பற்றி எரிகிறது உக்ரைன்.. ரஷ்யா திடீர் ஆவேசம்.. 6வது நாள் போரில் பெரும் சேதம்!

ஆறாவது நாள் போர் பெரும் உக்கிரமாக மாறியுள்ளது. கார்கிவ் உள்ளிட்ட பல நகரங்களையும் ரஷ்யப் படைகள் மிகக் கடுமயைாக தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. விடிந்தது முதல் பல நகரங்களிலும் தாக்குதல் வேகம் பிடித்துள்ளதால் உக்ரைன் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ்தான் தற்போது பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. அந்த நகரின் போலீஸ் தலைமையகம், பல்கலைக்கழக கட்டடம் உள்ளிட்டவை ஏவுகணை வீச்சில் தரைமட்டமாகின.

ரஷ்ய பாராட்ரூப் படையினர் கார்கிவ் நகருக்குள் புகுந்து விட்டனர். இந்த நகரை விரைவில் ரஷ்யப் படைகள் பிடிக்கும் என்பதை உறுதி செய்வதாக உள்ளது. ஏற்கனவே நகரை சுற்றி வளைத்து உள்ளுக்குள்ளும் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தி வருகின்றனர் ரஷ்யப் படையினர் என்பதால் கார்கிவ் நகரம் விரைவில் வீழப் போகிறது.

ஒரே ஒரு “மிஸ்ஸைல்”.. மொத்த பில்டிங்கும் காலி.. பற்றி எரியும் கார்கிவ் போலீஸ் தலைமையகம்!

உக்ரைனின் தெற்குப் பகுதியில் ரஷ்ய ராணுவம் அதி தீவிர கவனம் செலுத்தி பல லாபங்களையும் பெற்றுள்ளது. அங்கு உக்ரைன் படைகள் கிட்டத்தட்ட செயலிழந்து போயுள்ளன. குறிப்பாக கெர்சான் நகரை ரஷ்யப் படைகள் கைப்பற்றி விட்டன. அந்த நகரில் உக்ரைன் படைகள் முற்றிலும் விரட்டப்பட்டு விட்டன.

வட கிழக்கில் உள்ளசுமி நகரில் மக்கள் பெரும் தாக்குதலை எதிர்பார்த்து பங்கர்களில் பதுங்க ஆரம்பித்துள்லனர். ரஷ்யப் படைகள் அதிரடித் தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய தாக்குதலில் டிவி கோபுரம் சேதமடைந்து விட்டதால் உக்ரைனில் டிவி ஒளிபரப்பு கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கெர்சான் வீழ்ந்தது

அதேபோல உக்ரைனின் தெற்கில் உள்ள கெர்சான் நகரை ரஷ்யப் படைகள் கைப்பற்றி விட்டன. ரஷ்யப்படைகள் உக்ரைனில் இதுவரை பிடித்த நகரங்களிலேயே இதுதான் பெரிய நகராகும். இதனால் உக்ரைன் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

வாய் தவறி உளறிய பிடன்.. “அயோ தப்பு தப்பு”.. கமலா கண்ணு எப்படி போகுது பாருங்க..!

கெர்சான் நகர் முழுவதும் தற்போது ரஷ்யப் படையினரின் நடமாட்டம் உள்ளது. கெர்சான் நகரின் ரயில் நிலையம், துறைமுகம் ஆகியவற்றை தனது கட்டுப்பாட்டுக்குள் ரஷ்யப் படைகள் கொண்டு வந்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.