ரஜினி – சிபி சக்கரவர்த்தி படம் என்ன ஆச்சு? உண்மையில் கைவிடப்பட்டதா?

தலைவர் 173 படத்தின் இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த சிபி சக்கரவர்த்தி தற்போது அப்படத்திலிருந்து வெளியேறியுள்ளதாகவும், அவருக்கு பதிலாக புதிய இயக்குநர் ஒருவர் களமிறங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.  

"த.வெ.க வேட்பாளருக்கு ஆதரவு ஏன்?" – தெளிவுப்படுத்தும் நடிகர் ராமராஜன்

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் ராமராஜன் ஆலங்குளம் தொகுதி தவெக வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. “அதிமுக-வில் இருந்தவர் இப்போது தடம் மாறிவிட்டாரா?” என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், விளக்கமளித்து ராமராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ராமராஜன் அந்த அறிக்கையில், ” தமிழக சட்டசபைத் தேர்தல் வருகிற ஏப்ரல்-23 அன்று நடைபெற உள்ள நிலையில் எனது கொள்கை, கோட்பாட்டு வழிகாட்டும் தெய்வங்களாக நான் என்றென்றும் மதிக்கும் இருபெரும் தலைவர்கள் … Read more

"தாலி கட்டும் நேரத்தில் ரோஷன் கண்கலங்கிவிட்டார்!" – காதலன் பற்றி நடிகை ஜனனி

‘அவன் இவன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜனனி. அப்படத்தைத் தொடர்ந்து ‘தெகிடி’, ‘பலூன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். Actress Janani சில நாட்களுக்கு முன்பு, ஜனனிக்கும் அவருடைய காதலனான சாய் ரோஷனுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திருமணம் பற்றியும், அவர்களுடைய முதல் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்தும் ஜனனி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்குப் பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், “தமிழ் புத்தாண்டு எங்களுக்கு ஒரு … Read more

"கடும் குளிரான நீரில் 30 முதல் 40 நொடிகள் வரை மூச்சை அடக்கி நடித்தேன்" – பகிரும் ஆர்யா

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X) திரைப்படம் வரும் ஏப்ரல் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு பரோமோஷனில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சவாலான தண்ணீருக்கு அடியிலான (Underwater) சண்டைக்காட்சிகள் குறித்து ஆர்யா பகிர்ந்திருக்கிறார். Arya – Mr X இது குறித்து ஆர்யா, “கடலின் ஆழமான பகுதியைத் தத்ரூபமாகக் காட்டுவதற்காக, மும்பையில் உள்ள ஒரு … Read more

இணையத்தில் கசிந்த விஜய்யின் ஜனநாயகன்! இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்?

ஜனநாயகன் படத்தின் முக்கியமான காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.  

விக்ரம் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்; ரெடியான புரோமோ வீடியோ – 'சீயான் 63' அப்டேட்!

அடுத்த அதிரடிக்கு ரெடியாகிவிட்டார் ‘சீயான்’விக்ரம். ‘வீரதீர சூரன்’ படத்திற்கு பின் அடுத்து அவர் பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார். “சில நேரங்களில் மௌனம் என்பது ஒரு மிகப்பெரிய தயாரிப்புக்கான இடைவெளி. என்னை நெகிழ வைக்கும் கதைகளுக்காக இந்த ஆண்டு முழுவதும் காத்திருந்தேன். இப்போது, நான் மிகவும் மதிக்கக்கூடிய இயக்குநர்களுடன், முற்றிலும் மாறுபட்ட நான்கு திரைப்படங்களில் பணிகளைத் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நான்கு பயணங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் ஆவலாக இருக்கிறேன்.” எனச் … Read more

இயக்குனர் பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் வேர்ச்சொல் இலக்கிய விருது 2026!

தமிழ் இலக்கியத்தின் திசைவழிப்போக்கை மாற்றியதில் தலித் இலக்கியத்திற்கு முக்கியப் பங்குண்டு. இது குறித்த விருது விழா ஒன்றை பா.ரஞ்சித் ஒருங்கினைக்கிறார்.

Arya: "அப்படிச் செய்தால் படம் காலியாகிடும்!" – ஆர்யா ஓபன் டாக்

ஆர்யா, கெளதம் கார்த்திக், மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்திருக்கும் ஸ்பை த்ரில்லர் திரைப்படமான ‘மிஸ்டர் எக்ஸ்’ இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் ஆர்யா, அவருடைய கரியரில் பல மல்டி ஸ்டாரர் படங்களைச் செய்திருக்கிறார். அப்படியான மல்டி ஸ்டாரர் படங்களைத் தேர்வு செய்வது பற்றி சினிமா விகடனுக்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் ஆர்யா. ஆர்யா பேசுகையில், “ராஜா ராணி திரைப்படத்தில் நான் டபுள் கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது. ஒருவருடைய கேரக்டர் வலுவாக இருந்தால்தான், இன்னொரு கேரக்டர் … Read more

ஜி.வி.பிரகாஷ் இசையில் காந்தி கிருஷ்ணாவின் 'பிரேக்ஃபாஸ்ட்' மிரட்டல் டீசர்

கடும் கோடை வெயிலில் இதம் தரும் தென்றலை போல காதல், நெகிழ்ச்சி மற்றும் மனதை வருடும் உணர்வுகளோடு ‘பிரேக்ஃபாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆத்மார்த்தமான ரொமாண்டிக் அனுபவத்தை இந்தப் படத்தில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா தர இருக்கிறார் என்பது டீசரில் தெளிவாகியுள்ளது.  

Jananayagan: "எடிட்டரை குற்றம் சொல்ல வேண்டாம்; குற்றவாளியை போலீஸ் நெருங்கிவிட்டது!" – ஃபெஃப்சி

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதமானதால் படத்தின் ரிலீஸ் அப்போது தடைப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்தது. இந்த விஷயம் படக்குழுவினர் உட்பட பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விஜய் – பூஜா ஹெக்டே| ஜனநாயகன் ரிலீஸுக்கு முன்பே படம் கசிந்திருப்பதால், இதற்கு படத்தின் படத்தொகுப்பாளரே காரணம் என இணையத்தில் குற்றச்சாட்டு வைத்து பலர் பேசி வருகிறார்கள். … Read more