குழந்தையை ஜன்னல் வழியாக வீசி, தானும் குதித்த தந்தை! வெளியான திகிலூட்டும் வீடியோ



தீயில் இருந்து தப்பிக்க ஒரு நபர் தனது 3 வயது மகனை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்துவிட்டு, கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் மிடில்செக்ஸ் கவுன்டியில் நிகழ்ந்த இந்த பரபரப்பான சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இதனை South Brunswick காவத்துறை அதிகாரிகள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

அந்தப் பதிவில், “அதிகாரிகளின் உடலில் அணிந்திருந்த கேமராவில் மீட்பு படம் பிடிக்கப்பட்டது. அப்பா குழந்தையை 2 வது மாடியின் ஜன்னலுக்கு வெளியே அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்களிடம் வீசினார், பின்னர் தீயிலிருந்து தப்பிக்க அந்த அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து குதித்தார்” என்று பதிவிட்டுள்ளார்.

வீடியோவில், அதிகாரிகள் ‘குழந்தையை கீழே வீசுங்கள்’ என கத்துவதை காணலாம். பின்னர் பீதியில் இருந்த தனது 3 வயது மகனை வீச அரிகாரிகள் பத்திரமாக பிடித்தனர். பின்னர் குழந்தையின் தந்தையும் புத்தரின் மீது விழுந்து தீயிலிருந்து தப்பினார்.

இந்த வீடியோ 8000 முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது, ட்விட்டர் பயனர்கள் பலர் அதிகாரிகளின் மீட்பு முயற்சிகளைப் பாராட்டியுள்ளனர்.

உக்ரைன் அகதிகளுக்கு வீட்டில் அடைக்கலம் கொடுப்பவர்களுக்கு.., பிரித்தானிய அரசு முக்கிய அறிவிப்பு 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.