மாறனுக்கு ட்விட்ஸ்ட் கொடுத்த மாயன்… இதை நாங்களே எதிர்பார்க்கலையே..

Tamil Serial Rating Update With promo : மாறன் நீங்களும் என்ன என்னமோ செஞ்சிதான் பாக்குறீங்க ஆனா ஒன்னுமே முடியலையே என்று சொல்லும் மாறன் பலத்த அடி வாங்கி வருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

சின்னத்திரையில் சீரியலுக்கு பெயர் பெற்ற விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். மிர்ச்சி செந்தில் இரட்டை வேடங்களில் கலக்கிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் ஒரு தவறு நடந்தால் அதிலேயே சுற்றிக்கொண்டிருக்காமல், அ அதற்கான தீர்வை உடனே சொல்லிவிட்டு அடுத்த காட்சிக்கு செல்வது தான் இந்த சீரியலின் இயல்பு.

தனது தந்தையின் 2-வது மனைவியின் பிள்ளைகளை தனது தங்கையாக ஏற்றுகொண்ட மாயன் அவர்களுக்காக வாழ்ந்து வருகிறான். இடையில் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கிறான். இதில் மாயனின் கடைசி தங்கை ஐஸ்வர்யாவுக்கும் முத்து ராசுவுக்கும் திருமணம் நடைபெற்றதில் இருந்து கொடுமையை அனுபவித்து வருகிறாள் ஐஸ்வர்யா.

இந்த நிலைக்கு ஒரு கட்டத்தில் தீர்வு கிடைக்கும் வகையில் முத்துராசுவை யாரோ சுட்டுவிடுகிறார்கள். இதனால் கேஸ் ஆகும் நிலையில், இந்த கேஸை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி கார்த்திக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்துவிடுகிறது. அதன்பிறகு இருவீட்டாரும் சேர்ந்து திருமணத்திற் ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த மாறன் முயற்சி செய்கிறான்.

அதற்காக தாலி கட்டும் சமயத்தில், மாறன் முத்துராசுவை அழைத்துக்கொண்டு வருகிறான் இதனால் அனைவரும் அதிர்ச்சியாக அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அடுத்த 3 நாட்களுக்கான ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாறனின் கண்ணில் மண்னை தூவிவிட்டு மாயன் ஐஸ்வர்யாவுக்கும் கார்த்திக்கும் திருமணத்தை நடத்தி வைக்கிறார்

இதன் மூலம் இந்த சீரியலுக்கு உண்டான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ள நிலையில், இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் மாயன் எப்படியும் ஜெயித்துவிடுவார் என்பது தெரியும் அது எப்படி என்றுதான் பார்க்க ஆவலாக இருக்கிறோம் என்று கூறியுள்ளனர். மற்றொருவர் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை மாயன் சூப்பர் என்று கூறியுள்ளார். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மதிப்பு உயர்ந்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.