலத்த சேதமடைந்தது. இதில், தேவாலயத்தில் இருந்த இருவர் படுகாயமடைந்தனர். தேவாலயத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை பணியாளர்கள் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். Source … Read more

அதிபரை சிறை பிடித்த ராணுவ வீரர்கள்.. நைஜரில் பெரும் பரபரப்பு!

நைஜர் ராணுவ வீரர்கள் தனது நாட்டி அதிபரை சிறை பிடித்து, தேசிய தொலைக்காட்சியில் அறிவித்துள்ள நிகழ்வு உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  இதை அடுத்து, அரசயல் அமைப்பு கலைக்கப்பட்டு, எல்லைகளை மூடப்படுகின்றன என நைஜீரிய வீரார்கள் அறிவித்தனர்.

உலக அளவில் முன்னிலை: வெளிநாட்டவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் சவுதி அரேபியா

ரியாத்: உலகிலேயே வெளிநாட்டு பணியாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதில் சவுதி அரேபியா முன்னிலையில் இருப்பதாக இசிஏ இண்டர்நேஷனல் கன்சல்டன்ஸி நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் நம்மில் பலரிடம் உள்ளது. பெரும்பாலும் அதிக சம்பளம் வழங்கும் நாடுகளுக்கு செல்லவே போட்டி அதிகமாக உள்ளது. அதிக சம்பளம் என்று ஆசைப்பட்டு தவறான ஏஜென்சிகள் மூலம் பலர் வெளிநாடு சென்று ஏமாந்துவிடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சவுதி அரேபியா வெளிநாடுகளிலிருந்து … Read more

அமெரிக்காவில் பசியால் வாடும் ஹைதராபாத் மாணவி: மகளை மீட்க அமைச்சருக்கு தாய் கடிதம்

ஹைதராபாத்: அமெரிக்காவில் மேற்படிப்புக்கு சென்ற மகள், கடந்த 2 மாதங்களாக பசியால் வாடி தெருவில் சுற்றி திரிவதாகவும் அவரை மீட்டுத் தருமாறும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தாய் கடிதம் எழுதியுள்ளார். ஹைதராபாத் மவுலாலி பகுதியை சேர்ந்தவர் சையிதா ஹவாஜ் பாத்திமா. இவரது மகளான சையிதா லுலூ மின்ஹாஜ் குவைதி எம்.எஸ். படிக்க 2021 ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் உள்ள சிகாகோவிற்கு சென்றார். அங்கிருந்து தினமும் தனது தாயிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். லுலூ கடந்த 2 … Read more

The decision to crown the son of the outgoing Cambodian Prime Minister | பதவி விலகும் கம்போடிய பிரதமர் மகனுக்கு முடிசூட்ட முடிவு

நோம் பென், கம்போடியாவை பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பிரதமர் ஹுன் சென், 70, அப்பதவியில் இருந்து மூன்று வாரங்களில் விலகி, தன் மூத்த மகனை அமர வைக்கப் போவதாக அறிவித்துள்ளார். அமோக வெற்றி தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவை, கம்போடிய மக்கள் கட்சி தலைவர் ஹுன் சென், கடந்த 38 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார். இங்கு, பார்லிமென்டுக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், மொத்தமுள்ள 125 இடங்களில், 120 இடங்களில் கம்போடிய மக்கள் கட்சி … Read more

அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்க சென்ற இளம்பெண்ணின் உடைமைகள் திருட்டு… தெருக்களில் சுற்றித்திரியும் அவலம் – மத்திய மந்திரி உதவ…

நியூயார்க், தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் மவுலா அலி பகுதியை சேர்ந்த இளம்பெண் சையிடா லுலு மினாஜ் ஜைதி. அவர் அமெரிக்காவின் டெட்ராய்டு நகரில் உள்ள டிரைன் பல்கலை கழகத்திற்கு முதுநிலை படிப்புக்காக சென்றுள்ளார். இந்நிலையில், 2 மாதங்களாக அவரது தாயார் சையிடா வகாஜ் பாத்திமாவால் மகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், அதிக கவலையில் இருந்த அவருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. ஐதராபாத் நகரை சேர்ந்த இளைஞர்கள் 2 பேர், பாத்திமாவை தொடர்பு கொண்டு, உங்களுடைய மகள் … Read more

US support to the central government | மத்திய அரசுக்கு அமெரிக்கா ஆதரவு

வாஷிங்டன்:’மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு நீதி கிடைக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கிறோம்’ என, அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த நிருபர் ஒருவர், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு வேதாந்த் படேல் கூறியுள்ளதாவது: ஏற்கனவே நாங்கள் கூறியபடி, மணிப்பூர் விவகாரத்தில் அமைதியாகவும், சுமுகமாகவும் தீர்வு காண … Read more