இட ஒதுக்கீடு ரத்து தீர்ப்பு: அரசு சீரான வாதத்தை எடுத்து வைக்கவில்லை- ஜெயக்குமார்

சென்னை: தேர்தல் வழக்குகளில் கைதாகி நிபந்தனை ஜாமினில் விடுதலையான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சியில் இரண்டு வாரங்கள் தங்கி இருந்தார். பின்னர் சென்னை திரும்பி ராயபுரம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார். இன்று மூன்றாவது நாளாக ராயபுரம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டபின் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- போலீசாரை தகாத வார்த்தையால் பேசியதாக பெண் கவுன்சிலரின் கணவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இது கண்துடைப்பாகவே தெரிகிறது. கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களில் … Read more

மது குடிப்பவர்கள் மகாபாவிகள்: பீகார் முதல்- மந்திரி நிதிஷ்குமார் சொல்கிறார்

பீகார் முதல்- மந்திரி நிதிஷ்குமார் சட்டசபையில் பேசும்போது கூறியதாவது:- மகாத்மா காந்தி மது அருந்தக் கூடாது என்பதை தமது வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தினார். மகாத்மாவின் இந்த கொள்கையை உணராதவர்கள் நிச்சயம் இந்தியர்களாக இருக்க முடியாது. மது குடிப்பது பாவம் செய்வதற்கு சமம். மது குடிப்பவர்களை நான் மகாபாவிகள் என்றுதான் சொல்வேன். மது குடித்து உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு சில அரசுகள் உதவுகின்றன. ஆனால் அத்தகைய உதவி எதையும் நமது அரசு செய்வதில்லை. பீகாரில் மதுவிலக்கு மேலும் கடுமையாக்கப்படும். மதுவிலக்கு … Read more

ஐபிஎல் டி 20: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு

மும்பை: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பஞ்சாப் அணி முதலில் களமிறங்க உள்ளது.

முதலீடு செய்த பணத்திற்கு இரட்டிப்பு லாபம் எனக்கூறி பாலிவுட் நடிகையிடம் ரூ4.14 கோடி மோசடி: டுபாக்கூர் தொழிலதிபர் மீது வழக்கு

மும்பை: முதலீடு செய்த பணத்திற்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனக்கூறி நடிகை ரிமி சென்னிடம் ரூ. 4.14 கோடி மோசடி செய்த டுபாக்கூர் தொழிலதிபர் மீது போலீசார் வழக்குபதிந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அடுத்த கோரேகானைச் சேர்ந்த தொழிலதிபர் ரவுனக் ஜதின் வியாஸ் என்பவர் சிறிய அளவிலான நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்தேரியில் உள்ள ஜிம்மில் பாலிவுட் நடிகை ரிமி சென் சந்தித்தார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். … Read more

”அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும்” – கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

‘அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றியது போன்ற நடவடிக்கையை மட்டும் எடுத்தால் போதாது. அவர் மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு மதுரையில் 3 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் புதிய மாநில செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாநாட்டில் தற்போதைய அரசியல் செயல்பாடுகள் குறித்து … Read more

மாநிலங்களவையில் சதம் அடித்த பாஜக; 30 வருடங்களில் இல்லாத சாதனை!

அசாமில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்ட 2 பாஜக உறுப்பினர்களும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 100-ஐ தொட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக காங்கிரஸ் மற்றும் பாஜகவின் மாநிலங்களவை பலம் 100-ஐ தொட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக இரண்டு முறை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. ஆனாலும், பிஜு ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர்காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையில் முக்கிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் … Read more

‘செல்ஃபி’ விமர்சனம்: வித்தியாச ஜிவிபி, மிரட்டல் கெளதம், முத்திரை பதித்த அறிமுக இயக்குநர்!

ஜி.வி பிரகாஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகியிருக்கும் முதல் படம்… இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறன் இயக்கியிருக்கும் படம். ’பிசினஸ் பண்ணப்போறேன், அதுக்கேத்தமாதிரி படிச்சுக்குறேன். என்ஜினியரிங் வேண்டாம்’ என்று சொல்லும் கனல் அரசன் (ஜி.வி பிரகாஷ்). கடலூரிலிருந்து அப்பாவின் நிர்பந்தத்தால் பிடிக்காத என்ஜினியரிங் படிப்புக்கு, 2 லட்சம் ரூபாய் டொனேஷன் கொடுத்து சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் சேர்கிறார். ஆனால், அந்தக்கல்லூரி தகுதியே இல்லாத ஒன்று. மாணவர் சேர்க்கைக்காக ஆள்பிடிக்கிறார்கள் என்று அங்கு வந்தப்பிறகுதான் தெரிகிறது. தான் … Read more

கிரிப்டோகரன்சி வரி சட்டம் அமலானது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புது டில்லி: கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் மூலம் ஈட்டும் லாபத்தில் 30 சதவீதம் வரி பிடித்தம் செய்யும் சட்டம் புதிய நிதியாண்டின் தொடக்கமான இன்று முதல் (ஏப்., 1) அமலாகிறது. இந்தியாவில் கிரிப்டோகரன்சி முதலீடு கடந்த சில ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2022 – 23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கிரிப்டோகரன்சி வருவாய்க்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். புதிய நிதியாண்டின் … Read more

துல்கர் சல்மான் மீதான தடையை விளக்கிய திரையரங்கு உரிமையாளர்கள்

ஒரு படம் வெளியாகி குறைந்த பட்சம் 30 நாட்கள் கழித்துத்தான் அந்த படத்தை ஓடிடிக்கு கொடுக்க வேண்டுமென வினியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் ஒப்பந்தம் போடுவது பழக்கம். ஆனால் கொரோனா தாக்கம் கடந்த இரண்டு வருடங்களாக அனைத்து நடைமுறைகளையும் புரட்டிப் போட்டு விட்டது. அந்தவகையில் திரையரங்குகள் மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்ததால் பல தயாரிப்பாளர்கள் தங்களது படத்தை ஓடிடி தளங்களில் நேரடியாகவே வெளியிட்டனர். ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளர்களுடன் மோதுவதைவிட அந்த படத்தில் நடித்த சம்பந்தப்பட்ட ஹீரோக்கள் மீது தங்கள் கோபத்தை … Read more

எஸ்பிஐ & ஹெச்டிஎஃப்சி வங்கியின் சூப்பர் அறிவிப்புகள்.. யாருக்கு என்ன பலன்?

கொரோனா காலத்தில் லாக்டவுன் காரணமாக வீடுகளில் முடங்கியிருந்த மக்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வந்தனர். குறிப்பாக மூத்த குடிமக்கள் பெரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தனர். அந்தசமயத்தில் மூத்த குடிமக்களுக்கு பயன்படும் வகையில் சில முன்னணி வங்கிகள் சிறப்பு டெபாசிட் திட்டங்களை அறிமுகம் செய்தன. 7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படி 3% உயர்த்த அரசு ஒப்புதல்..! இதன் மூலம் மூத்த குடிமக்கள் வழக்கத்தினை விட கூடுதலாக வட்டி பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இது மூத்த … Read more