பாக். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப் ராஜினாமா| Dinamalar

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெயீத் யூசுப் நேற்று திடீர் ராஜினமா செய்தார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் , முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் அரசு மீது, நவாஸ் ஷெரீபின் முஸ்லிம் லீக், பாக்., மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பார்லி.,யில் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்த துணை சபாநாயகர் காசிம் சுரி, பார்லி.,யை வரும் 25க்கு ஒத்திவைத்தார். பார்லி.

கலைக்கப்பட்டது. 3 மாதத்தில் தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது. பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப் தனது பதவியை ராஜினாமா செய்தார்.டுவிட்டரில் கூறியது, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நாட்டிற்கு எனது பங்களிப்பிற்கு அனுமதி அளித்த பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி என தெரிவித்தார்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.