மியான்மர் ராணுவ ஆட்சிக்கு சீனா ஆதரவு| Dinamalar

பீஜிங் : ‘மியான்மரில் நடக்கும் ராணுவ ஆட்சியை ஆதரிப்போம்’ என, சீனா தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், ராணுவ ஆட்சி நடக்கிறது. இந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வுன்னா மவுங் லிவின், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உ டன் டெலிபோனில் பேசினார்.அப்போது, வாங் யி கூறியதாவது:
அண்டை நாடுகளிடம் நட்புறவுடன் இருக்கவே, சீனா விரும்புகிறது. மியான்மரில் எந்த சூழ்நிலை இருந்தாலும், ராணுவ ஆட்சிக்கு முழுமையாக ஆதரவு தருவோம். சுதந்திரமான வெளியுறவு கொள்கையை, சீனா பின்பற்றுகிறது. சீனா – மியான்மர் பொருளாதார பாதை அமைக்கும் திட்டம் விரைவுப்படுத்தப்படும்.

இவ்வாறு வாங் யீ கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.