வெளியானது ஆதியின் ”கிளாப்” படபுதிய அப்டேட்…!

ஆதி
நடிப்பில் உருவாகியுள்ள ‘
கிளாப்
‘ படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்கத்தில் நடிகர் ஆதி நடித்துள்ள திரைப்படம் ‘கிளாப்’. வித்தியாசமான த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆதி ஒரு தடகள வீரராக நடித்துள்ளார்.

அகான்ஷா சிங்
மற்றும்
கிரிஷா குரூப்
ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன்
பிரகாஷ் ராஜ்
,
நாசர்
,
முனிஷ்காந்த்
,
மைம் கோபி
உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.பிரபல இசையமைப்பாளராக
இளையராஜா
இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பிரபல நடிகைக்கு வாட்ஸ் அப்பில் வந்த ஆபாச மெசேஜ்…!

பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐபி கார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இதற்கு காரணம் நடிகர் ஆதி ஒன்றை காலுடன் தடகள வீரராக நடித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் இன்றுமாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.