செல்போன் செயலிகள் மூலம் லோன் வாங்க வேண்டாம்- காவல்துறை எச்சரிக்கை !

அவசர தேவைக்காக கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள கடன் செயலிகள் மூலம் லோன் பெற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் அலைபேசி செயலிகள் மூலம் அதிக வட்டிக்கு கடன் கொடுத்து, பின்னர் தொந்தரவு செய்யும் மோசடி கும்பல் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். அதுபோன்ற செயலிகளை, ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், ப்ளே ஸ்டோர் மற்றும் இணையத்தளங்களில் அதேபோன்ற கடன் வழங்கும் செயலிகள் அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் கடன் வாங்கும்போது, கடன் தொகையில் 30 சதவிகிதம் செயல்பாட்டு கட்டணமாக வசூலிக்கும் அந்த கும்பல், அதிக வட்டி விதித்து பணம் வசூலிக்கிறது.

loan

இந்த பணத்தை திருப்பி கட்டுவதற்கு 7 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படும். உதாரணதிற்கு ரூ5.,000 லோன் அப்ளை செய்யும் பட்சத்தில் ரூ.3500 மட்டுமே லோன் பெறுபவருக்கு கிடைக்கும். ரூ.1500 பிராசஸிங் பீஸாக எடுத்துக்கொள்ளப்படும்.

திருப்பி செலுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.200/- முதல் ரூ.500/- வரை வட்டி ஏறிக் கொண்டே செல்லும். பத்து நாட்கள் வரை பணம் திருப்பி செலுத்தாதவர்களுக்கு போன் மூலம் மிரட்டல்கள் வர துவங்கும். 
 loan
மேலும், அந்த செயலியின் மூலம் அலைபேசியில் உள்ள தொடர்பு எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் அபகரிக்கப்படுகின்றன. கடன்பெறுவோர் குறித்து தவறாகவும் ஆபாசமாகவும் அவர்களது நண்பர்கள், உறவினர்களின் அலைபேசிக்கு குறுஞ்செய்திகளை மோசடி கும்பல் அனுப்புகிறது. இதைத் தடுக்க பொதுமக்கள் இத்தகைய செயலிகளில் கடன் பெற வேண்டாமென சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.