வெப்பம் தாங்க முடியல… தண்ணீர் தொட்டியில் குளித்த குரங்குகள்| Dinamalar

நாகர்கோவில் : தக்கலை அருகே கோடை வெப்பத்தை தாங்க முடியாமல் வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியை திறந்து அதில் குரங்குகள் ஆனந்த குளியல் போட்டன.கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு வாரம் மழைக்கு பின்னர் கடந்த நான்கு நாட்களாக வெயில் சுட்டெரிக்கிறது. ஒக்கி புயலில் ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்த பின்னர் மாவட்டத்தின் வெப்ப நிலை அதிகரித்துள்ளது. நேற்று வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் தக்கலை அருகே பத்மனாபபுரம் பகுதியில் இருந்து வந்த குரங்குகள் கூட்டம், இங்குள்ள கவுன்சிலர் … Read more

புகைப்பட கலைஞர் டூ இயக்குனர் – ஓராண்டு நினைவலைகளில் கே.வி.ஆனந்த்

பத்திரிக்கை துறையில் புகைப்பட கலைஞராக தனது பயணத்தை தொடங்கி, ஒளிப்பதிவாளராக மாறி, பின் வெற்றி இயக்குனராக வலம் வந்தவர் கே.வி.ஆனந்த். கடந்தாண்டு இதே நாளில் லேசான கொரோனாவாலும் பாதிக்கப்பட்டிருந்த அவர் மாரடைப்பால் காலமானார். அவர் மறைந்து ஓராண்டாகி விட்டது. அவரைப்பற்றி சற்றே திரும்பி பார்ப்போம்… 1966ம் ஆண்டு அக்., 30ம் தேதி சென்னையில் பிறந்தவர் கே.வி.ஆனந்த். பத்திரிகை துறையில் புகைப்படக் கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய இவர், பின் சினிமாவிற்குள் ஒளிப்பதிவாளராக நுழைந்தார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக … Read more

ரம்யா பாண்டியன் ராக்கிங்.. ரெட்ரோ லுக்கில் என்னம்மா அழகா இருக்காரு.. வெளியானது தோட்டா பாடல்!

சென்னை: பிக் பாஸ் பிரபலங்களான ரியோ மற்றும் ரம்யா பாண்டியன் நடனமாடி உள்ள ஆல்பம் பாடலான தோட்டா தற்போது வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டவர்களின் ரெட்ரோ பாடல் போல இந்த தோட்டா பாடல் உருவாகி உள்ளது. ரியோவின் ‘விக்’கள் சிரிப்பை வரவழைக்கின்றன. அதே சமயம் ரம்யா பாண்டியனின் ஹாட் காஸ்ட்யூம் மற்றும் அசத்தலான நடனம் ரசிகர்களை அட போட வைக்கிறது. தோட்டா பாடல் ரிலீஸ் Noise and Grains யூடியூப் சேனல் தயாரித்து வெளியிட்டுள்ள தோட்டா … Read more

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வர முயன்ற 13 பேர்.. படகுக்கு காத்திருந்த போது கைது செய்தது இலங்கை கடற்படை..!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வர முயன்ற 13 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், உணவுப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக இங்கையில் வசிக்கும் தமிழர்கள் கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்றிரவு இலங்கையின் திரிகோணமலையில் வசித்த 3 குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் தங்களது சொத்துக்களை விற்று அதில் கிடைத்த … Read more

பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை பயணம்: தமிழர்களின் நிலை அறியச் செல்வதாக தகவல்

சென்னை: இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில் அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களின் நிலை குறித்து அறிவதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றுள்ளார். 4 நாட்கள் பயணமாக இலங்கை செல்லும் அவர் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டில் வசிக்கும் தமிழர்களின் நிலை குறித்து கேட்டறிய உள்ளார். மேலும் அங்கு நிலவும் பொருளாதார தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகள் குறித்தும் மக்களின் உடனடி தேவைகள் குறித்தும் அறியவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பயணத்துக்குப் பின் இலங்கையில் நிலவும் … Read more

பிரித்தானியாவில் கந்தையா சிங்கம் அவர்களின் ‘நடந்து வந்த பாதையிலே’ நூல் வெளியீடு

சிறந்த விளையாட்டு வீரரும் எழுத்தாளருமான கந்தையா சிங்கம் என்பவரது “நடந்து வந்த பாதையிலே “ என்னும் நூல் வெளியீடானது கடந்த வாரம் பிரித்தானியா, ஈலிங் சிறி கனக துர்க்கையம்மன் ஆலய மண்டபத்தில் எழுத்தாளர் இரா.உதயணன் தலைமையில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. . திரு இரா உதயணன் அவர்கள் தனது உரையில், நூலாசிரியர் இன்னும் பல நூல்கள் படைக்கவேண்டும் என்றும், நாவல், சிறுகதை எழுதுவதற்குரிய தகுதி இருப்பதை சுட்டிக் காட்டினார். உலகத் தமிழர் சதுரங்கப் பேரவை, உலகத் தமிழர் … Read more

சிவகங்கை அருகே ஆண்கள் ஸ்பெஷல் திருவிழாவில் 223 கிடாய் வெட்டி ‘கமகம’ விருந்து: 7 ஆயிரம் பேர் பங்கேற்பு

சிவகங்கை: சிவகங்கை அருகே திருமலை கிராமத்தில் மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் அருகே மடைகருப்பசாமி கோயில் உள்ளது. பல நூற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணிக்கு திருமலையிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் ஊர்வலமாக மடைகருப்பசாமி கோயிலுக்கு புறப்பட்டனர். நேர்த்திக்கடன் செலுத்த வேண்டிய பாத்திரங்கள், அரிவாள், மணி, கோயில் காளைகள், கருப்பு நிற வெள்ளாட்டு கிடாய்களுடன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து ஆட்டு கிடாய்கள் … Read more

திட்டவும், பாராட்டவும் 2 கோஷ்டி மோடிக்கு ஆதரவாக மாஜி ஐஏஎஸ்கள் திறந்த மடல்

புதுடெல்லி: ஒன்றிய பாஜ அரசை விமர்சித்து 108 மாஜி ஐஏஎஸ்.கள் கடிதம் எழுதிய நிலையில், பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்து மற்றொரு தரப்பு அதிகாரிகள் திறந்த மடல் அனுப்பி உள்ளனர். ‘பாஜ ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என 108 மாஜி ஐஏஎஸ் அதிகாரிகள் சமீபத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதற்கு பதிலடியாக ‘அக்கறையுள்ள குடிமக்கள்’ என தங்களைக் கூறிக் கொண்ட மாஜி அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு திறந்த … Read more

அஜய் தேவ்கன், அமிதாப் நடித்த 'ரன்வே 34' : முதல் நாளிலேயே திண்டாட்டம்

ஹிந்தித் திரையுலகில் இந்த ஆண்டில் வெளியான டப்பிங் படங்களான 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' இரண்டு படங்களுமே அங்கு 300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்தது. நேரடி ஹிந்திப் படங்களைக் காட்டிலும் இந்தப் படங்கள் அதிக வசூலைப் பெற்றது. இந்நிலையில் நேற்று வெளியான ஹிந்திப் படங்களான 'ரன்வே 34, ஹீரோபன்ட்டி 2' ஆகிய படங்கள் முதல் நாள் வசூலில் திண்டாடி உள்ளன. அஜய் தேவ்கன் இயக்கத்தில் அமிதாப், அஜய் தேவ்கன், ரகுல் ப்ரீத் மற்றும் பலர் நடித்துள்ள … Read more