உக்ரைன் கார்கீவ் நகரில் நடந்த துப்பாக்கி சண்டையில் இந்திய மாணவர் உயிரிழப்பு

உக்ரைன்  ரஷியா இடையே ஆறாவது நாளாக போர் நடந்து வருகிறது. கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷியா நடத்தி வரும் கடும் தாக்குதலில் இந்திய மாணவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கிடையே, மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த போர் களத்தில் சிக்கி உக்ரைன் கார்கீவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா … Read more

இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி: 50% பார்வையாளர்களுக்கு அனுமதி

மும்பை: மொகாலியில் வரும் 4ஆம் தேதி தொடங்கும் இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை நேரில் காண 50% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இந்திய வீரர் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.

உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை உயர்மட்ட ஆலோசனை

டெல்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை உயர்மட்ட ஆலோசனை நடக்கவுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரில் இந்திய மாணவர் உயிரிழந்த நிலையில் அவசர ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 4-ல் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் நான்காம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும், தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, வருகிற 4ஆம் தேதி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் … Read more

”உக்ரைனில் இந்திய மாணவர்களை சித்ரவதை செய்கிறார்கள்” – நாடு திரும்பிய மாணவி அதிர்ச்சி தகவல்

உக்ரைன் காவலர்கள் இந்திய மாணவர்களை எல்லையை கடக்க விடுவதில்லை என்றும் கடக்க முயன்றால் தாக்குகிறார்கள் என்றும் நாடு திரும்பிய மாணவி தெரிவித்துள்ளார். உக்ரைனில் போர் நடந்து வருவதையடுத்து அங்கு தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உக்ரைனில் விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் அண்டை நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி அங்கிருந்து இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து நாடு திரும்ப இந்தியர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளின் எல்லைகளை நோக்கி கடும் குளிரில் குவிந்து வருகிறார்கள். … Read more

காலத்தால் அழியாத காவியப் படைப்புகளை தந்த ஏழிசை மன்னர் எம்.கே.டி. பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழ்த்திரையுலகின் எவர் க்ரீன் சூப்பர் ஸ்டார், ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதரின் 112 ஆவது பிறந்த நாளான இன்று அவரது நினைவலைகளில் சற்று நீராடலாம். மன்மத லீலையை வென்றார் உண்டோ, இப்படி காலத்தால் அழியாத பாடல்களையும், வருடக்கணக்கில் திரையரங்கில் ஓடிய காவிய படங்களிலும் நடித்தவர் ஏழிசை மன்னர் எம்.கே.டி. 7 வயதிலேயே நாடகக்குழுவில் இணைந்து கலக்கியவர். எளிய குடும்பத்தில் பொற்கொல்லரின் மகனாக பிறந்தாலும், தமது கலைத்திறனால் கோலோச்சியவர். தமிழ்த்திரையுலகில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற முதல் நாயகன். மாயவரம் … Read more

உக்ரைனில் வன்முறை கூடாது ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தல்| Dinamalar

நியூயார்க்: ‘உக்ரைனில் வன்முறையை நிறுத்தி, ரஷ்யா – உக்ரைன் இரண்டும் நேர்மையான முறையில் பேச்சு நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்’ என, ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில், ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதையடுத்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இரு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், ஐ.நா., பொதுச் சபையின் சிறப்பு அவசர கூட்டம் நடந்தது. இதில், ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது:உக்ரைன் நிலவரம் மோசமாகி வருவது இந்தியாவுக்கு … Read more

கேரள தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி

கொரோனா தொற்றால் இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளா. அதனால் அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்தது. இதை தொடர்நது அங்குள்ள தியேட்டர்கள் மூடப்பட்டது. 3வது அலையின் போது தொற்று பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. மற்ற பகுதிகளில் உள்ள சினிமா தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அதைத் தொடர்ந்து படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அதன்படி … Read more

சி.பி.ஐ., அதிகாரிகளாக நடித்து கொள்ளை| Dinamalar

கோலார்:கோலாரில், சி.பி.ஐ., அதிகாரிகள் என கூறி, ஏ.பி.எம்.சி., முன்னாள் தலைவர் ரமேஷ் வீட்டுக்குள் புகுந்து, துப்பாக்கி முனையில் 20 லட்சம் ரூபாய், 1 கிலோ தங்க நகைகள் உட்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஐந்து பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து தலைமறைவானது.கர்நாடகா மாநிலம் கோலார் பைரே கவுடா நகரில் ஏ.பி.எம்.சி., எனப்படும் வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனை மையத்தின் முன்னாள் தலைவர் ரமேஷ், 64, அவரது மனைவி பத்ரா, 56, ஆகியோர் வசித்து வருகின்றனர். … Read more

சுற்றி சுற்றி அடி வாங்கும் ரஷ்யா.. இனி இதிலும் பிரச்சனை தான்..!

உக்ரைனில் 6வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்ய படைகள் குறிப்பிட்டு முக்கிய பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகின்றது. உக்ரைன் படைகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தாலும், ரஷ்யா படைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆங்காங்கே பின்னடைவையும் சந்தித்து வருகின்றன. கீவ் தாக்குதல் குறித்து ரஷ்யா எச்சரித்துள்ள நிலையில், உக்ரைனில் பாதுகாப்பு அமைச்சர் ரஷ்யாவால் அணு தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரித்துள்ளார். இந்தியாவுக்கு அதிகரிக்கும் சிக்கல்.. உக்ரைன் போர் பதற்றத்தால் BPCL-க்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை! தகவல் … Read more