டிக்கெட் இல்லாமல் பயணம்- ரூ.1.70 கோடி அபராதமாக வசூல் செய்து சாதித்த டிக்கெட் பரிசோதகர்

டிக்கெட் இல்லாத ரயில் பயணிகளிடம் இருந்து மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் ரூ.1.70 கோடி அபராதம் வசூலித்து சாதனை படைத்துள்ளார்.
மேற்கு மத்திய ரயில்வேயின் ஜபல்பூர் கோட்டத்தின் தலைமை டிக்கெட் பரிசோதகர் ஆஷிஷ் யாதவ் நடப்பு நிதியாண்டில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பயணிகளிடம் இருந்து ரூ.1.70 கோடி அபராதம் வசூலித்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆஷிஷ் யாதவ் உட்பட 16 டிக்கெட் பரிசோதகர்கள் டிக்கெட் இல்லாத பயணிகளிடம் இருந்து தனித்தனியாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலித்ததாக ஜபல்பூர் கோட்ட வணிக மேலாளர் விஸ்வ ரஞ்சன் தெரிவித்தார்.
Mumbai: Western Railway collects record Rs 18.70 cr in fines from ticketless  travellers in November
தலைமை டிக்கெட் பரிசோதகர் ஆஷிஷ் யாதவ் ஏப்ரல் 1, 2021 முதல் இந்த ஆண்டு மார்ச் 9 2022 வரை 20,600 பயணிகளிடமிருந்து 1.70 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளார். தனியொரு நபராக அபராதம் வசூலித்ததில் இந்த தொகை அதிக வசூலாக இருக்கலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டில், யாதவ் உட்பட 42 பேர் கொண்ட பறக்கும் படையினர், பல்வேறு ரயில்களில் பயணித்த பயணிகளிடம் இருந்து ரூ.71 கோடி அபராதம் வசூலித்துள்ளதாக ரஞ்சன் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.