உத்தர பிரதேசத்தில் யார் ஆட்சி? வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள்!

உத்தரபிரதேச மாநிலத்தை அடுத்த ஐந்து ஆண்டுகள் யார் ஆள வேண்டும் என முடிவு செய்து மக்கள் வாக்களித்து முடித்துள்ளனர். ஏழு கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் இன்று மாலை 6 மணியுடன் இறுதி கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது.
தேர்தல் முடிவுகள்
வரும் வியாழன் (மார்ச் 10) அன்று வெளியாக உள்ளது.

அதற்கு முன்னதாக மக்களின் எண்ணவோட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

403 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் பெரும்பான்மையை பிடிக்க 202 இடங்களை பெற வேண்டும்.
பாஜக
,
சமாஜ்வாதி
, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டுள்ளன. நான்கு முனைப் போட்டியில் முந்தப் போவது யார் என்பது குறித்த வெள்ளோட்டத்தை இங்கு பார்க்கலாம்.

NEWSX – POLSTART வெளியிட்டுள்ள
கருத்துக் கணிப்பு
முடிவுகளின் படி பாஜக 223 இடங்களில் வென்று ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது, சமாஜ்வாதி கட்சி 153 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CNN News18 வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக 240 இடங்களில் வென்று ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது, சமாஜ்வாதி கட்சி 140 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Matrize வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு படி பாஜக 265 இடங்களில் வென்று ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது, சமாஜ்வாதி கட்சி 123 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 8 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் உத்தரபிரதேசத்தில் பாஜகவே மீண்டும் ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சி பிரதான எதிர்கட்சியாக அமரும். பகுஜன் சமாஜ் கட்சி குறைவான இடங்களில் வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சியின் நிலைமை மிக மோசமாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.