Exit Poll Results 2022 | மணிப்பூரில் முந்தும் பாஜக, கடும் போட்டியில் கோவா, உத்தராகண்ட்

கடந்த இரண்டு மாதங்களாக நடந்த ஐந்து மாநிலத் தேர்தல் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகவும் மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கு இரு கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது. இதனிடையே இந்த தேர்தலையொட்டி பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.

உத்தராகண்ட் மாநில கருத்துக்கணிப்பு முடிவுகள்: கடந்த 2017-ல் இந்த மாநிலத்தில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. அதன் முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பெரும்பாலான முடிவுகள் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவதை வெளிப்படுத்துகின்றன.

இந்தியா டுடே கருத்துக்கணிப்பு:

பாஜக – 36-46 தொகுதிகள்

காங்கிரஸ் – 20-30 தொகுதிகள்

பகுஜன் சமாஜ் – 2-4 தொகுதிகள்

ஆம் ஆத்மி – 2-5 தொகுதிகள்

நியூஸ்எக்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள்:

காங்கிரஸ் – 33-35 தொகுதிகள்

பாஜக – 31-33 தொகுதிகள்

ஆம் ஆத்மி – 0 – 3 தொகுதிகள்.

ரிபப்ளிக் டிவி – பி-மார்க் கருத்துக் கணிப்பு முடிவுகள்

காங்கிரஸ் – 33 – 38 தொகுதிகள்

பாஜக – 29 – 34 தொகுதிகள்

பகுஜன் சமாஜ் – 1 – 3 தொகுதிகள்

பிற கட்சிகள் – 1 – 3 தொகுதிகள்

சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள்:

காங்கிரஸ் – 32 – 38 தொகுதிகள்

பாஜக – 26 – 32 தொகுதிகள்

ஆம் ஆத்மி – 0 – 2 தொகுதிகள்

பிற கட்சிகள் – 3 – 7 தொகுதிகள்

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு முடிவுகள்:

பாஜக – 37 தொகுதிகள்

காங்கிரஸ் – 33 தொகுதிகள்

மற்றவை – இரண்டு தொகுதிகள்

ஜன் கி பாத்:

பாஜக – 32 முதல் 41 தொகுதிகள்

காங்கிரஸ் – 27 முதல் 35 தொகுதிகள்

ஆம் ஆத்மி – 1 தொகுதி

பிற கட்சிகள்- 3 தொகுதிகள்

கோவா மாநில கருத்துக்கணிப்பு முடிவுகள்: கோவா மாநிலத்தில் மொத்தம் 40 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில் இந்தமுறை காங்கிரஸ் மற்றும் பாஜக இருகட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கின்றன.

நியூஸ்எக்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள்:

பாஜக – 17 – 19 தொகுதிகள்

காங்கிரஸ் – 11 – 13 தொகுதிகள்

ஆம் ஆத்மி – 1 – 4 தொகுதிகள்

பிற கட்சிகள் – 2 – 7 தொகுதிகள்

ரிபப்ளிக் டிவி – பி-மார்க் கருத்துக் கணிப்பு முடிவுகள்

பாஜக – 13-17 தொகுதிகள்

காங்கிரஸ் – 13-17 தொகுதிகள்

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு முடிவுகள்:

காங்கிரஸ் கூட்டணி – 16 தொகுதிகள்

பாஜக – 14 தொகுதிகள்

ஆம் ஆத்மி – 4 தொகுதிகள்

பிற கட்சிகள் – 6 தொகுதிகள்

என்.டி.டி.வி எக்ஸிட் போல்ஸ்:

பா.ஜ.க- 16 தொகுதிகள்

காங்கிரஸ் கூட்டணி – 16 தொகுதிகள்

திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி – 2 தொகுதிகள்

இந்தியா டுடே:

பாஜக – 14 – 18 தொகுதிகள்

காங்கிரஸ் கூட்டணி – 15 – 20 தொகுதிகள்

திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி – 2 – 5 தொகுதிகள்

பிற கட்சிகள்- 0 – 4 தொகுதிகள்

சி வோட்டர்:

பாஜக- 13 – 17 தொகுதிகள்

காங்கிரஸ் கூட்டணி – 12 – 16 தொகுதிகள்

திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி – 5 – 9 தொகுதிகள்

மற்றவர்கள் – 0 – 2 தொகுதிகள்

மணிப்பூர் மாநில தேர்தல் கணிப்பு முடிவுகள்: கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை பெற்று பாஜக ஆட்சி அமைந்தது. இம்முறையும் பாஜகவே ஆட்சியமைக்கும் என பெரும்பான்மையான முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

ஜீ நியூஸ் கருத்துக்கணிப்பின் படி பாஜக மணிப்பூரை தக்க வைக்கிறது. பாஜக 32-38 இடங்களையும், அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணி 12-17 இடங்களையும் வெல்லும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கின்றன.

பி-மார்க் கருத்துக்கணிப்பு முடிவின் படி, மணிப்பூரில் பாஜகவுக்கு 27-31 இடங்களும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 11-17 இடங்களும் கிடைக்கும் என்று தெரிகிறது.

இந்தியா நியூஸ் கருத்துக்கணிப்பு முடிவுகளில், பாஜகவுக்கு 23-28 இடங்களும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 10-14 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்.டி.டி.வி :

பாஜக – 30 தொகுதிகள்

காங்கிரஸ் கூட்டணி – 14 தொகுதிகள்

ஜன் கி பாத்:

பாஜக – 10 – 14 தொகுதிகள்

காங்கிரஸ் கூட்டணி – 23 – 28 தொகுதிகள்

தேசிய மக்கள் கட்சி – 7 – 8 தொகுதிகள்

நாகா மக்கள் முன்னணி – 5 – 8 தொகுதிகள்

மற்றவர்கள் – 8 – 9 தொகுதிகள்

இந்தியா டுடே:

பாஜக – 33 முதல் 43 தொகுதிகள்

காங்கிரஸ் கூட்டணி – 4 முதல் 8 தொகுதிகள்

தேசிய மக்கள் கட்சி – 4 முதல் 8 தொகுதிகள்

மற்றவர்கள் – 6 முதல் 15 தொகுதிகள்

சி வோட்டர்:

பாஜக – 23 – 27 தொகுதிகள்

காங்கிரஸ் கூட்டணி – 12 – 16 தொகுதிகள்

தேசிய மக்கள் கட்சி – 10 – 14 தொகுதிகள்

மற்றவர்கள் – 3 – 7 தொகுதிகள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.