பீஸ்ட் ட்ரைலரை கலாய்த்த பிரபல தொலைக்காட்சி ? வைரலாகும் பதிவு..!

விஜய்யின்
பீஸ்ட்
ட்ரைலர் நேற்று வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றது.
நெல்சன்
இயக்கத்தில்
விஜய்
நடித்து வரும் பீஸ்ட் படத்தில் நாயகியாக
பூஜா ஹெக்டே
நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில்
செல்வராகவன்
நடிக்க
அனிருத்
இசையமைத்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. 3 நிமிடம் ஓடும் இந்த ட்ரைலரில் விஜய் படு ஸ்டைலாக படு மாஸாக இருக்கின்றார்.

பீஸ்ட் ட்ரைலரை பற்றி ப்ளூ சட்டை மாறனின் சர்ச்சையான கருத்து..விளாசும் ரசிகர்கள்..!

ட்ரெய்லரிலேயே கதையை சொன்ன நெல்சனின் தைரியம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. ஒரு மாலில் மக்கள் தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்கின்றனர். அதே மாலில் மக்களோடு மக்களாக உளவாளியாக விஜய்யும் இருக்கிறார். எனவே விஜய் அந்த மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் பீஸ்ட் படத்தின் கதை.

பீஸ்ட்

இந்நிலையில் பீஸ்ட் ட்ரைலரை பலரும் பாராட்டிவந்தாலும் சில விமர்சனங்களும் எழுந்து வருகின்றது. அதாவது பீஸ்ட் ட்ரைலரை பார்க்கும்போது தமிழில் யோகி பாபு நடிப்பில் வெளியான கூர்க்கா படத்தின் சாயலில் உள்ளது என சில ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

விஜய்

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்று கூர்க்கா படத்தை குறிப்பிட்டு இந்த படம் உங்களில் எத்தனை பேருக்கு பிடிக்கும் என பதிவிட்டுள்ளனர். இது விஜய் ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரைலரை பார்த்து சில ரசிகர்கள் கூர்க்கா படத்தின் சாயலில் இருப்பதாக தெரிவிக்க பிரபல தொலைக்காட்சியும் இதுபோன்ற மறைமுகமாக கருத்து தெரிவிப்பது விஜய் ரசிகர்களை சற்று சீண்டியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். என்ன இருந்தாலும் பீஸ்ட் படம் மெகாஹிட்டாகும் என்பது விஜய் ரசிகர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

என்னது BEAST படம் முன்னாடியே ரிலீஸ் ஆகுதா?

அடுத்த செய்திபீஸ்ட் ட்ரைலரை பற்றி ப்ளூ சட்டை மாறனின் சர்ச்சையான கருத்து..விளாசும் ரசிகர்கள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.