ரஷ்யாவில் சக்திவாய்ந்த ஆலிகார்சஸ் இவர் தான்..! #Oligarchs

உக்ரைன் – ரஷ்யா போர் வெடித்த போது உலக நாடுகள் ரஷ்ய அரசுக்கும், ரஷ்ய நிறுவனங்களுக்கு மாறி மாறி தடை விதித்த மேற்கத்திய நாடுகள், விடாப்பிடியாக ரஷ்யாவின் ஆலிகார்சஸ் எனப்படும் சக்திவாய்ந்த பணக்காரர்களையும் குறிவைத்துப் பயணத் தடை, வர்த்தகத் தடை, முதலீட்டுத் தடை, சொத்து முடக்கம், சொத்து கைப்பற்ற உத்தரவு வெளியிடப்பட்டது. உண்மையில் யார் இந்த ஆலிகார்சஸ்..? இவர்கள் மீது ஏன் தடை விதிக்கப்பட்டது..? இப்படித் தடை விதிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் யார்..?

தங்கத்தை மீண்டும் வாங்கி குவிக்கும் ரஷ்யா..இனி விலை எப்படியிருக்கும்.. இன்று ஜாக்பாட் தான்!

ஆலிகார்சஸ்

ஆலிகார்சஸ்

ரஷ்யாவின் ஆலிகார்சஸ் எனப்படுபவர்கள் பொதுவாகவே தொழிலதிபர்களாக இருக்கிறார்கள். 1990களில் சோவியத் யூனியன் உடைந்த போது பல அரசுத் துறைகள் தனியார் மயமாக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் அரசுக்கு நெருக்கமானவர்கள், அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவர்கள் இந்தத் துறையைக் கைப்பற்றி இன்று பெரும் தொழிலதிபர்களாக உள்ளனர்.

பணக்கார தொழிலதிபர்கள்

பணக்கார தொழிலதிபர்கள்

மேலும் இந்தப் பணக்கார தொழிலதிபர்களை ஆலிகார்சஸ் எனத் தனியாகப் பிரிக்க முக்கியக் காரணம் இவர்கள் அனைவரும் ரஷ்யா மற்றும் பிற சோவித் நாடுகளின் அரசில் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தைச் செலுத்துவது தான். இந்த ஆலிகார்சஸ் மூலம் அரசுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் நன்மை உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது.

விளாடிமிர் லிசின்
 

விளாடிமிர் லிசின்

விளாடிமிர் லிசின் 21.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் புடின் ஆட்சி காலத்தின் பணக்கார ஆலிகார்சஸ் ஆக விளங்குகிறார். அவர் ரஷ்யாவின் நான்கு பெரிய எஃகு நிறுவனங்களில் ஒன்றான நோவோலிபெட்ஸ்கின் (NLMK) உரிமையாளர் ஆவார்.

அலெக்ஸி மொர்டாஷோவ்

அலெக்ஸி மொர்டாஷோவ்

அலெக்ஸி மொர்டாஷோவ் 21.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் சக்திவாய்ந்த தொழிலதிபராக உள்ளார். அலெக்ஸி மொர்டாஷோவ் எஃகு, மின்சாரம் மற்றும் சுற்றுலாத் தொழில்களில் பல முக்கிய வணிகங்களின் பங்குதாரர் ஆவார். ஐரோப்பிய யூனியன் இவருக்குத் தடை உத்தரவு விடுத்துள்ளது.

 விளாடிமிர் பொட்டானின்

விளாடிமிர் பொட்டானின்

ரஷ்ய கோடீஸ்வரர் விளாடிமிர் பொட்டானின் சொத்து மதிப்பு 21.1 பில்லியன் டாலராக உள்ளது. பொட்டானின், உலகிலேயே மிகப்பெரிய சுத்திகரிக்கப்பட்ட நிக்கல் உற்பத்தி நிறுவனமான நோரில்ஸ்க் நிக்கலின் தலைவர் ஆவார். அவரிடம் மூன்று ஆடம்பர சொகுசு படகுகள் உள்ளது.

லியோனிட் மைக்கேல்சன்

லியோனிட் மைக்கேல்சன்

லியோனிட் மைக்கேல்சன் சொத்து மதிப்பு 18.1 பில்லியன் டாலர். உலகின் இரண்டாவது பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனமான நோவாடெக்கின் நிறுவனர் ஆவார். 2017 ஆம் ஆண்டில், புடினின் முன்னாள் மருமகன் கிரில் ஷமலோவ், பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான சிபுரி-ல், மைக்கேல்சனுக்கு 17% பங்குகளை விற்றார், அதன் பின்பு இப்பங்குகளை 48% ஆக உயர்த்தித் தற்போது மிகவும் சக்திவாய்ந்தவராக உள்ளார்.

பிற ஆலிகார்சஸ்

பிற ஆலிகார்சஸ்

வாகிட் அலெக்பெரோவ், அலிஷர் உஸ்மானோவ், ஆண்ட்ரி மெல்னிச்சென்கோ, ஜெனடி டிம்செங்கோ, பாவெல் துரோவ், மிகைல் ஃப்ரிட்மேன், ரோமன் அப்ரமோவிச் ஆகியோர் மிகவும் சக்திவாய்ந்த பணக்காரர் ஆகவும், ரஷ்ய அரசுக்கும், சோவித் நாடுகளுக்கும், புதின்-க்கும் மிகவும் நெருக்கமானவர்களாகவும் விளங்குகின்றனர்.

 ரஷ்யா - உக்ரைன் பேச்சுவார்த்தை

ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தை

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதற்காக, இரு நாடுகளும் கடந்த 2 வாரமாகப் பலகட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையில் உக்ரைனின் தலைநகர் மற்றும் வடக்கைச் சுற்றி இராணுவ நடவடிக்கைகளைக் குறைப்பதாக ரஷ்யா உறுதியளிக்கிறது.

நேட்டோ படை

நேட்டோ படை

உக்ரைன் நேட்டோவில் சேராமல் நடுநிலையைப் பின்பற்றும் அதே வேளையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர வேண்டும் என ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் இரு நாடுகள் மத்தியில் பதற்றம் குறைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Richest and Powerful Russian Oligarchs; Who is Oligarchs?

Richest and Powerful Russian Oligarchs; Who is Oligarchs? ரஷ்யாவில் சக்திவாய்ந்த ஆலிகார்சஸ் இவர் தான்..! #Oligarchs

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.