கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் உண்ணாவிரதம்…

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் உண்ணாவிரதம் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நீதிபதிகளையும், நீதிமன்றத்தையும் அவமதித்த வழக்கில், 6மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சவுக்கு சங்கர், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அங்கு அவர் உண்ணாவிரதம் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில், சவுக்கு சங்கரை தமிழகஅரசு நிரந்தர பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. ஏற்கனவே சங்கர் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிய நிலையில், அரசு தகவல்களை கசிய … Read more

12ம்வகுப்பில் துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரிகளில் சேரலாம்! அமைச்சர் பொன்முடி…

சென்னை: துணைத்தேர்வு எழுதி 12ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரிகளில் சேரலாம் என உயர்கல்வித்துறை  அமைச்சர் பொன்முடி கூறினார். மேலும்,  ஓ.சி. பேருந்து கட்டணம் பற்றி விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்திருக்க வேண்டிய தில்லை என்று தெரிவித்தார். ‘சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  ஓ.சி. பேருந்து கட்டணம் பற்றி விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டியதில்லை என விளக்கம் கொடுத்ததுடன், 12- ஆம் துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாண … Read more

‘அச்ச, அம்மே ’ வாசகங்களோடு நெல்லை அருகே கேரள தொடர்புடைய புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு

நெல்லை: நெல்லை அருகே வீரளப்பெருஞ்செல்வி கிராமத்தில் கேரள தொடர்புடைய பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மையம் சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் பாளையங்கோட்டை  அருகே 480 ஆண்டுகளுக்கு முற்பட்ட முன்னீர்பள்ளம் செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டதன் வாயிலாக முன்னீர்பள்ளம் கேரள மன்னன் பூதல வீர உன்னி கேரள வர்மன் ஆட்சியின் கீழ் இருந்தது உறுதி செய்யப்பட்டு இருந்தது.  இந்நிலையில் பாளை அருகே வீரளப்பெருஞ்செல்வி கிராமத்தில் … Read more

ராமநாதபுரம்: அரசுப் பள்ளியில் வினாத்தாள் லீக்; பெண் தலைமை ஆசிரியை உட்பட மூன்று ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.மணக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 6,7,8 வகுப்புகளுக்கான அறிவியல் பாட முதல் பருவத் தேர்வு நேற்று நடைபெறவிருந்தது. ஆனால் அதற்கான வினாத்தாள் நேற்று முன்தினமே அந்த வகுப்புகளின் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தேர்வுக்கு முன்னரே அறிவியல் வினாத்தாள் வெளியானது குறித்து ஆசிரியர் குழுக்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவியது. அதனையடுத்து முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்டக் கல்வி அலுவலரின் விசாரணைக்கு உத்தரவிட்டார். லிக் செய்யப்பட்ட வினாத்தாள் அதன்படி ராமநாதபுரம் மாவட்டக் கல்வி … Read more

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு திக்விஜய் சிங் போட்டி…

டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்த அசோக் கெலாட், போட்டியிடவில்லை என்று தெரிவித் துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மனு வாங்கியுள்ளார். அவர் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  தலைவர் பதவிக்கு ஒருவருக்கு மேல் தலைவர் போட்டியிட்டால்  மட்டுமே தேர்தல் நடைபெறும் என்றும்,   காலை … Read more

திருமண ஆசை காட்டி ரூ. 50 லட்சத்துக்கு மேல் மோசடி செய்த வழக்கில் இளம் மருத்துவரின் ஜாமின் மனு தள்ளுபடி

சென்னை: திருமண ஆசை காட்டி ரூ. 50 லட்சத்துக்கு மேல் மோசடி செய்த வழக்கில் இளம் மருத்துவரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நாவாலுரை சேர்ந்த தினேஷ் கார்த்திக், பெண் மருத்துவர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு | “சரியான நேரத்தில் மிகச் சரியான முடிவு” – சீமான்

சென்னை: “மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழக அரசின் முடிவை வரவேற்கின்றேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழக அரசின் முடிவை வரவேற்கின்றேன். சரியான நேரத்தில் மிகச் சரியாக முடிவெடுத்த … Read more

புளோரிடாவை தாக்கிய சூறாவளி | வீதிக்கு வந்த சுறா; காற்றின் வேகத்தில் சிக்கிய செய்தியாளர் – வீடியோ

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் புதன்கிழமை அன்று இயன் என்ற சூறாவளி கரையைக் கடந்தது. அப்போது மோசமான சேதம் அங்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூறாவளியால் சுறாக்கள் சில கடலில் இருந்து வீதிகளுக்கு அடித்து வரப்பட்டுள்ளன. இந்த பாதிப்பை தொகுத்து செய்தியாக வழங்கிக் கொண்டிருந்த செய்தியாளர் ஒருவர் காற்றின் வேகத்தில் சிக்கி சிறிது தூரம் அடித்துச் செல்லப்பட்டார். இந்த சூறாவளி அமெரிக்காவை தாக்கிய மிகவும் மோசமான சூறாவளிகளில் ஒன்று என சொல்லப்படுகிறது. இந்த சூறாவளி கரையை கடந்தபோது பதிவான … Read more

RSS பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது ஏன்? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 471 திருக்கோவில்களில் கையடக்க கணினி மூலம் அர்ச்சனை மற்றும் சிறப்பு பூசைகளுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப திருக்கோயில்களில் அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு பணம் செலுத்த கையடக்க கணினி வாயிலாக டிஜிட்டல் பண பரிவர்த்தன முறை … Read more

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு.. தமிழக காவல்துறை அதிரடி..!

சட்டம் – ஒழுங்கு பிரச்சனை காரணமாக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் அணிவகுப்பு மற்றும் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வரும் அக்டோபர் 2-ம் தேதி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு மற்றும் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து, பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து கடந்த 22-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் நிகழும் சட்டம் – ஒழுங்கும் பிரச்சனை காரணமாக மத … Read more