அஞ்சல் நிலையங்களில் வங்கி சேவை திட்டத்தை செயல்படுத்த, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் தீவிரம்

இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களும் முக்கிய வங்கி அமைப்புடன் இணைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. 
இதன் மூலம் நிதி வைப்பு மற்றும் நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் ஏ.டி.எம்.கள் மூலம் கணக்குகளை கையாள முடியும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. 
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் அனைத்து விதமான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 
தமிழகத்தில் மொத்தம் உள்ள 4 மண்டலங்களில் சென்னை நகர மண்டலத்தில் இயங்கக்கூடிய 2189 அஞ்சல் நிலையங்கள் ஏற்கனவே மொத்த வங்கி சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளன. 
பணப்பரிமாற்ற வசதி நடைமுறைப்படுத்தப்பட்டால் அஞ்சலக சேமிப்புக் கணக்கில் இருந்து எந்தவொரு வங்கிக் கணக்கிற்கும், வங்கியிலிருந்து அஞ்சலக சேமிப்புக் கணக்கிற்கும் பணப்பரிமாற்றம் செய்ய இயலும்.
சென்னை மண்டலத்தில் உள்ள 2189 அஞ்சல் நிலையங்களில், 1784 அஞ்சல் நிலையங்கள் கிராமப்புரத்திலும், 405 அஞ்சல் நிலையங்கள் நகர்ப்புரத்திலும் செயல்பாட்டில் உள்ளன.  
மத்திய பட்ஜெட் அறிவிப்பு, மேலும் மக்கள் அஞ்சல் நிலைய சேமிப்புக் கணக்குகளை தொடங்க ஊக்கப்படுத்தும் என சென்னை நகர மண்டலம் அஞ்சல் துறை தலைமை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.