இந்தி திணிப்பு – முன்னாள் நீதிபதியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

புதிய கல்விக் கொள்கையின் மூலம் மீண்டும் இந்தி திணிக்கப்படுவதாக கருத்துகள் தென் இந்தியாவில் எழுந்துள்ளன. மத்திய அரசு கொண்டுவர இருக்கும் புதிய கல்விக்கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கை தென்னிந்தியாவில் பலமான எதிர்ப்புகளை சந்தித்துள்ளது. இதன் மூலம் மீண்டும் இந்தியும் , சமஸ்கிருதமும் மக்கள் மீது திணிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு இது பற்றி சர்ச்சையான கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில் ‘ஏன் இந்தி மற்ற மொழிகளை விட அதிக முக்கியத்துவம் … Read more இந்தி திணிப்பு – முன்னாள் நீதிபதியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

தற்காலிக பெண் அரசு ஊழியர்களுக்கு , பேறு கால விடுப்பு 6 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக உயர்வு !! தமிழக அரசு

இது தொடர்பாக பணியாளர் , நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் ஸ்வர்ணா வெளியிட்டஅரசாணையில் கூறியிருப்பதாவது ; தமிழக அரசில் நிரந்தர பணியில் உள்ள பெண் ஊழியர்கள், ஆசிரியைகளுக்கு பேறு கால விடுப்பு 6 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக உயர்த்தப்பட்டது. இந்த சலுகை தற்போது தமிழக அரசில் தற்காலிகப் பணியில் உள்ள பெண் ஊழியர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சில துறைகளில் அவசர நிலை ஏற்படும்போது தற்காலிகமாக ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களில் பெண் ஊழியர்களும் அடங்குவர். இவர்கள் … Read more தற்காலிக பெண் அரசு ஊழியர்களுக்கு , பேறு கால விடுப்பு 6 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக உயர்வு !! தமிழக அரசு

கோழிக்கோடு : விபத்தே இல்லாமல் 30 வருடங்கள் விமானம் ஓட்டியவர் கேப்டன் தீபக் வி. சாத்தே!

கடந்த 30 ஆண்டுகளாக விமானம் ஓட்டிவரும் விமானி தீபக் வி. சாத்தே கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தது ஏர்இந்தியா நிறுவன ஊழியர்களை சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து இந்தியர்களை ஏற்றிக் கொண்டு கோழிக்கோடு வந்த ஏர்இந்தியா விமானம் ஓடுதளத்தில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தின் விமானி தீபக் வி. சாத்தே உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர். மும்பையை சேர்ந்த விமானி தீபக் வி. சாத்தே 30 ஆண்டுகளாக விமானம் ஓட்டிய அனுபவம் … Read more கோழிக்கோடு : விபத்தே இல்லாமல் 30 வருடங்கள் விமானம் ஓட்டியவர் கேப்டன் தீபக் வி. சாத்தே!

பள்ளி , கல்லூரிகள் செப்டம்பர் 1

கொரோனா பாதிப்பால் , நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதுவரை 3 கட்டமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், பள்ளி, கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதிக்கவில்லை. இந்நிலையில், 4 – ம் கட்ட ஊரடங்கு தளர்வின் போது, பள்ளி, கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக முடிவு செய்துள்ள மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் , சமீபத்தில் நடந்த சுகாதாரத்துறை … Read more பள்ளி , கல்லூரிகள் செப்டம்பர் 1

விமான விபத்து !! விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு !! தொடங்கிய விசாரணை..

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்பொழுது விபத்தில் சிக்கியது.   இதில் விமானம் இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.  நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  அவர்கள் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த விபத்தில் சிக்கிய விமானத்தின் இயந்திரம் எந்த பாதிப்புக்கும் உட்படவில்லை. … Read more விமான விபத்து !! விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு !! தொடங்கிய விசாரணை..

'இது வேற லெவல் ட்ரிக் ஷாட்' – காலால் கூடைப்பந்து ஆடும் பிரபல நடிகர்..!

நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். ‘எதிர்நீச்சல்’, ‘தமிழ்ப்படம்-2′ மற்றும் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து ‘கத்தி’, ‘பைரவா’ போன்ற படங்களில் நடித்துள்ள சதீஷ், தனது தனித்துவமான நகைச்சுவையால் ரசிகர்களை ஈர்த்தவர். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட சதீஷ், பிரபல நடிகரும் நாடக கலைஞருமான மறைந்த திரு. Crazy மோகன் அவர்களுடன் … Read more 'இது வேற லெவல் ட்ரிக் ஷாட்' – காலால் கூடைப்பந்து ஆடும் பிரபல நடிகர்..!

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவி – தமிழக முதல்வர்!!

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவி – தமிழக முதல்வர்!! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். Zee Media ஹைலைட்ஸ் அவசரகால பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு 5,000 ரூபாய் நிதி உதவி – முதல்வர். 1500 பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக புதிய தொழில்கள் விரைவில் உருவாக்கப்படும் – முதல்வர். 5,982 பயனாளிகளுக்கான வளர்ச்சிப் பணிகளுக்காக இதுவரை … Read more ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவி – தமிழக முதல்வர்!!

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம்! பிரதமர் மோடி அறிவிப்பு!

கேரள மாநிலத்தின் பல இடங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிலாம்பூர் பகுதியில் தொடர் கனமழையால் தண்ணீர் பெருக்கெடுத்து, தெருக்களில் தேங்கி நிற்கிறது. இந்நிலையில், இன்று அதிகாலை, ராஜமலை அருகே உள்ள பெட்டிமுடி என்கிற பகுதியில் அமைந்துள்ள தேயிலை எஸ்ட்டேட் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, எஸ்டேட் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்புகள் மண்ணில் சரிந்தன. அங்கு நிலச்சரிவு ஏற்பட்டதில் பலர் இறந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு இருந்த குடியிருப்புகளில் சுமார் 85 பேர் … Read more நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம்! பிரதமர் மோடி அறிவிப்பு!

ஈரானில் கரோனா பாதிப்பு 3,22,567 ஆக அதிகரிப்பு

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,450 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரான் சுகாதார அமைப்பு தரப்பில், “ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,450 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரானில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,22,567 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் கரோனாவுக்கு மேலும் 156 பேர் பலியாக கரோனாவுக்கு இதுவரை 18,132 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரானில் கரோனா இறப்பு அரசு கூறுவதைவிட முன்று … Read more ஈரானில் கரோனா பாதிப்பு 3,22,567 ஆக அதிகரிப்பு

50 பில்லியன் டாலர்களுக்கு டிக் டாக்கை வாங்குகிறதா மைக்ரோசாஃப்ட்?

சீன நிறுவனமான டிக் டாக்கின் அமெரிக்க வியாபாரம் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் அதன் செயல்பாட்டையும் வாங்கி கையகப்படுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முயன்று வருகிறது. கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்குப் பின், சீன நிறுவனமான டிக் டாக், ஷேர் இட், யுசி பிரவுசர் உள்ளிட்ட 47 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் செயலியைத் தடை செய்யும் குரல் … Read more 50 பில்லியன் டாலர்களுக்கு டிக் டாக்கை வாங்குகிறதா மைக்ரோசாஃப்ட்?