திரிபுராவில் சைக்கிள் டயரில் மறைத்து வங்காளதேச டாக்கா பணம் கடத்த முயற்சி <!– திரிபுராவில் சைக்கிள் டயரில் மறைத்து வங்காளதேச டாக்கா பணம… –>

திரிபுராவில் சைக்கிள் டயரில் மறைத்து கடத்த முயன்ற 10 லட்சம் வங்காளதேச டாக்கா பணத்தை எல்லைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். வங்காளதேச எல்லையான கோகுல்நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், புது வகையான கடத்தலை கண்டறிந்துள்ளனர். பணக் கடத்தல் குறித்து முன்கூட்டியே ரகசியத் தகவல் கிடைத்ததாகவும், சோதனை செய்ததில் 9 லட்சத்து 97 ஆயிரம் வங்காளதேச டாக்கா பணம் சிக்கியதாகவும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.   Source link

'கொஞ்சம் நிதானத்தை கடைப்பிடியுங்கள்' உக்ரைனுக்கு ஜேர்மனி எச்சரிக்கை!

ஆயுத ஏற்றுமதிக்கு தடை விதித்ததற்காக தொடர்ந்து ஜேர்மனியை விமர்சித்துவரும் உக்ரைனுக்கு ஜேர்மன் அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் ஆயுதங்களையும், இராணுவ படைகளையும் அனுப்பிவருகின்றன. ஆனால், நட்பு நாடுகளில் ஒன்றான ஜேர்மனி, போர் மண்டலங்களுக்கு ஆயுத ஏற்றுமதியை அனுமதிக்க முடியாது என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. அதற்கு பதிலாக, ஹெல்மெட்கள், மருத்துவ உபகரணங்கள் போன்ற உதவிகளை கொடுப்பதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், … Read more

விஷ்ணு விஷாலின் ‘எப்.ஐ.ஆர்.’ திரைப்படத்துக்கு இஸ்லாமிய அமைப்பு எதிர்ப்பு!

“நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள எப்.ஐ.ஆர். திரைப்படம் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறது” என இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விஷ்ணு விஷால் நடித்து தயாரிக்க, மனு ஆனந்த இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் எப்.ஐ.ஆர். இப்படத்தை வரும் 11ம் தேதி தமிழ்நாடு முழுதும் திரையரங்கில், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது. இந்நிலையில், இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் தடா ரஹீம், எப்.ஐ.ஆர். படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். … Read more

ஜூனியர் உலகக்கோப்பையை கைப்பற்றி இந்திய கிரிக்கெட் அணி சாதனை

ஆன்டிகுவா: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வந்தது.ஆன்டிகுவாவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.  இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். இதனால் 61 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தத்தளித்தது. இந்திய வீரர்கள் ராஜ் பவா, ரவி குமாரின் பந்து வீச்சில் தடுமாறிய இங்கிலாந்து அணி … Read more

சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500க்கு குறைவாக வழங்கப்படும் – காங்கிரஸ் வாக்குறுதி

ஹரித்துவார்: உத்தர காண்ட் சட்டப்சபைத் தேர்தலையொட்டி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, வாக்காளர்களுக்கு நான்கு வாக்குறுதிகளை வழங்கினார்.  உத்தர காண்ட் மாநிலத்தில் 4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, எல்.பி.ஜி. சிலிண்டர்களின் விலையை ரூ. 500க்கு குறைவாக நிர்ணயம் செய்தல், 5 லட்சம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 40,000 ரூபாய் மற்றும் வீட்டு வாசலில் மருத்துவ வசதிகள் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.  ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி … Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு – ஐந்து நாள் மீட்பு முயற்சி தோல்வியில் முடிந்தது

இகரா: மொராக்கோவின்  வடக்கு பகுதியில்  இகரா என்ற கிராமம் அருகே 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த செவ்வாய்கிழமை ராயன் அவ்ரம் என்ற 5 வயது சிறுவன் இதில் விழுந்து சிக்கிக் கொண்டான்.  உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் இயந்திரங்களின் உதவியுடன் நிலத்தை தோண்டும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர். சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் தண்ணீர் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. விழுந்தவுடன் என்னை தூக்குங்கள் … Read more

பிப்-06: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் தலைமறைவு வாழ்க்கை; 29 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினான்; மும்பை குண்டுவெடிப்பு தீவிரவாதி: இந்திய புலனாய்வு அமைப்பு நடவடிக்கை

புதுடெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 29 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தீவிரவாதியை ஐக்கிய அரசு அமீரகத்தில் இந்திய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. இவனை விரைவில் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மும்பை மாநகரில் கடந்த 1993ம் ஆண்டு ஒரே நேரத்தில் 12 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், 257 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 1400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ரூ.27 கோடி மதிப்புள்ள சொத்துகள் சேதமடைந்தன. இந்த … Read more

லதா மங்கேஷ்கர் கவலைக்கிடம் | Dinamalar

மும்பை,-கொரோனா பாதிப்பால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. இதனால் ‘வென்டிலேட்டர்’ உதவியுடன் சிகிச்சை தொடர்கிறது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.மும்பையை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், 92, கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சை பிரிவில், ‘வென்டிலேட்டர்’ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதால் ஓரளவு குணமடைந்தார். … Read more