கேள்வி எழுப்பிய மீடியா; கேமராவை தள்ளிவிட்ட அமைச்சர்: ராஜ கண்ணப்பனை துரத்தும் சர்ச்சை

போக்குவரத்துத் துறையில் சென்னை துணை ஆணையராக இருந்த நடராஜனுக்கு எதிராக லஞ்ச புகாரில் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டபோது செய்தியாளரின் கேமராவை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தட்டிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக போக்குவரத்து துறையில் சென்னை துணை ஆணையராக இருந்த நடராஜன் அலுவலகத்தில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடந்தது. அந்த சோதனையில் 35 லட்சம் ரூபாய் ரொக்கம், வரவு செலவு கணக்கு டைரி பறிமுதல் செய்யப்பட்டது. … Read more

கூடுகிறது பா.ம.க. அவசர செயற்குழுக் கூட்டம்.! நாள் குறித்த ஜி.கே.மணி.!

சென்னையில் ஏப்ரல் 2 சனிக்கிழமை பா.ம.க. அவசர செயற்குழுக் கூட்டம் கூட உள்ளதாக, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில், “பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் நாளை மறுநாள் (02.04.2022) சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னை சிவானந்தா சாலையில் பொதிகைத் தொலைக்காட்சி எதிரில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி … Read more

கோவையில் திறந்த வெளி விவசாய கிணற்றுக்குள் விழுந்த மான்குட்டியை பத்திரமாக மீட்ட வனத்துறையினர்.!

கோவை அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த மான்குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். சூலூர் அடுத்த பீடம்பள்ளி கிராமத்தில் சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான திறந்தவெளி விவசாய கிணற்றுக்குள் நேற்று 2 வயதே உடைய காட்டு மான்குட்டி விழுந்திருந்ததை கண்ட அப்பகுதியினர் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற வனத்துறையினர் கிணற்றுக்குள் இறங்கி மானை வலை வைத்து பத்திரமாக மீட்டு, அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மானுக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் ஏற்படாததையும், மான் ஆரோக்கியமாக இருப்பதையும் உறுதி … Read more

'சுங்கக் கட்டணங்களையும் உயர்த்தி மக்களை வதைப்பதா?' – மத்திய அரசுக்கு தினகரன் கண்டனம்

சென்னை: பெட்ரோல் விலை உயரும் நிலையில், சுங்கக் கட்டணங்களையும் உயர்த்தி மக்களை வதைப்பது நியாயமா? என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், சுங்கக் கட்டணங்களையும் நாளைமுதல் (ஏப்.1) உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சுமார் 24 இடங்களில் சுங்கக் கட்டணம் அதிகரிக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவை பல்வேறு அரசியல் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து தினகரன் … Read more

இலங்கை அதிபர் மாளிகை முற்றுகை: அதிகரிக்கும் பதற்ற நிலை; ஊரடங்கு அமுல்!

இலங்கையில் கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை பல வாரங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் மக்கள் தலைநகர் கொழும்பில் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகக் கோரி கொழும்பின் புறநகர் மிரிஹானவில் உள்ள அதிபரின் இல்லம் அருகே 5,000-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தி, காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். போராட்டங்களை ஒடுக்க துணை ராணுவ பொலிஸ் … Read more

ரஷிய வெளியுறவு மந்திரி இந்தியா வருகை- உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் மோடியுடன் இன்று பேச்சுவார்த்தை

புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார்.   அவரது அதிகாரப்பூர்வ பயணத்தை வரவேற்பதாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் இன்று பிரதமர் மோடியையும், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரையும் ரஷிய வெளியுறவு மந்திரி லாவ்ரோவ் சந்தித்து பேசுகிறார்.  இந்த சந்திப்பின்போது உக்ரைன் மீது ரஷியா எடுத்துள்ள நடவடிக்கை மற்றும் … Read more

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்- ரஷியா போர்: கீவ் நகரை சுற்றி வளைத்து தாக்கும் ரஷிய படைகள்

   01.04.2022 04.00: உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றி ரஷிய படைகள் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருவதாக பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.  இந்த வாரம் உக்ரைன் தலைநகர் அருகே தனது ராணுவ நடவடிக்கையை குறைப்பதாக மாஸ்கோ உறுதியளித்த போதிலும், அந்நாட்டு படைகளின் தாக்குதல் தொடர்வதாகவும் பிரிட்டன் உளவுத்துறை அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். 02.20: புதின் தனது ஆலோசகர்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்ற அமெரிக்காவின் கருத்தை ரஷியா நிராகரித்துள்ளது. அதிபர் புதின் மாளிகையில் என்ன நடக்கிறது என்பது … Read more

மாநிலங்களவையில் 72 எம்பி.க்கள் ஓய்வு அனுபவங்களை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: ‘பதவியில் இருந்து ஓய்வு பெறும் எம்பி.க்கள் தங்கள் அனுபவத்தை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்,’ என்று பிரதமர் மோடி பேசினார். முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, ஜெயராம் ரமேஷ் உட்பட 72 பேர் அடுத்தடுத்து ஜூலைக்குள் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறுகின்றனர். இவர்களுக்கு மாநிலங்களவையில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. அவர்களை பாராட்டி மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், ‘‘மக்களால்  தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், புதிய சட்டம் அல்லது கொள்கைகளை வகுக்கும்போது மக்களின் எதிர்பார்ப்புகள், … Read more

கியூட் நுழைவு தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்| Dinamalar

சென்னை : நாடு முழுதும் உள்ள, 54 மத்திய பல்கலைகளில், பட்டப்படிப்பில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வான, ‘கியூட்’டிற்கு, நாளை முதல் விண்ணப்ப பதிவு துவங்க உள்ளது. மத்திய பல்கலைகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு, அந்தந்த நிறுவனங்கள் சார்பில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. சில நிறுவனங்கள், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கையை நடத்தின. இந்நிலையில், அனைத்து வகை மத்திய பல்கலைகளிலும், மாணவர் சேர்க்கை … Read more