நாடாளுமனறத்தில் ஆபாசப்படம் பார்த்த எம்.பி. பதவிவிலகல்

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மொபைல் போனில் ஆபாசப்படம் பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட எம்.பி. பதவி விலகினார். ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Neil Parish, ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் சேம்பரில் தனது தொலைபேசியில் ஆபாசப் படங்களைப் பார்த்ததை ஒப்புக்கொண்டதால் ராஜினாமா செய்தார். 2010-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள நீல் பாரிஷ் (65), மே 5-ஆம் திகதி பிரித்தானியா உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு முன், தனது சொந்தக் கட்சி உறுப்பினர்களின் அழுத்தத்திற்குப் பிறகு, தனது … Read more

ரேசன் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய குழு அமைப்பு

சென்னை: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 4 அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த குழு அனைத்து மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து தரமான பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குவதை உறுதி செய்யும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் 5-ந் தேதி முதல் பக்தர்கள் அனுமதி

திருப்பதி: திருப்பதி திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஓய்.வி. சுப்பா ரெட்டி தலைமை தாங்கி பேசினார். திருப்பதி ஏழுமலையானை வழிபட வரும் சாதாரண பக்தர்களை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் விரைவாக தரிசனத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். புயல் மழையால் சேதமடைந்திருந்த ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளது. வருகிற 5ந்தேதி ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறக்கப்படுகிறது. அன்று … Read more

இலங்கையில் தொழிலாளர் தின விழாவில் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

கொழும்பு: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, இன்று நுவேரா எலியாவில் நடைபெற்ற தொழிலாளர் தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.  இதுதொடர்பாக அண்ணாமலை கூறியிருப்பதாவது:- இலங்கையின் நுவேரா எலியாவில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) மே தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நமது பிரதமர்  மோடி அவர்கள், தமிழர்களுக்காகவும், இலங்கைக்காகவும் செய்யும் உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆயிரக்கணக்கான மலையகத் தமிழர்கள் இன்று இங்குக் கூடியிருந்தனர்.  2017ஆம் ஆண்டு … Read more

12 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் 12 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு, நீலகிரி, தேனீ, மதுரை, சிவங்கங்கை, சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

வீட்டில் திருட முயன்றதாக கூறி இளைஞரை மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு அடித்த கும்பல்; சட்டீஸ்கரில் அதிர்ச்சி

பிலாஸ்பூர்: சட்டீஸ்கரில் வீட்டில் திருட முயன்றதாக கூறி இளைஞரை மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு அடித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை, கும்பல் ஒன்று மரத்தில் தொங்கவிட்டு தலைகீழாக அடிக்கும் வீடியோ ஒன்ற வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலானதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்ட 5 பேரை கைது செய்தனர். இதுகுறித்து பிலாஸ்பூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘உதவதி கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி இளைஞர் … Read more

வேலூர் டூ சென்னை… 1.35 மணி நேரத்தில் சாலையில் பறந்து வந்த இதயம்! #HeartTransplantation

திருப்பத்தூரில் விபத்தொன்றில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம், தற்போது தானம் செய்யப்பட்டுள்ளது. வேலூரிலிருந்து சென்னைக்கு சாலை மார்க்கமாக இதயம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த மதனஞ்சேரி பகுதியை சேர்ந்த ரவி- ரோஜி தம்பதியினரின் மகன் 21 வயது இளைஞர் தினகரன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். பணி முடித்துவிட்டு கடந்த 29-ம் தேதி இருசக்கர வாகனத்தில் குடியாத்தத்தில் இருந்து பேர்ணாம்பட் வழியாக வாணியம்பாடி செல்லும் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இருசக்கர … Read more

பாலியல் வன்கொடுமை முயற்சி – ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்!

மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஓடும் ரெயிலில் இருந்து இளம்பெண் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 24 வயது இளம்பெண் மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தில் உள்ள பாகேஸ்வர் தாம் கோவிலுக்கு கடந்த 9 மாதங்களாக சென்று வருகிறார்.வேண்டுதலின் நிறைவாக கடந்த வாரமும் இக்கோவிலுக்குச் சென்றுள்ளார். கோவிலில் வழிபட்டபின் பெண் மத்தியப் பிரதேச மாநிலம் கஜுரகோவிலில் இருந்து உத்தரபிரதேசத்தின் மகோபாவுக்குச் செல்லும் பயணிகள் … Read more

உ.பி.,யில் பணியில் சேர்ந்த முதல் நாளில் நர்ஸ் தற்கொலை| Dinamalar

லக்னோ: உ.பி., மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்தவர் ரீனுகுமாரி(23) . சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய மருத்துவமனையில் செவிலியராக நேற்று (ஏப்ரல் 30) பணியில் சேர்ந்தார். ஸ்கேன் அறைக்கு மாலையில் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த ஊழியர்கள். கதவை உடைத்து சென்று பார்த்த போது, ரீனுகுமாரி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். லக்னோ: … Read more

சந்தோஷ் சிவன் என்றாலே சர்ப்ரைஸ் தான் ; மணிரத்னம் பாராட்டு

தளபதி படத்தில் இயக்குனர் மணிரத்னத்துடன் முதன்முதலாக இணைந்து பணியாற்றிய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், அதைத்தொடர்ந்து அவரது ஆஸ்தான ஒளிப்பதிவாளராகவே இப்போதுவரை தொடர்கிறார். ஒரு பக்கம் ஒளிப்பதிவாளராக இருந்து கொண்டு இன்னொரு பக்கம் இயக்குனராக மாறி படங்களையும் இயக்கி வருகிறார் சந்தோஷ் சிவன். அந்த வகையில் தற்போது அவர் மலையாளத்தில் மஞ்சுவாரியர், காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள ஜாக் அண்ட் ஜில் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளிவர தயாராகி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் … Read more