வசூலில் தெறிக்கவிடும் ‘வலிமை’: நான்கே நாட்களில் ரூ.100 கோடி வசூல்!

அஜித்தின் ‘வலிமை’ வெளியான நான்கே நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் ‘வலிமை’ கடந்த 24 ஆம் தேதி வெளியானதிலிருந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். கடந்த ஆண்டு தமிழகத்தில் வெளியான படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை ’வலிமை’ முறியடித்துள்ளது. வெளியான முதல் நாளிலேயே ரூ.36,14 கோடி ரூபாய்யும், இரண்டாவது நாளில் ரூ.24.62 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.20.46 கோடியும், நான்காம் நாளில் ரூ.27.83 கோடியும் வசூலித்து மொத்தம் 109.08 கோடி ரூபாய்யை தமிழகத்தில் மட்டுமே வசூலித்ததாக சினிமா துறையினரால் சொல்லப்படுகிறது.

image

தற்போது, 14 நிமிடக் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதால் வரும் வாரங்களில் ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகரிப்பால் இன்னும் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, நல்ல வசூலைக் குவித்துக்கொண்டிருப்பதால் விநியோகஸ்தர் இயக்குநரை சந்தித்து நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.