"வானதி ஊரில்தான் இருக்கிறாரா?" – பணிகளை பட்டியலிட்டு கோவை எம்.பி மீண்டும் கேள்வி

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன், கடந்த வாரம் மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து மனு அளித்திருந்தார். அந்த மனுவில், ‘கோவையை, பாலக்காடு கோட்டத்தில் இருந்து சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும்.’ என்று கூறப்பட்டிருந்தது.

மத்திய அமைச்சரிடம் வானதி சீனிவாசன் மனு

இதுகுறித்து கோவை எம்.பி பி.ஆர் நடராஜன் விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து, வானதி சீனிவாசனும் அதற்கு பதில் அளித்திருந்தார். இந்நிலையில், வானதி சீனிவாசனுக்கு, நடராஜன் மீண்டும் ஓர் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “தவறை சுட்டிக்காட்டி விட்டோம் என்கிற ஆற்றாமையில், சரி செய்து கொள்ள முயற்சிக்காமல், என்னை சிறுமைப்படுத்த முயற்சித்துள்ளார். வானதி அரசியல் செய்கிறார் என்பது அப்பட்டமாகவே தெரிந்தாலும், மக்கள் பிரதிநிதி என்கிற முறையில் அவரின் விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் கடமை இருக்கிறது. கோவையில் ரயில்வே போராட்டக்குழு எனது தலைமையில் அமைக்கப்பட்டது.

கோவை ரயில் நிலையம்

கோவை ரயில்வே போராட்டக்குழு மற்றும் எனது தொடர் முயற்சியால் கோவை மாநகருக்கு 8 புதிய ரயில்கள் கிடைத்துள்ளன. அதேபோல் கோவை ரயில்நிலையம் வராமல் போத்தனூர் வழியாக கேரளாவுக்கு சென்ற 13 ரயில்களில், 9 ரயில்கள் கோவை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

சேலம் கோட்டத்தின் 45 சதவிகிதம் வருவாயை ஈட்டித்தரும் கோவை ரயில்நிலையத்துக்கு ஆதர்ஷ் அந்தஸ்த்தும் பெற்றுத்தந்துள்ளோம். கோவை ரயில் நிலையத்தில பயணிகளுக்கு எக்ஸ்லேட்டர் வசதி, குடிநீர் வசதி, நடை பாதைகள் மேம்பாடு என அடிப்படை வசதி மேம்படுத்துவதில் என் முயற்சிகளை கோவை அறியும். வடகோவை ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர் கட்டடம்,

பி.ஆர். நடராஜன்

கோவை மற்றும் புறநகர்களில் 11 ரயில் மேம்பாலங்கள் மற்றும் சுரங்கபாதைகள் அமைத்தது போன்ற பணிகளில் பங்காற்றியுள்ளேன். 7 ஆண்டு கால பாஜக ஆட்சியில் கோவை பகுதிக்கு ஒரு புதிய ரயிலைக்கூட விடவில்லை. இப்போது, எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளை பார்த்து எத்தனை ரயில்களை கொண்டு வந்தீர் என கேட்பது அரசியல் சாமர்த்தியம்தானே.

தற்போது நாடாளுமன்றத்தில் பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பாஜக கட்சி எப்போது ஆட்சியில் ஏறியதோ அப்போதே ரயில்வே பட்ஜெட் என்ற ஒன்றை காலி செய்துவிட்டீர்கள் என்பதை அறிவீர்களா வானதி அவர்களே.

வானதி சீனிவாசன்

இதுபோன்ற திசை திருப்பல் நடவடிக்கைகளால் பாஜகவின் மக்கள் விரோதக்கொள்கைளை மறைக்க முடியாது. இதில் பிரதமர் மோடி கோவையின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றிவிடுவார் என்று நாம் பதற்றப்படுவதாக வானதி கூறுவது வேடிக்கையானது.

இப்போதும் கோவையின் தொழில் அமைப்புகள் மற்றும் 180 மக்கள் அமைப்புகளுடன் இணைந்து , கோவையை தலைமையிடமாக கொண்டு தனி ரயில்வே கோட்டம் கோரி வருகிறோம். வானதி ஊரில்தான் இருக்கிறாரா. மக்களவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியைக்கூட உங்கள் பாஜக அரசு இரண்டு வருடம் நிறுத்திவிட்டது என்பதை அறிவீர்களா.

கோவை

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதிக கேள்விகள் எழுப்பியதில் 10 பேரில் 7வது இடத்தில் உள்ளேன். என் நாடாளுமன்ற வருகை பதிவில் 93 சதவிகிதம். மேலும்மேலும் தவறிழைப்பது அவரது பதற்றத்தைத்தான் காட்டுகிறதே தவிர மக்கள் மீதான அக்கறையை அல்ல.” என்று சொல்லி தனது பணிகளையும் பட்டியலிட்டு குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.