கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து அடுத்த மாவட்டம்.! சூர்யா திரைப்படம் வெளியிட தடை?! 

நடிகர் சூர்யா வன்னியர் மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்காதவரை, ’எதற்கும் துணிந்தவன்’ படத்தை கடலூரில் ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என, கிருஷ்ணகிரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவருக்கு, பாமகவை சேர்ந்த த ஆறுமுக என்பவர் கடிதம் எழுதியுள்ளார்.

அவரின் அந்த கடிதத்தில், “திரைபட நடிகர் சூர்யா நடித்து கடந்த 2021 நவம்பர் 02 ம் தேதியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் டி.செ.ஞானவேல் இயக்கிய இப்படத்தை (2D Entertainemnet) நிறுவனம் தயாரித்து நடிகர் சூர்யா நடித்துள்ளார். 

இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டுள்ள உண்மை சம்பவ அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம். அதில் வழக்கறிஞர் சந்துரு அதே பெயரில் இருக்க கதாபாத்திரத்தில் வந்த அனைவரும் அதே கதாபாத்தரத்தில் நடிக்க SI அந்தோனிசாமி என்ற கிருத்துவர் மட்டும் குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தை வன்னியராக சித்தரிக்கப்பட்டுள்ளது. 

காவல் உதவி ஆய்வாளராக நடித்தவர் ஒரு ஜாதி வெறியர் போல சித்தரித்து வன்னியர்களின் அடையாளமான அக்கினி கலசத்தை அவர் வீட்டில் காட்சிப்படுத்தி காவல் உதவி ஆய்வாளரை வன்னியர் சமுதாயத்தை சார்ந்தவர் என்றும் ஒட்டு மொத்த வன்னிய சமுதாய மக்கள் ஜாதி வெறி வன்மம் உள்ளவர்கள் போல காட்டியுள்ளனர். 

சகோதரத்துவமாக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் ஜாதி வன்மத்தை தூண்டும் விதமாக இத்திரைப்படம் எடுத்திருப்பது வன்னியர்களை கொச்சப்படுத்தும் விதமாகவும், வன்முறையாளர்களாகவும் தொடர்ந்து சித்தரித்து வரும் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை அவர் வன்னியர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்காத வரை கடலூர் மாவட்டதில் ஒளிப்பரப்ப அனுமதிக்க கூடாது என பாட்டாளி மக்கள் சார்பாகவும், வன்னியர் சங்கம் சார்பாகவும் கேட்டுக்கொள்கின்றோம். இப்படிக்கு த ஆறுமுகம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.