மேற்கு வங்கத்தை தொடர்ந்து கேரளாவிலும் ஆட்டம் காட்டும் ஆளுநர்!

கேரளாவில் முதல்வர்
பினராயி விஜயன்
தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.

இநத நிலையில், திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் ஆரிப் முகமது கான், மாநில அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

அப்போது, ‘கேரளாவில் அமைச்சர்களிடம் தனிப்பட்ட முறையில் பல ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் இரண்டரை ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கும், மாநில அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இது, அதிகார துஷ்பிரயோகமாகும்.

மாநில மக்களின் வரி பணத்தை தவறாக பயன்படுத்துவது நியாயமல்ல. இந்த நடைமுறையை, மாநில அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையன்றால் இதற்கு முடிவு கட்டுவேன். மாநில அரசை நல்லபடியாக நடத்துவதற்கு மட்டும் நான் இங்கு வரவில்லை.

அரசியலமைப்பிற்கு உட்பட்டு மாநில அரசின் செயல்பாடுகள் இருப்பதை உறுதிப்படுத்தவே, நான் இங்கு ஆளுநராக உள்ளேன். அரசாங்கத்தில் உள்ள யாருக்கும், ஆளுநரை கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது” என்று கவர்னர் ஆரிப் முகமது கான் கூறினார்.

ஆளுநரின இந்த கருத்து கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநில சட்டமன்றத்தை அந்த மாநில ஆளுநர் அண்மையில் முடக்கிய நிலையில், கேரள மாநில ஆளுநரின் ந்த கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.