உத்தரகாண்ட்: “காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ரூ.500-க்கும் குறைவாக காஸ் சிலிண்டர்!’ – ராகுல் காந்தி

5 மாநில தேர்தலை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14 -ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கிச்சாவின் தேராய் பகுதியில் 1,000 விவசாயிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்து, உத்தரகாண்ட் மாநில மக்களுக்கு 4 வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். நரேந்திர மோடி – ராகுல் காந்தி “4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்வோம், சிலிண்டர் விலையை ரூ. … Read more

நெல்லையில் திருட்டு வழக்கில் கைதானவன் லாக்அப்பில் உயிரிழந்தவன் கொலையாளி என தகவல் <!– நெல்லையில் திருட்டு வழக்கில் கைதானவன் லாக்அப்பில் உயிரிழ… –>

நெல்லையில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவன் லாக்அப்பில் உயிரிழந்த நிலையில் அவன் ஒரு கொலையாளி என விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலப்பாளையத்தை சேர்ந்த சுலைமான் என்பவனை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீசார் நேற்று முன்தினம் பைக் திருட்டு வழக்கில் கைது செய்தனர். இந்த நிலையில் காவல் நிலையத்தில் சுலைமான் திடீரென உயிரிழந்தான். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு கொக்கிரகுளம் அருகில் தாமிரபரணி ஆற்றில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது உசேன் என்பவர் கழுத்து அறுக்கப்பட்ட … Read more

ரயில்வே பணியில் சேர விரும்புபவர்கள் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்: ரயில்வே துறை அறிவிப்பு

ரயில்வே பணிகளில் சேர விரும்புவர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ரயில்வே பணிகளில் சேர விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வமற்ற விளம்பரங்கள் மற்றும் இடைத்தரகர்களை நம்பி, பணம் கொடுத்து ஏமாந்து போவதான செய்திகள், ரயில்வே நிர்வாகத்தின் கவனத்துக்கு வந்துள்ளன. ரயில்வே பணிகளில் சேர அதிகாரப்பூர்வ ரயில்வேபணியாளர் தேர்வாணையம் (ஆர்ஆர்பி) மற்றும் ரயில்வே பணியாளர் தேர்வு முகமை (ஆர்ஆர்சி) ஆகியவற்றின் வாயிலாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ரயில்வே … Read more

ஒருமித்த கருத்து ஏற்பட்டால் சமூக வலைதளங்கள் மீது கூடுதல் கட்டுப்பாடுகள்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

ஒருமித்த கருத்து ஏற்பட்டால் சமூக வலைதளங்கள் மீது கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டுவர அரசு தயார் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று முன்தினம் மாநிலங்களவையில் தெரிவித்தார். கடந்த ஆண்டு சமூக வலைதளங்கள் மீது மத்திய அரசுபுதிய கட்டுப்பாடுகளை விதித்தது. கருத்து சுதந்திரத்தைபறிக்கவே மத்திய அரசு சமூகவலைதளங்கள் மீது கட்டுப்பாடுகளை கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் கூறும்போது, ‘‘சமூகவலைதளங்களை … Read more

ஆகஸ்ட் 3 முதல் ஃப்ளீட்ஸ் வசதியை நீக்கும் ட்விட்டர்

பயனர்களிடம் கிடைத்த மிகச் சுமாரான வரவேற்பைத் தொடர்ந்து ஃப்ளீட்ஸ் வசதியை ட்விட்டர் நிறுவனம் ஆகஸ்ட் 3 முதல் நீக்கவுள்ளது. கடந்த நவம்பர் மாதம் ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஃப்ளீட்ஸ் என்கிற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. பயனர்கள் ட்வீட் செய்வது மட்டுமல்லாமல், 24 மணி நேரம் மட்டுமே தோன்றும் ட்வீட்டுகளை/ தகவல்களை/ இணைப்புகளை இதில் பகிரலாம். ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பின் ஸ்டோரி/ ஸ்டேட்டஸ் வசதிக்கு இணையாக இது அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், வெர்டிகல் வடிவில் பகிர்வு, … Read more

நாளை முதல் கல்லூரிகள் திறப்பு: மாநில அரசு முடிவு!

கொரோனா பரவல் இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு அதிகரிக்கத் தொடங்கிய போது, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதையடுத்து, தொற்று குறைந்து கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டதும், இரண்டாம் அலை படு வேகமாக பரவியது. குறிப்பாக, வட மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடியது. இதனால், பள்ளி, கல்லூரிகளை அனைத்து மாநிலங்களும் மூடின. அதன் தொடர்ச்சியாக, மீண்டும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டதும், தென் … Read more

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய மொராக்கோ சிறுவன் உயிரிழப்பு!

உலகம் முழுவதும் எவ்வளவோ நவீன வசதிகள் பெருகினாலும், உலகமே இயந்திரமயமானாலும், ஆழ்துளை கிணறுகளில் சிக்கி நிகழும் உயிரிழப்புகள், குறிப்பாக, சிறுவர்களின் உயிரிழப்புகள் தொடர் கடையாகி வருகின்றன. அந்த வகையில், மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட ஆப்பிரிக்க நாடானா மொராக்கோவின் வடக்கு பகுதியில் இகரா என்ற கிராமம் அருகே ஒன்றரை அடி விட்டம், 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. இந்த கிணற்றில் கடந்த செவ்வாய்கிழமையன்று … Read more

தனுஷ், ஐஸ்வர்யா பிரிய காரணமான 'அந்த 2 பேர்' யார்?

தனுஷும், ஐஸ்வர்யாவும் தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி அறிவித்தனர். பிரிவை அறிவித்துவிட்டு அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட்டார்கள். இந்நிலையில் தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிய என்ன காரணம், யார் காரணம் என்று எல்லாம் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாகவே அவ்வப்போது மனஸ்தாபம் ஏற்பட்டு வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் வேலையில் நிம்மதியை தேட ஆரம்பித்துவிட்டார்கள். தனுஷ் படங்களிலும், ஐஸ்வர்ய தன் ஃபிட்னஸ் சென்டர், ஆன்மீகத்திலும் நிம்மதியை தேடி பெற்றிருக்கிறார்கள். பல … Read more

முக்கியஸ்தர் ஒருவரின் பதவியை பறிக்கத் தயாராகும் கோட்டாபய?

ராகம மருத்துவ கல்லூரியில் இடம்பெற்ற சித்திரவதை சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு மூன்று சிரேஷ்ட அமைச்சரவை அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலுக்கு வாகனங்களை வழங்கியதாக கூறப்படும் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கீர்த்தி வீரசிங்கவை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன், அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை பயன்படுத்தி ராகம … Read more

இந்தியாவில் 1 லட்சத்தை நோக்கி குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு <!– இந்தியாவில் 1 லட்சத்தை நோக்கி குறைந்த ஒருநாள் கொரோனா பாதி… –>

1 லட்சத்தை நோக்கி குறைந்த கொரோனா பாதிப்பு தினசரி கொரோனா மரணங்களும் குறைகிறது நாட்டின் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது கடந்த 24 மணி நேரத்தில், 1.07 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது கடந்த 24 மணி நேரத்தில், 2.13 லட்சம் பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 865 பேர் உயிரிழப்பு – மத்திய சுகாதாரத்துறை Source link