விவாகரத்திற்கு பிறகு மகளுடன் நடந்த பாச போராட்டம்: வைரலாகும் பாலாவின் வீடியோ..!

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக சினிமா பிரபலங்கள் அடுத்ததடுத்து விவாகரத்து செய்வது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகைகள் சமந்தா, அமலாபால், நடிகர் தனுஷ் இசையமைப்பாளர் இமான் உள்பட ஒருசில சமீபத்தில் தங்கள் துணையை விவாகரத்து செய்துள்ளனர். அந்த வரிசையில் லேட்டஸ்ட்டாக இயக்குனர்
பாலா
தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக திகழும் பாலா, கடந்த 2004 ஆம் ஆண்டு முத்து மலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிராத்தனா என்ற மகள் இருக்கின்றார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் இவர்கள் இருவரும் ஒன்றாக திருமண வாழ்வில் வாழ்ந்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் அண்மையில் விவாகரத்து சட்டப்படி விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்நிலையில் விவாகரத்திற்கு பிறகு தமிழச்சி தங்கப்பாண்டியனின் மகள் திருமண விழாவில் பாலா,
முத்துமலர்
இருவரும் தனித்தனியாக கலந்து கொண்டனர். அந்த விழாவிற்கு தனது தாயாருடன் வந்திருந்த பிராத்தனா, அப்பாவுடன் ஜாலியாக கொஞ்சி விளையாடினார். மகளை மடியில் உட்கார வைத்து பாலாவும் கொஞ்சினார். அதன்பிறகு தனது மனைவியை பார்க்காமல் விழாவில் இருந்து கிளம்பிவிட்டார் பாலா.

தனுஷின் ‘மாறன்’ படம் எப்படி இருக்கு.?: ட்விட்டரில் சுட சுட வெளியான விமர்சனம்..!

அப்பா சென்ற பிறகு முத்துமலரிடம் சென்ற பிராத்தனா அம்மா மாடியில் உட்கார்ந்து கொஞ்சி கொண்டிருந்தார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த குழந்தைக்காகவாது இருவரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்து இருக்கலாம் என பலரும் வருத்தப்பட்டு வருகின்றனர்.

பாலா, முத்து மலரை குடும்பத்தினர் வற்புறுத்தலின் பேரிலே திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும், முத்து மலர் காலேஜ் படிக்கும் போதே பிரபல அரசியல் கட்சியின் முன்னணி தலைவரின் மகனை காதலித்து வந்துள்ளதாகவும், அவருடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெற்றுள்ளதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சால்ட் & பெப்பர் தாடியும், காதில் கடுக்கனும்’ அஜித்தின் நியூ லுக்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.