பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷெபாஸ்! முன்னாள் பிரதமரின் சகோதரருக்கு வாய்ப்பு

பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரிபின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் (வயது 70), நாடாளுமன்ற செயலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் பிரதமராக ஷபாஸ் ஷெரிப் தேர்வு ஆகியுள்ளார்.

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்காக நாடாளுமன்றம் நேற்று முன்தினம் கூடியது. ஆனாலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தினை ஓட்டெடுப்புக்கு விடுவதில் பெரும் இழுபறி நிலவியது.

அடுத்த திருப்பமாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியைச் சேர்ந்த அயாஸ் சாதிக், சபைக்கு தலைமை வகித்து நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடத்தினார்.

இதில் மொத்தம் உள்ள 342 எம்.பி.க்களில் 174 பேரின் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.

இதனால் இம்ரான்கான் பதவி பறிக்கப்பட்டது. இதனால் அவரது அரசு கவிழ்ந்தது. பாகிஸ்தான் வரலாற்றில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அதை நிறைவேற்றி பதவி பறிக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற பெயரும் இம்ரான்கானுக்கு வந்தது.

இதனிடையே, வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற ஷெபாஷ் ஷெரீப் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

தீமையை விட நன்மையே வெற்றி பெற்றுள்ளது என புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

மேலும், எனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நான் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு வீட்டுக்குச் செல்ல தயார் என்று அதிரடியாக அறிவித்தார்.

டுவிட்டர் குழு: இணைய விரும்பாத தொழிலதிபர்.. உக்ரைனில் திடீர் விசிட் செய்த தலைவர்.. மேலும் செய்திகள்

இம்ரான் கான் “வெளிநாட்டு சதி” என்று கூறியது. நாடகம் என்று கூறிய ஷெரீப், வெளிநாட்டு சதி என்று அழைக்கப்படுவது தொடர்பான சர்ச்சைக்குரிய கடிதம் குறித்து பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக் குழுவிடம் தெரிவிக்கப்படும் என்றார் புதிய பிரதமர் ஷெரீப்.

முன்னதாக, வாக்கெடுப்புக்கு முன் அதற்கான நடைமுறைகளை இம்ரான் கான் புறக்கணித்தார்.
அவருடன் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஷா முகமது குரேஷியும் வெளிநடப்பு செய்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.