ஜேர்மன் இராணுவத்திற்குள்ளேயே ஒரு ரஷ்ய உளவாளி: அதிர்ச்சியளிக்க வைத்துள்ள தகவல்கள்


ஜேர்மன் இராணுவத்துக்குள்ளேயே ஒரு ரஷ்ய உளவாளி இருப்பதும், அவர் ஆறு ஆண்டுகளாக புடினுக்கு முக்கிய தகவல்களை அளித்து வந்ததும் தெரியவந்துள்ளதையடுத்து கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஜேர்மன் இராணுவத்திலிருக்கும் வீரர் ஒருவர், ஆறு ஆண்டுகளாக ரஷ்ய உளவுத்துறைக்கு முக்கிய தகவல்களை அளித்துவந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Ralph G என்று அழைக்கப்படும் அந்த வீரர், ஜேர்மன் ஜெனரல்கள் மற்றும் பெரும் தொழிலதிபர்களின் மொபைல் எண்கள் உட்பட தனிப்பட்ட தரவுகளை ரஷ்யாவுக்கு அளித்துவந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், ஜேர்மன் இராணுவக் கையிருப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, ரஷ்யா மீது 2014இல் தடை விதித்ததால் ஏற்பட்ட தாக்கம், Nord Stream எரிவாயு குழாய் திட்டம் முதலான ஜேர்மன் நாட்டின் பல முக்கிய விடயங்கள் குறித்து ரஷ்யாவுக்கு தகவல்கள் அனுப்பியுள்ளதாக Ralph மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 2014, அக்டோபரிலிருந்தே Ralph ரஷ்ய உளவுத்துறையுடன் பல்வேறு மக்கள் மூலமாக தொடர்பிலிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

2020 மார்ச் வரை Ralph ரஷ்ய உளவாளிகளுக்கு பல முறை இராணுவம் மற்றும் வர்த்தகம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் தகவல்களை அனுப்பி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Ralph இராணுவ வீரராக மட்டுமின்றி, ஒரு அரசு அதிகாரியாகவும் இருப்பதால், ஜேர்மன் வர்த்தகம் குறித்த பல விடயங்களையும் அவர் ரஷ்ய உளவுத்துறையுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அவர் ரஷ்யாவுக்கு செய்த உதவிக்கு பதிலாக, ரஷ்ய அரசு ஏஜன்சிகள் ஏற்பாடு செய்த பல நிகழ்ச்சிகளுக்கு Ralphக்கு அழைப்பிதழ் அனுப்பட்டுள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.