வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது! இன்றும் நாளையும் கனமழை

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக இன்றும், நாளையும் சென்னை உள்படபல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் இன்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த தாழ்வு பகுதியாக (புயல்) வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடலோர பகுதியை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நெருங்கும் … Read more

Diwali: குழந்தைகளுக்குக் கிடைத்த தீபாவளி காசு; என்ன செய்யலாம்?

தீபாவளி மகிழ்ச்சிகரமாக முடிந்துவிட்டது. இந்தத் தீபாவளிக்குப் பல குழந்தைகளுக்கு வீட்டுப் பெரியவர்களிடம் இருந்து புது டிரஸ் அன்பளிப்பாகக் கிடைத்த அதே நேரத்தில் 100, 200 எனத் தீபாவளிப் பரிசுப் பணமும் கிடைத்திருக்கும். தாத்தா, பாட்டி, மாமா, சித்தப்பா என ஒவ்வொருவரிடம் இருந்து குழந்தைகளுக்குக் கிடைத்த இந்தத் தீபாவளிப் பணமே 500, 1000 எனச் சேர்ந்திருக்கும். இந்தப் பணத்தை என்ன செய்யலாம் என இன்றைக்குப் பல பெற்றோர்கள் யோசித்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கான பதில் இனி… குழந்தைகளுக்கு அன்பளிப்பாகக் … Read more

வடகிழக்கு பருவமழை தீவிரம்: மாவட்ட ஆட்சியார்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொளி ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,  முதல்வர் ஸ்டாலின்  இன்று மழை பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியார்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் அக்டோபர் 16ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக மிதமானது முதல் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகளின் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருவதுடன், பல பகுதிகளில் பயிர்களும் மழை நீரில் மூழ்கி … Read more

இயக்குநராகும் விஷால்; இளையராஜாவின் அடுத்த சிம்பொனி – தீபாவளியை முன்னிட்டு வெளியான அப்டேட்டுகள்

தீபாவளியை முன்னிட்டு நேற்று (அக்.20) திரையுலகில் சில அப்டேட்டுகள் வெளியாகி இருக்கின்றன. அவை என்னென்ன என்று பார்ப்போம்.  இயக்குநராகும் விஷால்  சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘மகுடம்’ என தலைப்பு வைத்துள்ளனர். இது விஷாலின் 35வது படமாக உருவாகிறது. இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் மற்றும் அஞ்சலி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். விஷால் … Read more

அறுவடை நெல் கொள்முதலில் அரசு மெத்தம்! அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: அறுவடை நெல் கொள்முதலில் அரசு மெத்தனப் போக்குடன் நடந்துகொள்வதாகவும்,  குறுவை பருவ நெல் கொள்முதலில் நடக்கும் அநீதிகளையும், குளறுபடிகளையும் பலமுறை சுட்டிக்காட்டியும் அவற்றை சரி செய்ய தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். அறுவடை செய்யப்பட்ட நெல்லில் 40% கூட கொள்முதல் செய்யப்படவில்லை எனவும் உழவர்களை கொல்லாமல் கொல்லும் திமுக அரசு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,  … Read more

"உங்கள் திருமண ஆர்டருக்கு காத்திருக்கிறோம்" – ராகுல் காந்தியிடம் திருமணம் செய்யச் சொன்ன கடைக்காரர்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் மிகவும் பழமையான சந்தாவாலா மிட்டாய் கடைக்கு மிட்டாய் வாங்க சென்றார். அவரை கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் அன்புடன் வரவேற்றார். ராஜீவ் காந்தி காலத்தில் இருந்தே அவரது குடும்பம் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சந்தாவாலா மிட்டாய் கடையில்தான் இனிப்புகள் வாங்குவது வழக்கம். அதனால் ராகுல் காந்தி சந்தாவாலா மிட்டாய் கடையில் இருந்தவர்களிடம் மிகவும் உரிமையுடன் பேசினார். இனிப்புகள் செய்யும் இடத்திற்குச் சென்ற ராகுல் காந்தி … Read more

‘கருப்பு தீபாவளி’ வாழ்த்து போஸ்டர்! துாய்மை பணியாளர்களை தேடி தேடி கைது செய்த காவல்துறை…

சென்னை:   தூய்மை பணியை தனியாருக்கு தாரை வார்த்த சென்னை மாநகராட்சி மற்றும் திமுக அரசுக்கு எதிராக,  ‘கருப்பு தீபாவளி’ வாழ்த்து போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 10 மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இவை தவிர 5 மற்றும் 6 ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாரிடம் சென்னை மாநகராட்சி … Read more

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் இந்தியா – அநீதியைப் பழிவாங்கியுள்ளது! பிரதமர் மோடி கடிதம்..

டில்லி: உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக விரைவில் இந்தியா வளர்ச்சி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் மோடி,  இந்தியா  அநீதியை பழிவாங்கி உள்ளது  என்றும்  தீபாவளியையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக விரைவில் இந்தியா வளர்ச்சி பெறும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். ராமர் நீதியை நிலைநாட்டவும், அநீதியை எதிர்த்துப் போராடவும் தைரியம் அளித்துள்ளார். இதற்கு ஒரு சின்ன உதாரணத்தை கடந்த மாதம் … Read more