தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்.. ஆகாஷ் அம்பானி சொல்வதை பாருங்க..!

இந்தியாவின் மிகப்பெரிய வணிக குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் குழுமம், மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு வணிக நிறுவனமாகும். ரிலையன்ஸ் குழுமம் தற்போது பல்வேறு புதிய வணிகங்களில் களமிறங்கி வருவதோடு, மிகப்பெரிய முதலீடுகளையும் செய்து வருகின்றது.

அந்த வகையில் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஸ்ட்ராடஜிக் பிசினஸ் வென்ச்சர்ஸ் லிமிடெட் நிறுவனம், அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான சான்மினா கார்ப்பரேஷனுடன் வணிக ரீதியிலான ஒப்பந்தம் செய்துள்ளது.

தங்கம் வாங்க இது சூப்பர் சான்ஸ்.. 3 நாள் ஏற்றத்திற்கு பிறகு வீழ்ச்சி.. எவ்வளவு குறைந்திருக்கு?

இந்த கூட்டு நிறுவனத்தில் ரிலையன்ஸ் ஸ்ட்ராடஜிக் பிசினஸ் வென்ச்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் 50.1% ஈக்விட்டி பங்கினையும், மீதமுள்ள 49.9% பங்கினை சான்மினாவும் வைத்துள்ளன.

அமெரிக்க நிறுவனத்தில் முதலீடு

அமெரிக்க நிறுவனத்தில் முதலீடு

இது குறித்து பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில், ரிலையன்ஸ் குழுமம் 1,670 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்வதன் மூலம், ரிலையன்ஸ் ஸ்ட்ராடஜிக் பிசினஸ் வென்ச்சர்ஸ் இந்த பங்கினை பெறும்.

இது குறித்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குனர் ஆகாஷ் அம்பானி, இந்தியாவில் உயர் தொழில் நுட்ப உற்பத்திக்கான சந்தை வாய்ப்பில் கணிசமான வாய்ப்பினை பெற, சன்மினாவுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

வளர்ச்சி& பாதுகாப்பு

வளர்ச்சி& பாதுகாப்பு

வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட இரண்டிலும் நாம் முன்னிலையில் இருக்க, டிஜிட்டல் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்தவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக தொலைத் தொடர்பு, தகவல் தொழில் நுட்பம், தரவு மையங்கள், கிளவுட், 5ஜி, ஆற்றல் மற்றும் பிற தொழில்களில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் முன்னிலை வகிக்க வேண்டும்

அதிரடி திட்டம்
 

அதிரடி திட்டம்

ஆக இந்த சர்வதேச கூட்டணி மூலம் இந்தியாவில் புதுமை மற்றும் திறனை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் இந்தியா மற்றும் உலகளாவிய தேவையினை பூர்த்தி செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

உயர் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு

உயர் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு

இந்த கூட்டு முயற்சியானது வளர்ச்சி சந்தைகள் மற்றும் தகவல் தொடர்பு நெட்வொர்க்கிங் (5ஜி, கிளவுட் உள்கட்டமைப்பு, ஹைபர்ஸ்கேல் டேட்டா சென்டர்கள்), மருத்துவம் மற்றும் சுகாதார அமைப்புகள், தொழிற்துறை மற்றும் கிளீன்டெக், பாதுகாப்பு, விண்வெளி, எண்ணெய்-க்கு உயர் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வன்பொருளுக்கு முன்னுரிமை அளிக்கும். தொலைத் தொடர்பு குழுமம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது.

இன்றைய பங்கு விலை நிலவரம்

இன்றைய பங்கு விலை நிலவரம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது என்.எஸ்.இ-யில் இன்று முடிவில், கிட்டதட்ட 1% குறைந்து, 2378.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 2414.85 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலை 2370.05 ரூபாயாகவும், இதன் 52 வார உச்ச விலை 2751.35 ரூபாயாகவும், இதே 52 வார குறைந்தபட்ச விலை 1876.05 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.

பி.எஸ்.இ-யில் இன்று முடிவில், கிட்டதட்ட 1% குறைந்து, 2378.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Akash Ambani is happy to work with Sanmina to promote high technology production internationally

Akash Ambani is happy to work with Sanmina to promote high technology production internationally/தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்.. ஆகாஷ் அம்பானி சொல்வதை பாருங்க..!

Story first published: Thursday, March 3, 2022, 17:49 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.