உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு கோலகலமாக தொடக்கம்

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக வருவாய்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், மாவட்ட ஆட்சியா் நடராஜன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடா்ந்து உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று தொடங்கியது. ஆயிரத்து 400 காளைகளை அடக்குவதற்காக 800 மாடுபிடி வீரா்கள் களத்தில் நிற்கின்றனா். பாதுகாப்பு பணியில் ஆயிரத்து 500 காவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும் 15 மருத்துவா்கள் கொண்ட 12 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாக 13 அவசர ஊா்தி … Read moreஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு கோலகலமாக தொடக்கம்

எல்லா காவல் நிலையங்களும் வாட்ஸ்ஆப் குழு தொடங்க டிஜிபி உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் பெயரிலும் வரும் ஜனவரி 18ஆம் தேதிக்குள் வாட்ஸ்ஆப் குழு தொடங்க டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல்துறை எப்.ஐ.ஆர் பதிவை ஆன்லைனில் ஆரம்பித்திருக்கிறது. இதனால், குற்றவாளிகள் குறித்த தகவல்களையும் ஒரே டேட்டா பேஸில் சேகரித்து ஒருங்கிணைக்க முடிகிறது. காவல்துறை சான்றிதழ் பெறுவது, நற்சான்றிதழ் பெறுவது உள்ளிட்டவை டிஜிட்டல் முறைக்கு வந்துள்ளன. ஒரு நபரைப் பற்றிய காவல்துறையின் நற்சான்றிதழை வழங்கும் சேவையும் இணையத்துக்கு வந்துவிட்டது. இந்நிலையில் சில காவல் நிலையங்கள் வாட்ஸ் … Read moreஎல்லா காவல் நிலையங்களும் வாட்ஸ்ஆப் குழு தொடங்க டிஜிபி உத்தரவு

Petrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (17-01-2019)

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.22 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி முதல் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி இன்றைய பெட்ரோல், டீசல் விலை விபரம்: எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73 ஆக உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.09 ஆக உள்ளது. நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 8 பைசா குறைந்துள்ளது. டீசல் … Read morePetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (17-01-2019)

தமிழ்நாட்டில் புதிய மத்தியப் பல்கலைக்கழகம்: ரூ.3,639 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்களில் புதிய மத்தியப் பல்கலைக்கழகங்களைத் உருவாக்க ரூ. 3,639.32 கோடி ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய அமைச்சவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்கள் சட்டம் 2009-ன் கீழ் 13 புதிய பல்கலைக்கழகங்களைத் தொடங்க மத்திய அமைச்சரவை ரூ. 3,639.32 கோடி ஒதுக்கீட்டு செய்துள்ளது. இது குறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, பீகார், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, ஒரிசா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா … Read moreதமிழ்நாட்டில் புதிய மத்தியப் பல்கலைக்கழகம்: ரூ.3,639 கோடி ஒதுக்கீடு

வலதுகை பேட்டிங்: கிறிஸ் கெயில் பந்தை அடிச்சு தூக்கிய வார்னர்!

வங்கதேசத்தில் நடக்கும் டி20 லீக் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது வழக்கமான இடதுகை பேட்டிங்கிலிருந்து மாறி வலதுகை பேட்டிங் ஸ்டைலில் அதிரடியாக விளையாடியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கினார். அவர் ஓராண்டுக்கு சர்வதேசப் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. இதனால் தற்போது வங்கதேசத்தில் நடக்கும் பி.பி.எல். டி20 தொடரில் சில்ஹெட் சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதில் … Read moreவலதுகை பேட்டிங்: கிறிஸ் கெயில் பந்தை அடிச்சு தூக்கிய வார்னர்!

அமெரிக்காவிடம் 35,000 கோடிக்கு எண்ணெய், எரிவாயு வாங்க இந்தியா முடிவு

அமெரிக்காவிடம் இருந்து ஆண்டுக்கு 35,000 கோடி ரூபாய் மதிப்பில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக இந்தியத் தூதர் ஷிரிங்லா தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா, அமெரிக்கா இந்தியா இடையிலான வர்த்தகம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 8.33 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 9.80 லட்சம் ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்றார். 2.80 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் வணிக பயன்பாட்டுக்கான … Read moreஅமெரிக்காவிடம் 35,000 கோடிக்கு எண்ணெய், எரிவாயு வாங்க இந்தியா முடிவு

பட்டம் விடும் திருவிழா: 2,400 பறவைகள் படுகாயம்

குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்று வரும் பட்டம் விடும் திருவிழாக்களால் நூற்றுக்கணக்கான பறவைகள் படுகாயம் அடைந்துள்ளதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் பட்டம் விடும் திருவிழாக்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகின்றன. இந்நிலையில் எதிராளியின் பட்டத்தை அறுத்து விடுவதற்காக நூல்களில் கண்ணாடித் தூள் உள்ளிட்டவற்றைக் கொண்ட மாஞ்சா கலவை பூசப்படுவதால் அவை பறவைகளின் உயிருக்கு ஆபத்தாகின்றன. வானம் முழுக்க பட்டங்கள் பறக்கும்போது வலையில் … Read moreபட்டம் விடும் திருவிழா: 2,400 பறவைகள் படுகாயம்

100 கோடி வசூலில் ஹாட்ரிக் அடித்த அஜித் – சிவா கூட்டணி

வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து விஸ்வாசம் படத்திலும் நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் சிவா ஆகியோரின் கூட்டணி 100 கோடி ரூபாய் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. வீரம், வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் தல அஜித் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். … Read more100 கோடி வசூலில் ஹாட்ரிக் அடித்த அஜித் – சிவா கூட்டணி

தனுஷ் பாடலின் புதிய சாதனை: பில்போர்டில் இடம்பிடித்தது ரௌடி பேபி

நடிகர் தனுஷ் நடித்துள்ள மாரி 2 படத்தின் `ரௌடி பேபி’ பாடலின் வீடியோ `பில்போர்டு’ சர்வதேச இசைப்பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. பிரபல அமெரிக்க ஊடகமான தி ஹாலிவுட் ரிபோர்ட்டர் குழுமத்தின் `பில்போர்டு’ பாப் மற்றும் உலகளாவிய இசை பற்றிய செய்திகளுக்கு பிரசித்திபெற்றது. இந்த நிறுவனம் சர்வதேச அளவில் ரேடியோ, ஆன்லைன் ஆல்பங்கள், யூடியூப் என வெவ்வேறு ஊடகங்களில் டாப் பாடல்களின் தரவரிசைப் பட்டியலை வாரம் தோறும் வெளியிடுகிறது. அந்த வகையில் யூடியூபில் வெளிவந்த வீடியோ பாடல்கள் … Read moreதனுஷ் பாடலின் புதிய சாதனை: பில்போர்டில் இடம்பிடித்தது ரௌடி பேபி

தாய், மகளை கொடூரமாகக் கொன்றவனை சரியாகக் காட்டிக்கொடுத்த மோப்பநாய்

சென்னை ஆவடி அருகே தாயும், மகளும் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் கொலை செய்த ஆசாமியை மோப்பநாய் சரியாகக் கண்டுபிடித்து லபக்கென்று கவ்விவிட்டது. சென்னை ஆவடியில் கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரம் செய்யும் பெண்ணும் அவரது 3 வயது மகளும் அண்மையில் பயங்கரமான முறையில் கொல்லப்பட்டனர். பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத நிலையில், அடையாளம் தெரியாத நபர் இரவு நேரத்தில் வந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அவரது குழந்தையும் சேர்ந்து தலையில் கல்லைத் தூக்கிப்போட்டுக் கொன்றுவிட்டதாகக் … Read moreதாய், மகளை கொடூரமாகக் கொன்றவனை சரியாகக் காட்டிக்கொடுத்த மோப்பநாய்