இலங்கையில் அதிபருக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்! பதற்றம் – 45 பேர் கைது…

கொழும்பு: கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள இலங்கையில், அதிபருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று இரவு,  மிரிஹானவில் உள்ள அதிபர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். இதனால், அந்த பகுதியில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதோடு, பதற்ற நிலை உருவானது. இதுதொடர்பாக 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால், மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தினசரி 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோல் டீசல் விலை லிட்டர் ரூ.200ஐ … Read more

பெட்ரோல், டீசல், வர்த்தக சிலிண்டர் விலை அதிகரிப்பால் டீ, காபி விலை ‘திடீர்’ உயர்வு

நெல்லை: இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களாக தினந்தோறும் விலை உயர்வதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். வீட்டுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து கடைகளுக்கு பயன்படுத்தும் வர்த்தக சிலிண்டரின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. … Read more

டெல்லியை போன்று தமிழ்நாட்டிலும் மாடர்ன் பள்ளியை உருவாக்கும் பணிகள் நடக்கிறது- மு.க.ஸ்டாலின் பேட்டி

புதுடெல்லி: டெல்லியில் மாதிரி பள்ளியை பார்வையிட்ட பிறகு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பு ஏற்று இருக்கக் கூடிய எங்களுடைய ஆட்சி எல்லா துறைகளுக்கும் எந்த அளவு முக்கியத்துவம் தருகிறதோ அதே போல அதிகமான அளவுக்கு கல்விக்கும், மருத்துவத்துக்கும் அதிகமான முக்கியத்துவத்தை நாங்கள் தந்து கொண்டு இருக்கிறோம். இன்றைக்கு இந்த மாடர்ன் பள்ளி எப்படி நடந்து கொண்டிருக்கிறதோ அதே போல ஒரு பள்ளியை தமிழ்நாட்டில் விரைவில் நாங்கள் … Read more

கோத்தபய எடுத்த முடிவுகளே பொருளாதார நெருக்கடிக்கு காரணம்: நிபுணர்கள் கருத்து

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை திடீரென்று ஏற்பட்டு விடவில்லை. 2019-ம் ஆண்டில் இருந்தே ஆட்சியாளர்களின் தவறான கொள்கை முடிவுகளால் இலங்கை பொருளாதாரம் சரிவை நோக்கி செல்ல தொடங்கியது. கடந்த இரண்டு ஆண்டு கொரோனா பொது முடக்கம், பொருளாதார வீழ்ச்சியை மேலும் அதிகப்படுத்தி விட்டது. 2019-ம் ஆண்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே எடுத்த சில முக்கிய முடிவுகளே தற்போ தைய நிலைக்கு காரணம். நாட்டின் வரி விதிப்பு முறையில் கோத்தபய ராஜபக்சே மாற்றம் செய்தார். 15 சதவீத … Read more

திருத்தணியில் அங்கன்வாடி பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து 6 வயது மாணவன் காயம்

திருவள்ளூர்: திருத்தணியில் அங்கன்வாடி பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து 6 வயது மாணவன் படுகாயமடைந்துள்ளார். பூனி மாங்காடு காலனியில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மற்றொரு மாணவனுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தலையில் காயமடைந்த மாணவன் விமல்ராஜுக்கு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தேர்வை கண்டு மாணவர்கள் அச்சப்படக்கூடாது; திருவிழாவுக்கு செல்வது போல் உற்சாகத்துடன் தேர்வு எழுத செல்லுங்கள்: பிரதமர் மோடி அறிவுறுத்தல்

டெல்லி: தேர்வை கண்டு மாணவர்கள் அச்சப்படக்கூடாது, திருவிழாவுக்கு செல்லும் உற்சாகத்துடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். டெல்லி தல்கோரா அரங்கில் மாணவர்களுடன் கலந்துரையாடிய மோடி, தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் சமூக ஊடகங்களில் கவனத்தை சிதறவிடக்கூடாது. ஆன்லைனில் கல்வி கற்கும் மாணவர்கள், படிப்பில் கவனம் செலுத்துகிறோமா என்று தம்மை தாமே கேட்டுக்கொள்ள வேண்டும். ஆன்லைன் கல்வி புதியவற்றை கற்றுக்கொள்வதற்கானது; நேரடி வகுப்புகள் என்பவை கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கானது. நேரடி வகுப்புகளில் கற்றுக்கொள்ளும் அதே விஷயங்கள்தான் … Read more

சென்னை: ஆபத்தை உணராமல் அலட்சியமாக பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள்

ஆபத்தை உணராமல் அலட்சியமாக பயணம் மேற்கொள்ளும் மாணவர்களால் சமூக ஆர்வலர்கள் பலரும் கவலையில் உள்ளனர். சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த குமரன் நகர் பகுதியில் தடம் எண் 102 பி, பெரும்பாக்கம் முதல் பாரிமுனை வரை செல்லும் பேருந்தில், பள்ளி மாணவர்கள் படிக்கட்டு முதல் ஜன்னல் வரை ஏறி தொங்கிக் கொண்டு பயணித்துள்ளனர். இதனை அவ்வழியே காரில் சென்ற ஒருவர் பார்த்து பேருந்தின் முன்பு காரை நிறுத்தி ஓட்டுநர் மற்றும் நடந்துநரிடம் மாணவர்கள் தொங்கிக் கொண்டு வருவது குறித்து … Read more

டெல்லி: தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்…முகக்கவசம் அணியாதவர்களுக்கு இனி அபராதம் இல்லை!

டெல்லியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், அதை ரத்து செய்ய மாநில பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. காரில் ஓட்டுநர்கள் முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்தும் உத்தரவை, கடந்த பிப்ரவரி மாதத்தில், டெல்லி அரசு திரும்பப் பெற்றிருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் முகக்கவசம் தொடர்பான அபராதமும் ரத்து செய்யப்படுவதாகவும், இருப்பினும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. … Read more

இறுதிகட்டத்தை நோக்கி செம்பருத்தி சீரியல்?

ஜீ தமிழில் ஒளிபரப்பான தொடர்களிலேயே அதிக வரவேற்பு பெற்று, அந்த சேனலுக்கு ஒரு பெரிய அடையாளத்தை கொடுத்தது என்றால் அது செம்பருத்தி தொடர் தான். இதில், கார்த்திக் ராஜ், ஷபானா, ப்ரியா ராமன், ஊர்வம்பு லெட்சுமி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்த இந்த தொடர் கிட்டத்தட்ட 5 வருடங்களில் 1250 எபிசோடுகள் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்த தொடர் தற்போது நிறைவு பெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

ஷாங்காய் நகரில் அதிகரிக்கும் கொரோனா; கட்டுப்பாடுகள் தீவிரம்| Dinamalar

ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. சீனாவின் ஷாங்காய் நகரில் 26 லட்சம் மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது ஒமைக்ரான் புதிய ரக வைரசால் தாக்கப்பட்டுள்ள இந்த நகரத்தில் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடுமையான ஊரடங்கு பின்பற்றப்படுவதால் கடந்த இரண்டு நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது ஷாங்காய் சர்வதேச எக்ஸ்போ சென்டர் வளாகம் … Read more