`100 பேர் முன் மன்னிப்பு கேட்டேன்; அப்பவும் விடலை!' மகளிர் ஆணையத்தில் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி புகார்
பிப்ரவரியில் நடக்கவிருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தன்னைப் போட்டியிட விடாமல் தடுக்கும் தற்போதைய நிர்வாகிகளுக்கு எதிராக தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார் ‘மயங்கினேன் தயங்கினேன்’, பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் நடித்த ‘ஜின்’ ஆகிய படங்களைத் தயாரித்த ராஜேஸ்வரி வேந்தன். தமிழ்நாடு அரசின் மானியத்துக்கான திரைப்படத் தேர்வுக் கமிட்டியில் உறுப்பினராகவும் இருக்கிறார் இவர். சங்கத் தேர்தலில் நிற்பதற்கும் மகளிர் ஆணையத்துக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியுடன் அவரைச் சந்தித்தோம். முரளி ராமசாமி ‘’திரைப்படத் … Read more