அவள் ஒரு தொடர்கதை, வீரா, சிவப்பு மஞ்சள் பச்சை – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மே 15) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்… சன் டிவிகாலை 09:30 – ஆறுமதியம் 03:00 – சிவப்பு மஞ்சள் பச்சைமாலை … Read more

300 அடி பள்ளம்… நெல்லை கல்குவாரி விபத்தில் மூவர் பலி என தகவல்

நெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரி ஒன்றில், தொழிலாளர்கள் நேற்று இரவு குவாரி பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த பாறை ஒன்று திடீரென சரிந்து விழுந்ததில், 300 அடி ஆழ பள்ளத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பள்ளத்தில் சிக்கிய 2 பேர், உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பவைக்கப்பட்டனர். மேலும், கல் குவாரியில் சிக்கியுள்ள 4 பேரை மீட்கும் பணி … Read more

“பிரதமர் மோடி ராஜதந்திரம் மிக்கத் தலைவர்..!" – முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பழ.நெடுமாறன் பேச்சு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம் சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பழ.நெடுமாறன், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பா.ம.க வழக்கறிஞர் பாலு, இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம், திருச்சி வேலுச்சாமி, கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர். அதன் பின்பு பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “பழ.நெடுமாறன் இலங்கையில் இருந்திருந்தால் மகாத்மாவாகப் புகழப்பட்டிருப்பார். பா.ஜ.க வேண்டாத கட்சியாக, கொள்கையாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனக்கு … Read more

டாஸ்மாக் கடைகளின் சுவற்றை துளையிட்டு கொள்ளை முயற்சி.. கட்டிட மேஸ்திரி கைது..!

சேலத்தில் நள்ளிரவில் இரண்டு டாஸ்மாக் கடைகளின் சுவற்றை துளையிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கட்டிட மேஸ்திரி ஒருவர் கைது செய்யப்பட்டார். சேலம் 3 ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பின்புற சுவற்றை மர்ம நபர் ஒருவர் துளையிடும் சப்தம் கேட்டு அருகில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தமிழரசு  என்பவர்  பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த மர்ம நபரை பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் … Read more

ஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவுக்கு முதல்வர் இரங்கல்: தமிழக அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

சென்னை: ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யான் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யான் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மத்திய அரசு சார்பில் நேற்று (மே 14) துக்கம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் … Read more

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழப்பு..!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்தார். குயின்ஸ்லாந்தில் சென்ற சைமண்ட்சின் கார் சாலையை விட்டு விலகி சில அடி தூரத்திற்கு உருண்டு விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்தனர். Townsville நகர் அருகே சைமண்ட்சின் கார் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காரில் சைமண்ட்ஸ் மட்டும் இருந்ததால் விபத்து எப்படி நேர்ந்தது என ஆஸ்திரேலிய போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இறப்பிற்கு கிரிக்கெட் உலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.   Source link

அரசியல் தலைவருக்கு நரகம் கிடைக்க சாபம்..! நடிகை திடீர் கைது..!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு நரகம் காத்திருக்கிறது என்று விமர்சித்த நடிகையை மராட்டிய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மராத்தி மொழிபடங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த நடிகை கேதகி சிதலே அவ்வப்போது சமூக வலைதளங்களில் அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை பதிவிடுவது வழக்கம். மகராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் கூட்டணி ஆட்சி நடந்துவரும் நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குறித்து முக நூலில் … Read more

இன்று இளங்கலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்

டில்லி இளங்கலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம் மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேர்வதற்காக அகில இந்திய அளவில் ஒவ்வொரு  ஆண்டும் தேசிய தகுதித் தேர்வான இளங்கலை நீட் தேர்வு நடத்தப்படுகிறது.   நடப்பு கல்வி ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான  நீட் தேர்வு, நாடு முழுவதும் வருகிற ஜூலை 17ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 6 முதல் இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது.  தேசிய … Read more

பஸ்சிலேயே கண்டக்டர் அடித்துக்கொலை: தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஓராண்டு கால தி.மு.க. ஆட்சியில் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் பட்டப்பகலில் கொலைகள் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகின்றன. பெண்கள், வியாபாரிகள், சிறு தொழில் புரிவோர், காவல் துறையினர், பாமர மக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வரிசையில், அரசுப் பேருந்தின் நடத்துனர், பயணியர் ஒருவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற செயல்கள் அன்றாடம் நடந்து வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு … Read more

டெல்லி தீ விபத்தில் ஏராளமானோரை காப்பாற்றிய 3 சாமானியர்கள்

புதுடெல்லி: டெல்லி மேற்கு பகுதியில் உள்ள முன்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே 3 அடுக்குமாடி அலுவலகம் நேற்று முந்தினம் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் 30 பேர் பலியகினர். 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய்வர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  தீ விபத்து நடந்த பகுதியில் வசித்து வரும் 52 வயது மம்தா தேவி என்பவர் இந்த தொழிற்சாலையில் 8 நாட்களாக பணியாற்றி … Read more