சென்னையில் பருவமழையால் ஏற்பட்ட 4,503 சாலை பள்ளங்கள் சீரமைப்பு
சென்னை: பருவமழையால் ஏற்பட்ட 4,503 சாலை பள்ளங்கள் மாநகராட்சி சார்பில் சீரமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் உள்ள உட்புற சாலைகளில்தார் சாலை, சிமென்ட் கான்கிரீட் சாலை மற்றும் இணைப்பு கற்கள் அமைக்கும் பணிக்காக 2025-26 நிதியாண்டில் 3,908 சாலைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 2,790 சாலைகள் முடிக்கப்பட்டுள்ளன, தற்பொழுது 207 சாலைகளில் சிமென்ட் கான்கிரீட் மற்றும் இணைப்பு கற்களைக் கொண்டு சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்து தட … Read more